உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலென்ஸ்கி அட்டை கத்தி வீச்சை நிறுத்தி மக்கள் நலனில் முடிவெடுக்க வேண்டும்.
உக்ரைனின் முன்னால் நகைச்சுவை நடிகரும் இந்நாள் அதிபருமான வொலாடிமிர் செலென்ஸ்கி அந்நாட்டின் செளகிதாராக பன்னாட்டு ஊடகம்மூலம் விளம்பரம் செய்து அரசியலற்ற அரசியல் என்று மக்களை ஏமாற்றி வந்த ஒரு வலதுசாரி அரசியல்வாதியாவர்.
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சும்மா இருந்தா ரஸ்யாவை நேட்டோ பேச்சை கேட்டு சொரிந்துவிட்டார். இன்றைக்கு இவ்வளவு பெரிய விளைவுக்கு பிறகும் பதிலடி கொடுப்போம் என காமெடி செய்து வருகிறார்.
1. மக்கள் நலனை கருத்தில் கொண்டு இரஸ்ய அதிபரோடு பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிக்க வேண்டும்.
2. நேட்டோ போன்ற நாசகர கூட்டணியில் இணைய மறுப்பதாக அறிவிக்க வேண்டும்.
3. ஜோபைடன், போரிஸ்ஜான்சன் சுடும் வடைகளை இனி நம்பமாட்டேன் என அறிவிக்க வேண்டும்.
4. இரஸ்ய அரசும், புடினும் உக்ரைன் மக்கள் நலன் கருதி இராணுவ நடிவடிக்கையை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த தயாராக வேண்டும்.
#peace #RussiaUkraine #NATO #russia #ukraine #usa
No comments:
Post a Comment