Sunday, December 15, 2019

இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு நாடு

இந்தியா ஒரு "மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு நாடு" என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.

ஆனால் மதவெறிபிடித்த பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவோ (Citizen Amendment Bill) இந்தியாவில் வாழும் தமிழருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இனி இந்திய தேசத்தில் குடியுரிமையில்லை. இந்திய தேசம் என்பது இந்துகள் தேசம் இந்து மதம் சாராதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சொல்கிறது.

தேச விடுதலையின் போது சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களில் 30% பேர் இஸ்லாமியர்கள் என வரலாறு சொல்கிறது.
மத்திய பிஜேபி அரசோ தற்போதிருக்கும் 14.2% இஸ்லாமியர்களையும் தேசத்தைவிட்டு வெளியே துரத்தியடிக்க துடிக்கிறது.

60 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளை நாடற்றவர்களாக மாற்றியுள்ளது.

இந்த அநீதியான சட்டத்தை ஒரு போதும் இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளாது.

கல்வி, வேலை, காசு அனைத்தையும் பறித்துவிட்டு இனி நாடும் உனக்கு சொந்தமில்லை என நம் மக்களை அனாதைகளாக்கும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி அரசை தூக்கியெறிவோம்.

நம் இந்திய தேசத்தில் இமயம் முதல் குமரி வரை குஜராத் முதல் அஸ்ஸாம் வரை வாழும் அனைத்து மக்களையும் இந்திய குடிமக்களாக எந்தவித வேறுபாடுகளுமின்றி உடனே அறிவிக்க வேண்டும் என கோரி அனைவரும் வாருங்கள் களத்தில் இறங்குவோம்.

நம் தேசத்தை காக்க அனைத்து மாணவர்களும் வாருங்கள் ஒன்று கூடுவோம் வென்று முடிப்போம்.

வாழ்க இந்திய தேசம்!
வளர்க மக்கள் ஒற்றுமை!!

இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு.

#AgainstCAB
#RejectCAB
#StudentsagainstCAB
#SFIagainstCAB
#SFItamilnadu
#SFI #SFI50

No comments:

Post a Comment