Tuesday, December 28, 2021

பள்ளிக்கூடமா அடிமைகளின் கொத்தளமா..😡

பள்ளிக்கூடமா அடிமைகளின் கொத்தளமா..😡 

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்து வந்ததாக தனியார் பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்.
*தினத்தந்தி செய்தி 

கோவை கணபதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் சீருடை வழங்கப்பட்டது. அதனை வாங்கிகொண்ட பிளஸ்-1 மாணவர் வீட்டுக்கு சென்று அதனை அணிந்து பார்த்தார்.

அப்போது சட்டை பெரிதாக இருந்தது. இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு கூறினார். அவரும் சட்டையை தைத்து கொடுத்தார்.

அந்த சட்டையை அணிந்து கொண்டு பிளஸ்-1 மாணவர் வழக்கம்போல இன்று காலை பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது வகுப்புக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் மாணவரை எழுப்பி எதற்காக இவ்வளவு இறுக்கமாக சட்டை அணிந்து உள்ளாய் எனக்கேட்டார். மாணவரும் சட்டை ரொம்ப பெரிதாக இருந்தது. அதனால் தான் என்று தெரிவித்துள்ளார்.

மாணவரின் பதிலில் திருப்தி அடையாத ஆசிரியர் இறுக்கமாக சட்டை அணியக்கூடாது என கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாத மாணவர் அலறி சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவரை மீட்டனர். இதில் மாணவருக்கு கை, காது, முதுகு உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவரை உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து மாணவரின் பெற்றோர் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

..........

தன் நிலத்தில் தன் உற்பத்தி இயந்திரத்தில் வேலை பார்க்கும் ஒரு மனிதனை அடிமையாக பாவிக்கு அருவருப்பான எஜமான மனநிலையே இதற்கு காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்க கூடாது என சட்டம் போட்டு சில தனியார் பள்ளிகளில் ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் இப்படியான அரைவேக்காட்டு முட்டாள்தனம் நடந்து வருகிறது.

சமீபத்தில் ஆசிரயர்களால் வன்கொடுமைக்கு உள்ளாகும் மாணவிகள் குறித்து வரிவான எதிர் மனநிலை தமிழகம் முழுவதும் எழுந்தது. தன்னிடம் படிக்க வரும் மாணவர்களை அடிப்பது, துன்புறுத்துவது, வசைபாடுவது, சீண்டல்களுக்கு உள்ளாக்குவது பெரிய வேறுபாடில்லை..

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...