5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அறிவிப்பை இரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி இயக்குநரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மனு. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு துணை கன்வீனர் ர.சுர்ஜித், மாநில துணைசெயலாளர் ஆ.இசக்கி நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தீ.சந்துரு, மாவட்ட நிர்வாகிகள் லோ.விக்னேஸ், சங்கரய்யா, அருண், இம்ரான் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டார்.
மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை 2019 அறிக்கை கருத்து கேட்கப்பட்டு அதன் இறுதிபடுத்தப்பட்ட ஆவணம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு சரத்துகள் வரைவு அறிக்கையில் எதிர்க்கப்பட்டது மீண்டும் எந்தவித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இக்கல்விக் கொள்கை ஏற்புடையதல்ல என்ற வகையில் கடுமையான எதிர்பை மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களும், மாணவர்களும் முன்வைத்து தற்போதுவரை பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் மிக முக்கியமானதாக 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை எட்டு பருவத் தேர்வை (செமஸ்டர்) நடத்துவதாக கூறியிருப்பதையும் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தமிழக அரசு இதே கால கட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதலே நடைபெறும் எனக்கூறியது. தமிழக மக்களும் மாணவர்களும் இவ்வறிவிப்பை எதிர்த்து போராடியதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் நடைமுறைபடுத்துவோம் இந்தாண்டு பொதுதேர்வு இல்லை என அறிவித்தது.
ஆனால் 22.10.2019 தேதியிட்ட அரசாணையில் வரும் 2019-20 கல்வியாண்டு முதலே 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என அறிவித்துள்ளது. மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க தேர்வுமுறை மிக முக்கிய காரணம் என உயர்நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் இது துவக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாக அமையும். அவர்களின் வாழ்வியல் சார்ந்த நெருக்கடியை மன உளைச்சலை மேலும் அதிகரிக்க செய்யும். எனவே இந்த அறிவிப்பை மாணவர்களின் நலன் கருதி திருப்ப பெற வேண்டும் என தமிழக மாணவர்களின் சார்பில் மனு அளிக்கபட்டது.
#SFI #SFI50 #FeesMustFall
No comments:
Post a Comment