இந்தியாவில் சாதி ஒழிப்பு
இந்திய சமூகத்தின் சாதிய கட்டுமானம் உலகின் மற்ற நாடுகளின் ஏற்றதாழ்வைவிட வித்தியாசமானது. வீழ்த்த முடியாததல்ல. இன்றைக்கும் கேரளத்தில், மார்க்சிஸ்டுகள் ஆண்டவரையிலான மேற்கு வங்கத்தில் சாதியம் எந்தளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்று காண முடியும். அதே போல் பொதுவுடைமை இயக்கம் வலுவாக உள்ள பகுதிகளில் சாதியத்திற்கெதிரான வலுவான போராட்த்தின் வரலாறு பதிவு செய்யபட்டுள்ளது, இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்தும் வருகிறது.
சாதிய கட்டமைப்பு தகர்ப்பது வர்க்க போராட்டத்தோடு இணைந்த பகுதி. கல்வி, வேலை, சம உரிமை, சமநீதி, சுயமரியாதைக்கான போராட்டத்தோடு இந்தியாவின் பிரதான முரண்பாடான முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இந்திய உழைப்பாளி மக்களின் வர்க்க போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
இன்று வரை சாதியம் கெட்டிபட்டிருப்பதற்கு இந்திய நிலவுடைமையை ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான அல்லது வலிகாத மாதிரி தடவிக்கொடுத்து பாதுகாத்த அரசுகளே காரணம். அம்பேத்கர், பெரியார், ஜோதிராவ் பூலே உள்ளிட்ட இந்திய சமூக விடுதலைக்கான போராடத்தின் மிகமுக்கியமான அளுமைகளை மார்க்சிஸ்டுகள் உள்வாங்கியே உள்ளோம்.
நிலச்சீர்திருத்தம், விவசாய கூலித்தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிலத்தை அடிப்படை உரிமையாக்குவது, இன்றைய கார்பரேட் வேளாண் சட்டங்களை பின்வாங்க செய்வது, பெரும் எண்ணிகையில் உள்ள முறைசாரா கூழித்தொழிலாளிகள், சிறுகுறு ஆலைகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற வேலைசெய்யும் தொழிலாளர் உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு, குடியிருப்பு, அனைத்து வகையான தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டங்களை நடத்த வேண்டும்.
பன்னாட்டு நிதிமூலதனத்தை இந்தியாவை சூரையாட திறந்துவிடுவதோடு, உலக ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் செய்து கொண்டே இந்தியாவில் மிகப்பெரிய சுரண்டலில் ஈடுபடும் இந்திய பெரும் முதலாளின் நலன்களை பாதுகாக்கும் கொள்கை, கட்டமைப்பு ஏற்படுத்திக்கொடுத்து அரசையும் வழிநடத்தி வரும் பிஜேபி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
மதங்களுக்கிடையே, இனங்களுக்கிடையே, மாநிலங்களுக்கிடையேயான முரண்பாடுகளை தூண்டிவிடுவது அவர்களின் வாழ்வாதர கட்டமைப்பான பொருளாதார நிலைமையை உணரவிடாமல் மழுங்கடிக்கிறது. எங்கெல்லாம் அடிப்படை கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் போராட்டம் வெடிக்கிறதோ அங்கெல்லாம், மதக்கலவரம், சாதியக்கலவரம், அரச பயங்கரவாதம் நடப்பதை புரிந்து கொண்டால் வானத்தை பார்த்து அட்டை கத்தி வீசும் பகில்வான்களின் இலட்சணம் புரியும்.
சினிமா வசனங்களை பேசிக்கொண்டு அடையாளங்களை முன்னிருத்தி ஆளும் வர்க்க சிந்தனைகளை அடைகாத்து வருவது எந்த வகையிலும் சாதியை ஒழிக்க முடியும். கேரளத்தின் மாற்றங்களை பொருத்துகொள்ள முடியாத சில RSS சங்கி NGOகள் கதரல் அங்குள்ள உழைக்கும் மக்களுக்கு புரியும்.
இந்தியாவில் கம்யூனிசம் பொருந்தாது, மார்க்சியம் தேவைப்படாதென அரதபழசான சிந்தனையில் உளறும் அரைவேக்காடுகளின் செயல்பாடுகள் RSS பாஜகவின் காவிகார்பரேட் திட்டங்களுக்கு சாமரவீசும்.
-க.நிருபன் சக்கரவர்த்தி
#marxism #communism #LDF #Ambedkar #Periyar #phule
No comments:
Post a Comment