Tuesday, April 20, 2021

பிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ வழியில் கியூப மக்களின் உணர்வோடு கலந்த மகத்தான தலைவர்

பிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ வழியில் 
கியூப மக்களின் உணர்வோடு 
கலந்த மகத்தான தலைவராக, 
சக தோழனாக மக்களோடு 
ஒன்றிணைந்து செயலாற்றி வரும் 
தோழர் மிகைல் டயஸ் கெனல் 
கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் 
முதன்மை செயலாளராக
தேர்தெடுக்கப்படுள்ளார். 

ஏப்ரல் 16 முதல் 19 வரை நடைபெற்ற
8வது கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 
மாநாட்டில் 150 பேர் கொண்ட 
மத்திய குழுவும் 14 பேர் கொண்ட பொலிட்பீரோவும் 7 பேர் கொண்ட 
செயற்குழுவும் தேர்வு 
செய்யபட்டுள்ளன.
சோசலிச கியூபாவின் புரட்சிகர
பயணத்தை முன்னெடுப்பதோடு
புதிய மாற்றங்களையும்
நவீன வளர்ச்சி பணிகளும் 
முன்னெடுக்கவுள்ளதாக 
புதிய தலைமை அறிவித்துள்ளது.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின்
தனித்தன்மையை பாதுகாப்பதோடு
புரட்சிகர கட்சியாக தொடர்ந்து 
செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் சீனத்தின் தலைவர் 
தோழர் ஜிஜின்பிங்,
கொரிய மக்கள் ஜனநாயக
குடியரசின் தலைவர்
தோழர் கிம் ஜோங் உன்
மற்றும் ஏனைய சோசலிச 
நாடுகளான வியட்நாம், லாவோஸ்
உள்ளிட்ட உலகின் அனைத்து
நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும்
பல்வேறு முற்போக்கு ஜனநாயக
இயக்கங்களும் வாழ்த்து 
தெரிவித்து வருகின்றன. 
உலக மக்களின் நம்பிக்கை ஒளியாக 
விளங்கி வரும் சோசலிச கியூபாவின் 
புதிய தலைமைக்கு வாழ்த்துகள்.

#Cuba #Communist #Castro 
#socialism #MiguelDiazCanel

No comments:

Post a Comment