பொள்ளாச்சி கொடூரத்திற்க்கு எதிராக SFI தலைமையில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. கைது செய்யப்பட வேண்டிய 20 மேற்பட்ட கயவர்கள் உல்லாசமாக சுற்றி வருவதை தடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அதிமுக அரசியல் புள்ளிகள், பொள்ளாச்சி ஜெயராமன், அவரின் மகன்களை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகள் வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு தம்பி செல்லாத வகையில் பாஸ்போர்ட் முடக்கம், போலீஸ் அலார்ட் செய்ய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் பொள்ளாச்சி எஸ்.பி பாண்டியராஜன்,
டி.எஸ்.பி ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் பணியிடை மாற்றமாவது செய்யவேண்டும். சுதந்திரமான விசாரணை அப்போது தான் நடைபெறும்.
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதால் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்/கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்னின் வழக்குரைஞர்கள், சகோதரர் உள்ளிட்டு குற்றவறவாளிகளுக்கு எதிராக வலுவாக செயல்படும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அரசியல், மதம், சாதி, ஊர் உறவினர் நெருக்கடி இல்லாத வகையில் நியாயமான வழக்குரைஞர்கள் கூடுதலாக இதில் பொதுநல அடிப்படையில் ஆஜர் ஆக வேண்டும்.
பாதிக்கப்பட்ட 273க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்திடும் வகையில் பெண்களின் பெயர் முகவரி அனைத்து இரகசியமும் பாதுகாக்கப்படும் வகையில் புகாரை பெறும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்திடாத வகையில் சைபர் குழு மூலம் பாதுகாப்பதை உறுதி செய்து. குற்றவாளிகளிடமுள்ள அனைத்து வீடியோக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
உள்ளிட்ட நியாயமான நடவடிக்கைகளை அரசு செய்யாமல் எருமை மாட்டில் பெய்த மழையாக சொரணையற்று இருக்கும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை.
க.நிருபன் SFI
14.03.2019
#Voice4PollachiVictim
No comments:
Post a Comment