மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்கள் எழுதிய
"நேர நிர்வாகம், நேர மேலாண்மை"
----------- பல தமிழ் நாளேடுகளில் வெளிவந்த கட்டூரை ------------------- மீள் பதிவு ------------ தோழர்.அந்தியூர் முருகேசன் ---------------------
நேர நிர்வாகம் நமக்கானதல்ல, அது ஒருசாராருக்கானது என்று நமது தோழர்கள் நினைக்கிறார்கள், இது அனைவருக்குமானதே.!
> நேர நிர்வாகத்தை கடைபிடிப்பது நமக்கும் நமது ஸ்தாபனத்திற்கும் நல்லது. இது உழைப்பை சார்ந்ததாக இருப்பதால் அலட்சியப்படுத்தும், கடைபிடிக்காமல் நழுவும் போக்கு பலரிடம் உள்ளது.
> ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது, செலவான பணத்தை சம்பாதிக்க முடியும், ஆனால் நேரத்தை திரும்ப பெற முடியாது.
> நேரத்திற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. அது எல்லோருக்கும் சரிசமமாகவே இருக்கிறது.
> சிலருக்கு எப்போதும் நேரம் கிடைப்பதில்லை (சுறுசுறுப்பு இல்லாதவர்களுக்கு), சிலருக்கு எப்போதும் நேரம் இருந்துகொண்டே இருக்கிறது (சுறுசுறுப்பானவர்களுக்கு), உம்.. நேரத்தை முறையாக செலவு செய்தவர் இ.எம்.எஸ். ஏராளமான புத்தகம் எழுதியவர். கேரளா மாநில முதல்வராக, செயலாளராக பணியாற்றியவர். அதற்கு அவருக்கு நேரம் கிடைத்தது.
தயக்கம் காரணமாக நேரம் வீணாகிறது.!
> ஒரு பிரச்சனையைப் பற்றிய விசயத்தில் நாம் தீர்மானமாக இல்லாதபோது.
> எதையும் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது நல்லது.
> எது நமக்கு விருப்பமானதோ அதற்கு நாம் அதிக நேரம் ஒதுக்குகிறோம். இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை கணக்கெடுத்தால் அது நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். உம்.. சினிமாவிற்கு செல்லும்போது நேரத்திற்கு செல்லுகிறோம். ஒருவரை சந்திக்க செல்லும்போதும் அப்படியே செல்ல வேண்டும்.
> தினம் தொடங்கும்போது தாமதமாக துவங்கினால், அதன் தொடர்ச்சியாக அன்றைய வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படும்.
பொழுது போக்கு (இளைப்பாறுதல்)
> பொழுதுபோக்கு காலவிரயம் அல்ல, உடலையும் மனதையும் ரீசார்ஜ் செய்வதற்கான ஏற்பாடு.
> கட்டுப்பாட்டுடன் பொழுது போக்கும் பொழுது 25% நேரம் மீதமாகிறது என ஆய்வுகள் கூறுகிறது.
திட்டமிடுதல்
> நாம் நினைத்த காரியத்தை முடிக்க நேரம் மிகவும் முக்கியமானது.
> முன் தயாரிப்புக்கு நேரம் செலவழித்தால் கூட்டத்தின் நேரம் குறையும்.
> கூட்டத்திற்கு அஜெண்டா போடும்போது அதனை திட்டமிட்டு செய்தால் கூட்டம் சிறப்பாக நடத்த முடியும்.
> திட்டமிட்டு வேலை செய்தால் வேலை சிறக்கும், அதோடு செலவழிக்கும் நேரமும் குறையும்.
நேர உணர்வு
> நேர உணர்வு இல்லாதவர்கள் எதிலும் பின்தங்கியவர்களாக இருப்பார்கள். நாம் எடுக்கும் வேலையின் பல்வேறு பரிணாமங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் (தினசரி மாற்றங்கள் உட்பட)
1. அளவான தூக்கம்
2. புத்துணர்ச்சி தருகிறது உடலுக்கு,
3. உறக்கத்தின் மீது அளவற்ற விருப்பம் கூடாது.
4. டிவி பார்த்தல் வியாதி தொடர் பாதிப்பு
5. எதிலும் பின் தங்கியவர்கள் அதிகமாக தூங்குவார்கள்.
நேர விரயம்
> எதிலெல்லாம் நேர விரயமாகிறது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
> நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்வது (உம்..சாவியை மறப்பது) தேடுவதிலேயே அதிக நேரம் விரயமாகிறது.
> தொலைபேசியில் அதிக நேரம் பேசுவது, தொலைபேசியை லாவகமாக பயன்படுத்திப் பழக வேண்டும்.
> எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது நேரம் விரயமாகும்.
> ஊழியர்கள் உருவாவது தடைபடும்.
அட்டவணை
> காலையில் இருந்து இரவு வரை என்ன என்ன செய்கிறோம் என்று அட்டவணை தயாரிக்க வேண்டும். இது கடினமான பணியில்லை, நம்மை ஒழுங்கு படுத்திக்கொள்ள (அலுவலகப்பணி - படிப்பு - சுய முன்னேற்றம் - சமூகப்பணி) முதலில் ஒருவாரம் வரை.
> ஒரு விசயத்தில் அதிக அக்கறை காரணமாக நேரம் விரயமாவதை தவிர்க்க இது வாய்ப்பாக அமையும்.
> சமூகப் பணிகள் - நேரம் ஒதுக்குதல்.
> குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குதல்.
> ஒருவரது ஆயுள் 60 ஆண்டுகள் - அதில் இருபது ஆண்டுகள் உறக்கம் - இருபது ஆண்டுகள் சுய தேவைகளுக்காக (குளிப்பது பல் விளக்குவது) செலவாகிறது. மீதியுள்ள 20 ஆண்டுகளே நாம் உழைக்கிறோம்.
> நாம் நிர்ணயித்துள்ள நேரத்தில் வேறு வேலைகள் வைத்துக்கொள்ளக் கூடாது.
> பல பொறுப்பில் இருக்கக் கூடிய நமது தோழர்கள் முறையான நேர பங்கீடு இல்லாததால் சரியாக செயல்பட முடிவதில்லை.
மதிப்பது
> நேரத்தை மதிப்பது தேவை, யாராவது வரச்சொன்னால் குறித்த நேரத்திற்குச் செல்வது (இங்கே குறித்த நேரத்திற்குச் செல்வது அரசியலில் மதிப்புக் குறைவாக கருதப்படுகிறது)
> மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது.
> குறித்த நேரத்திற்கு முன்பாகவும் செல்லக் கூடாது.
> முன்கூட்டியே சொல்லாமல் திடீரென்று ஒருவரை உடன் அழைத்துச் செல்வது கூடாது. வீட்டில் உணவு தயாரிக்கச் சொல்லி - பிறகு அதை தவிர்ப்பது - அவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதாகும்.
> மிகச் சாதாரண மனிதருக்கும் வேலை இருக்கும், முன்கூட்டியே தகவல் சொல்லிச் செல்ல வேண்டும்.
கவனச்சிதறல்
> ஒரு வேலையின் போது மற்றொரு வேலையின் நினைப்பில் கவனத்தை சிதறடிப்பது, இதனால் நேரம் கனிசமாக செலவாகிறது.
> அதிக கவனம் அதிக நேரம் செலவிடுதல்.
> முன்னேற்பாடு வேண்டும்.
கூட்டங்கள்
> கூட்டங்களுக்கு தாமதமாக வருவதால் அனைவரின் நேரத்தையும் எடுத்துக் கொள்கிறோம்.
> கூட்டத்தை சுருக்கமாக நடத்த வேண்டும்.
> இடையூறுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
> வேறு ஒருவர் பேசும்போது குறுக்கீடு செய்வது (விவாத நேரத்தை நீட்டிக்கும்)
> கூட்டங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்.
நேரத்தை ஏன்? சேமிக்க வேண்டும்
> நாளை என்ன செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துக்கொண்டால் சுலபமாக இருக்கும்.
> எது பெரிய வேலை? எது சிறிய வேலை? என்று வரையறுத்து, முக்கியமானது - அடுத்தபடியாக செய்ய வேண்டியது என்று பிரித்துக் குறித்துக்கொள்ள வேண்டும்.
> மற்றவர்கள் ஒத்துழைப்பை பெறுவதில் நிபுணத்துவம் தேவை.
> மனிதர்களை படிக்க வேண்டும்.
> பெரியவர்கள் / சிறியவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
> வேலைகளை பிரித்துக் கொடுக்க வேண்டும். இல்லை எனில் வாழ்க்கையிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் விடுபடுவோம்.
குறிப்பேடு (டைரி)
> முழுநேர ஊழியர்கள் இதில் சரிப்பட வேண்டும், டைரி எழுதுவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
> வேலைகளை பகிர்ந்து கொடுப்பதற்கு - நமது வேலைகளை பரிசீலிப்பது அவசியத் தேவை.
யுக்திகள்
> நினைவாற்றல் நேரத்தை மிச்சப்படுத்த முக்கிய தேவை.
> நினைவாற்றல் நம்மை ஏமாற்றும் தன்மையுடையது (டைரி, பேனா, காகிதம் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்)
> நமது வேலைகள் தோல்வியுறுவது ஏன்?
> யதார்த்தமாக இல்லாததால், இதனால் நடைமுறை சிரமம் உருவாகும்.
நேரவெறி
> மிக அதீதமாக நேரத்தை கடைபிடித்தால் நம்மை மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்கும் (நேர நிர்வாகத்தின் எதிர்விளைவு என்பது)
> நமது அணுகுமறைகளில் மாற்றம் தேவை மற்றவர்கள் நேரத்திற்கு நாம் காவலர்கள் அல்ல,
> நேரத்தை நாம் நிர்வகிக்க வேண்டும், நேரம் நம்மை நிர்வகிக்க கூடாது.
> நேர நிர்வாகம் கொள்கையாக இருக்கலாம், பிடிவாதமாக இருக்கக் கூடாது.
> நாம் எதற்காக நேர நிர்வாகத்தை கடைபிடிக்கிறோம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
> வளைந்து அனுசரித்து செயல்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
> எதிர்பாராத சம்பவங்களுக்காக நேரத்தை சமாளிப்பதே முக்கிய நோக்கம்.
படிப்பதை நினைவில் வைப்பது
> புத்தகங்களை தேர்வு செய்து படிப்பது, செய்தித்தாள் படிக்கிறீர்களா?
> பயணங்களை படிக்க பயன்படுத்துவது (கண் கெடும் என்றால் கேசட்டில் பதிவு செய்து கேட்டல்)
> காத்திருக்கும் நேரங்களில், ஆஸ்பத்திரியில், உயர் அதிகாரிகளுக்காக காத்திருக்கும் நேரங்களில் ரயில் பயணங்களில்.
> மூன்றில் ஒரு பகுதியை தான் பயன்படுத்துகிறோம்
> வாய்விட்டு படித்தால் வாசிப்பின் நேரம் குறையும்.
-கே.தங்கவேல்
CPIM தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர், தமிழக சட்டமன்ற முன்னால் உறுப்பினர், திருப்பூர் தெற்கு தொகுதி.
#CPIMTamilnadu #cpimsalemnorthcity