Tuesday, November 26, 2019

மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!!!! அவர் தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்!!!! ***************************

மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!!!!
அவர் தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்!!!!
***************************

மகாராஷ்டிரத்தில் மிக ஏழ்மையான சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிக்கோல். அந்த தோழரைக் குறித்து மனோரமா குழுமத்தின் ஆங்கில வார இதழான ‘தி வீக் இப்படி குறிப்பிடுகிறது.

‘மகாராஷ்டிரத்தில் ஜனநாயகத்தை வெக்கி தலைகுனிய வைக்கும் அரசியல் குதிரை வியாபாரம் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கோடீஸ்வரர்களான எம்எல்ஏக்கள் மத்தியில் சாதாரண மனிதரான சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிக்கோல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைபோகாத, வாக்களித்த மக்களுக்கும் வாய்ப்பளித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நம்பிக்கையான ஒரு எம்எல்ஏ மட்டுமே மகாராஷ்டிரத்தில் உள்ளார். அது தோழர் வினோத் நிக்கோல்தான்’.

இந்த செய்தி குறித்து மகாராஷ்டிராவில் வேலை செய்யும் மலையாளியான தீபக் பச்சுவின் முகநூல் பதிவு இது, “எனக்கு இதுபோன்ற மிகவும் ஆவேசமும். பெருமையும் அளித்த அரசியல் அனுபவம் அண்மை காலத்தில் ஏற்பட்டதில்லை. இப்போது இந்த காலைப்பொழுதில் என்னோடு வேலை செய்யும் நண்பர் ‘தி வீக்’ ஆங்கில வார இதழில் வெளியான செய்தியை எனக்கு செல்பேசியில் காட்டினார். அதன் தலைப்பு இவ்வாறு இருந்தது. 'Maharashtra : Why no one is trying to woo this MLA'.  (மகாராஷ்டிரா: இந்த எம்.எல்.ஏ.வை ஏன் கவர்ந்திழுக்க யாரும் முயற்சிக்கவில்லை)

            மகாராஷ்டிரத்தில் 288 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் அளித்துள்ள கணக்கு விவரங்கள் அடிப்படையில் இவர்களது சராசரி சொத்து மதிப்பு 22.4 கோடியாகும். 93 சதவிகிதம் எம்எல்ஏக்கள் கோடீஸ்வர்கள். 2014இல் இது 10.8 கோடியாக இருந்தது. அதாவது ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகரிக்கும் சொத்துக்களுடனேயே சட்டமன்றம் செல்கிறார்கள்.

ரூ.500 கோடிக்கு சொத்துகள் கொண்ட பாஜக எம்எல்ஏ பராக் ஷாதான் மிகப்பெரிய பணக்காரன். பாஜகவின் மும்பை தலைவர் மங்கள் பிரதாப் லோயாதான் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு மத்தியில் மிகவும் ஏழை, ரூ.51 ஆயிரத்து 82 மட்டுமே சொத்தாக உள்ள சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிக்கோலாதான். கட்சியின் முழுநேர ஊழியர் ஆவதற்கு முன்பு ‘வடாபாவ்’ விற்றவர் தோழர் வினோத். அதாவது சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்களில் அதிக தேவைகள் இருந்த மனிதர் இவர்தான். ஆனாலும் பணாதிபத்திய அரசியலால் அவரை நெருங்க முடியவில்லை. கோடிகள் புரளும் இடத்தில் அவரது பார்வை சொந்த அரசியலிலிருந்து விலகவில்லை. இந்த தோழரைப்பற்றிதான் மனோரமாவின் தி வீக் அவ்வாறு எழுதியது.

அலுவலகத்தின் இருக்கை அருகில் வந்து நின்ற அந்த நண்பரிடம் தலை நிமிர்ந்து பெருமிதத்தோடு நான் கூறினேன். "...because, he is our comrade and a Communist".  (ஏனெனில் அவர் நமது தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்) இதை கூறியதும் எனது கால்விரல் நுனியிலிருந்து ஒரு சிறிய குளிர்ச்சி உடம்பில் பரவி சிலிர்க்க வைத்தது.

நான் கூறியதை புரிந்துகொள்ளும் அரசியல் அறிவு அந்த தமிழ் இளைஞனிடம் உண்டு”. என பதிவிட்டுள்ளார்.

Thursday, November 21, 2019

காவல்துறை தலைவரிடம் எஸ்எப்ஐ மனு

நன்றி: தீக்கதிர்
#JusticeForFathima #IIT #Chennai
#SFI50 #SFI #theekkathir

காவல்துறை தலைவரிடம் எஸ்எப்ஐ மனு



சென்னை, நவ. 21- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அலுவ லகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு, இம்  மாதம் 9 ஆம் தேதி முதுகலை முத லாமாண்டு மனிதவியல் துறை படித்த மாணவி பாத்திமா லத்தீப்,  அவர் தங்கி இருந்த விடுதி அறை யில் தற்கொலை செய்து கொண் டார். அதற்கு காரணமான சில  பேராசிரியர்களை தனது செல் போன் நோட்ஸ் (குறிப்பில்) தெரி வித்திருந்தார் என்பதை செய்தி கள் மூலம் அறிய முடிகிறது.


மேலும் அந்த மாணவியின் தந்  தையும் துரிதமான நடவடிக்கை எடுக்கக் கோரி தங்களிடம் மனு  கொடுத்துள்ளார். தமிழகம் முழு வதும் இந்திய மாணவர் சங்கம்  உள்ளிட்டு பல்வேறு அமைப்பி னர் நீதி கேட்டு போராடி வருவது  தாங்கள் அறிந்ததே. ஆகவே விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டும்  கடந்த ஒரு வருடத்தில் 4 மாண வர்கள் ஒரு பேராசிரியர் உள்ளிட்ட  5 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை ஐஐடி நிர்வாகம் பின்பற்றுவதில்லை. இந்த நிர்வாகம் அரசியல் அமைப்புச் சட்டத்தை கூட முறை யாக கடைபிடிப்பதில்லை. பல்வேறு உளவியல் நெருக்கடி களை சிறுபான்மை மற்றும் தலித்  மாணவர்கள் சந்தித்து வருகி றார்கள். மேலும் சாதிய, மத பாலின  பாகுபாட்டை கடைபிடிக்கும் நிர்  வாகமாக சென்னை ஐஐடி இருப்  பதை அனுமதிக்க முடியாது.

எனவே இதுவரையிலான மரணங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுவதால் விரி வான விசாரணை தேவைப்படு கிறது. தமிழக மக்களுக்கு தெரி யப்படுத்தும் வகையில் வெளிப்  படைத் தன்மையிலான விசா ரணை குறித்தான விவரத்தை தாங்கள் தெரிவிக்க வேண்டுகி றோம். மேலும் கடந்த ஒரு வாரத்  தில் மட்டும் திருச்சியில் 4 மாண வர்கள் தற்கொலைக்கு முயன்று  இரண்டு மாணவர்கள் மரண மடைந்துள்ளனர். கல்வி வளா கங்களில் நிகழும் தொடர் மரணங்  களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன் , “காவல்  துறைத் தலைவர் அலுவல கத்தில் நாங்கள் அளித்த மனுவை  பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி கணேசமூர்த்தி உரிய விசாரணை நடத்தப்படும் என் றும், நிச்சயமாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று  தெரிவித்ததாகக் கூறினார்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் துணைத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி ஆகியோர் மனு கொடுத்தனர்.

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்



சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள் குறித்து மத்திய மனிதவள அமைச்சகமும் காவல்துறையும் உடனடி விசாரணை நடத்திடுக இந்திய மாணவர் சங்கம் அறிக்கை.


சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது.  கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் வரை தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியரின் தற்கொலையும் அடங்கும். ஆனால் இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையோ, நடவடிக்கைகளோ இதுவரை எடுக்கவில்லை.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பாத்திமா லத்தீப் என்ற சமூகவியல் துறை பயிலும் முதுகலை மாணவி திடீரென தற்கொலை செய்து இறந்து போனார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய காவலர்கள் சென்று விசாரணை நடத்திதி மன அழுத்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணையை முடித்துள்ளனர். ஆனால் இறந்த மாணவியின் குடும்பதார்கள் மாணவி பாத்திமா லத்திப் இணைதளங்களை ஆய்வு செய்த போது அதில் நோட் (குறிப்பேடு) எனும் செயலியில் அந்த மாணவி தற்கொலைக்கு காரணமாக இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் முதல் குறிப்பில் ஒரு பேராசிரியரின் பெயரையும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் தற்கொலைக்கு காரணமாக எழுதியுள்ளார்.

இறந்த மாணவியின் கைபேசி உள்ளிட்டு இன்னும் பிற உபகரணங்கள் காவல்துறையினர் வசம் உள்ளபோது அதை அவர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என தெரிய வருகிறது. எனவே தமிழக காவல்துறை இது குறித்து உறுதியான விசாரணை நடத்திட உத்திரவிட வேண்டும். அதேபோல் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இது குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைத்து தொடர் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடி நிர்வாகமும் பிரச்சினைகளை மூடி மறைக்காமல் மாணவர்களோடு இணைந்து மனநல ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2210094402470423&id=100004096548014