Friday, July 31, 2020

தோழர் சுர்ஜித்

15 வயதில் பிரிட்டிசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை பஞ்சாப் ஹோசியார்பூர் நீதிமன்றத்தில் ஏற்றுகிறார். துப்பாக்கி குண்டுகளிடமிருந்து தப்பினாலும் பிறகு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். நீதிபதி உன் பெயர் என்ன என்று கேட்டதும் "லண்டனை தகர்க்க வந்த சிங்" என முழங்குகிறார் தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்.

சங்கிகள் சொல்வதை போல் எல்லைக் கோடுகளையும், தேச வரைபடத்தையும் வைத்து சீன் போடுவதல்ல தேசபக்தி. உண்மையான தேசபக்தி என்பது அதற்கு உள்ளே வாழும் மக்களை நேசிப்பது; அவர்களின் நல்வாழ்வுக்காக போராடுவதுதான்.

அப்படி இந்திய தேசபக்தியின் அடையாளமாக வாழ்ந்த சுதந்திர போராட்ட மாவீரர் #மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM ன் முன்னால் பொதுச் செயலாளர் மகத்தான தலைவர் தோழர் #ஹர்கிஷன்சிங்_சுர்ஜித் நினைவு தினம் இன்று...

( 2008 ஆகஸ்ட்-1) #வீரவணக்கம்

No comments:

Post a Comment