Thursday, May 19, 2022

''உக்ரைனில் என்ன நடக்கிறது?''தோழர் இ.பா. சிந்தன் எழுதியுள்ள நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

''உக்ரைனில் என்ன நடக்கிறது?''
தோழர் இ.பா. சிந்தன் எழுதியுள்ள நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று தென்சென்னை கிண்டி சிஐடியு அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் 
தோழர்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.பாக்கியம், மாவட்டச்செயலாளர் தோழர் இரா.வேல்முருகன், பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜ், தோழர் சிராஜ், கல்விக்குழு தோழர்  சித்ரகலா, எஸ்எப்ஐ மாவட்டச்செயலாளர் ரா.பாரதி மற்றும் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் பெற்றோரும், திரளான தோழர்களும் பங்கேற்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாபவெறியும், உலகை பிரித்தாலும் சூழ்ச்சி குறித்தும், நேட்டோ விரிவாக்கத்தின் சதி, சிரியா, ஏமன், பாலஸ்தீனம் உள்ளிட்ட தேசங்களை கபளீகரம் செய்தது குறித்தும். குறிப்பாக உக்ரைன் அதற்க்கு பின் இருக்ககூடிய சர்வதேச அரசியல் குறித்து இந்நூல் ஆழமான விவரங்களையும், தரவுகளையும் கொண்டுள்ளது. 

உக்ரைனை எப்படி நேட்டோ சதிகார கும்பல் வலதுசாரி தேசியவெறி, இனவாதத்தின் மூலம் அம்மக்களை பிளவுபடித்தும் வேலை செய்தது, ஜனநாயகத்தை படுகொலை செய்தது, கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்தது, இரஸ்யர்கள் உள்ளிட்டு 15,000 மக்களை கொன்று குவித்தது மற்றும் கம்யூனிச அடையாளங்களை, 5,000 மேற்பட்ட லெனின் சிலை தகர்த்தது பற்றியும் அதற்குள் இருக்ககூடிய கம்யூனிசத்திற்க்கு எதிரான முதலாளித்துவ வன்மத்தையும், மேலும் தேவையான சமூக அரசியல் காரணங்களோடு இன்றைய உக்ரைன் சூழலை எளிமையாக புரியும் வண்ணம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். 

இரஷ்யாவை மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனை கட்டுபாட்டில் வைப்பதற்கான காரணங்களையும், மக்கள் சீனத்தின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா செய்யும் சூழ்ச்சி வலைகளையும் தெளிவாக எடுத்துரைகிறார். கூடுதலாக சிரியா, ஏமன் நாடுகளை அழித்தொழிக்க நடந்துவரும் இரக்கமற்ற போர்களையும் விளக்கியுள்ளார். 

உலகின் எந்தவொரு போரும் உழைப்பாளி மக்களுக்கு, மனிதகுலத்திற்க்கு எதிரானதே பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்திற்கான சண்டையில் பலியாவது என்றும் அப்பாவி மக்களே. அமைதியான அனைவருக்குமான உலகம் அமைந்திட வர்க்க பேதமற்ற சமூகம் அமைந்திட இத்தகைய நூல்கள் பயன்பெறும்.

அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் சர்வதேச அரசியல் சூழலை தற்கால நிலைமையோடு புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. நமது பாரதி புத்தகாலயம் நேர்த்தியாக வடிவமைத்து ரூபாய் 100 விலையில் வெளியிட்டுள்ளது. அனைவரும் வாங்கி பயன்படுத்தி கொள்ளவும்.

#ukrainian #peace #NATO #Rusia #capitalism #communism #socialism #BharathiPuthakalayam

Wednesday, May 18, 2022

பாக்கியம்: உக்ரைனில் என்ன நடக்கிறது? அ.பாக்கியம்.

பாக்கியம்: உக்ரைனில் என்ன நடக்கிறது? அ.பாக்கியம்.:                    எழுத்தாளர் இ.பா. சிந்தன் எழுதிய 112 பக்கங்களைக் கொண்ட புத்தகம். பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது. கடுக...

Wednesday, May 11, 2022

இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர செயல்..அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் படுகொலை ..

இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர செயல்..
அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் படுகொலை ..
உலக ரெளடி அமெரிக்காவின் கைகூலி 
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஷிரின் அபு அக்லாவின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இதனை அல் ஜசீரா உள்ளிட்ட பத்திரிகைகள் இஸ்ரேல் ராணுவத்தின் இத்தகைய அடாவடித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கும் என தெளிவாகிறது.