Thursday, April 18, 2019

ஓட்டு போடு போடுனு தேர்தல் கமிசன் சொன்னா போதுமா பூத் சிலிப் பெரும் பகுதி மக்களுக்கு கொடுக்கவில்லை மக்கள் வாக்குசாவடி வந்து தங்கள் பூத் மற்றும் சீரியல் எண்ணை தேடி அழைந்து வெறுத்து பலர் திரும்பி சென்றனர். பலர் பூத் சிலிப் எங்களுக்கு வரவில்லை என ஓட்டு போடவும் வரவில்லை அரசியல் கட்சிகளுக்கும் கடும் கட்டுபாடு விதித்து வாக்காளருக்கு உதவ வழியின்றி செய்துவிட்டனர். நான் இருந்த பூத்தில் சிலிப் இல்லை என்றாலும் இதற ஆவணங்கள் மற்றும் நபரை சரிபார்த்து வாக்களிக்க அனுமதித்தோம் ஆனால் அது அனைவருக்கும் சுமையாகவே இருந்தது. பல வாக்காளரின் பெயர், புகைப்படம், முகவரி மாறி மாறி இருந்தது. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனிதனி வாக்குச்சாவடி மற்றும் வாக்களித்ததை சரிபார்க்கும் இயந்திரமும் பல இடங்களில் கோளாராகவே இருந்துள்ளது சாதாரண தள்ளு வண்டிகாரர்களையும், பாத்திரம், குடம், பட்டாணி விற்கும் சிறு வியாபாரிகளை ஆய்வு செய்வது எடிஎம் பணத்த எண்ணி பார்குறதவிடுத்து ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும். சென்ற ஆண்டு வாக்களித்தவர்கள் பெயர் தற்போது இல்லாமல் போவதும், ஒருவர் பெயரே டபுள், ட்ரிபிள் எண்ட்ரி மற்றும் இல்லாத ஒருவரின் பெயர் பட்டியலில் இருப்பது போன்ற பல பிரச்சினைகளை தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்.