Friday, February 25, 2022

உக்ரைன் பிரச்சினையில் கொம்புசீவும் மேற்குலகநாடுகள்

உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி இராணுவ உடை தரித்து களத்தில் இருப்பது போன்ற புகைப்படம் உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாக காட்டப்படுகிறது.
முதலாளித்துவ ஊடகங்கள் 'மாவீரன், தாய்நாட்டை காக்க களத்தில் இறங்கிவிட்டார்''' என்றெல்லாம் பராகிரமத்தை அள்ளிவிடுகிறது.

அமைதிநாடி பேச்சுவார்த்தை வேண்டும் என நாம் விரும்புவதற்கும் மேற்குலக நாடுகளின் கொம்புசீவுவதற்குமான வித்தியாசத்தை தெளிவாக உணர முடிகிறது.

ஒரு காமெடி நடிகரை உசுபேத்தி மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்த பன்னாட்டு ஊடகங்கள் முயற்சிக்கிறது.

இந்த பிரச்சினையின் அடிநாதமே அமெரிக்கா, நேட்டோவை தவிர்த்து பார்த்தால் உக்ரைனிடமிருந்தும் துவங்குகிறது. 15,000 இரஸ்ய இனத்தவரை படுகொலை செய்ததுவரை பொறுத்திருந்து பார்த்து அமைதிக்கும் ஒரு அளவுண்டு என சொல்லியே வெறுப்பின் உச்சத்திலிருந்து ரஷ்யா இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

எனவே இரஷ்ய நிபந்தனைக்கு உடன்பட்டு உக்ரைன் ஆயுதங்களை போட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். 

இறுதிவரை எடுத்து செல்ல வேண்டும் என்ற அமெரிக்க நேட்டோவின் சூட்சமத்திற்கு உக்ரைன் இரையாகிவிடக்கூடாது. 

அமெரிக்கா, பிரிட்டன் ஏற்கனவே தூண்டிவிட்டு ஓடி ஒழிந்த கதையை உணர்ந்துதான் மனநொந்து பேசினார் ஜெலன்ஸ்கி. இனிமேலாவது தன் உண்மை சகோதரன் ரஷ்யா என்பதை உணர வேண்டும். நாம் ஏன் தனித்துவிடப்பட்டோம் என்பதை தார்மீகமாக உணரவேண்டும். 

#peace #RussiaUkraine #RussiaUkraineConflict #NATO #ukraine #negotiation #russia

Thursday, February 24, 2022

உக்ரைன் இரஷ்ய பிரச்சினை ஓநாய்களின் கவலை

உக்ரைன் மீதான ஓநாய்களின் கவலை

ஆடு நனையிதேனு ஓநாய் கவலைபட்ட கதையாக ஜோபைடனும், போரிஸ் ஜான்சனும் தனது நீலிக்கண்ணீரை உதிர்த்து வருகிறார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக இரஷ்யாவின் எல்லாவிதமான பொருமையையும் காலில்போட்டு மிதித்த நோட்டோவும், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய கூட்டணியும் சாத்தான் வேதம் ஓதிய கதையாக அமைதி, சமாதானம் குறித்து வார்த்தைகளை உதிர்த்து வருகிறது.
உலக ரெளடி வாய்சொல் வீரர்கள் தங்கள் அடாவடித்தனத்தின் நவதுவாரங்களை மூடிக்கொண்டு சமாதான கொடியை தற்போது பறக்கவிடுவது உள்ளபடியே இரத்தம்குடிக்கும் ஓநாய்களின் அகிம்சை பிரசங்கமாகவே இருக்கிறது. நமது நண்பர்கள் போர் வேண்டாம் என்பதற்கும் இந்த இரத்த காட்டேரிகளின் போர்க்கு எதிரான ஓலத்திற்க்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் உள்ளது. 
ஆனால் ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறுபுழுவாயினும் குச்சியால் சீண்டும் போது அதுவும் சிறு எதிர்பாய் துள்ளும் என்பதே போன்றே இரஷ்யா போன்ற யானையை அங்குசத்தால் கண்ணில் குத்தினால் அது என்ன செய்யுமோ அதுவே தற்போதைய நடவடிக்கை. ஓநாய் ஒரு மானை வேட்டையாடும் போது சில நேரங்களில் உந்தி தள்ளியோ தனது கால்களால் முகத்தில் உதைத்தோ சில நேரங்களில் மான் தப்பிப்பதை போல் தான் உலக மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து தன்னைவிடுவிக்க இரஷ்யா முயன்றுள்ளது. என்ன நேட்டோ ஓநாய்கள் இரஷ்யாவை மானாக கருதியிருக்க கூடாது. இரண்டாம் உலகப்போரில் உலக மக்களை காக்க மகத்தான செம்படை வீரர்கள் இரண்டு கோடி பேர் உயர் தியாகம் செய்த நாடு என்பதை மறந்திருக்க கூடும்.
வியட்நாம், ஆப்கான், ஈராக், ஈரான், லிபியா, ஆப்ரிக்க, லத்தின் நாடுகளை அமெரிக்க நேட்டோ கும்பல் வேட்டையாடிய போதும் நம் நண்பர்களால் போர் அமைதி குறித்து பிரசங்கம் செய்யதான் முடிந்தது ஒருவேளை நமது கையில்  திருப்பி தாக்குவதற்கான ஆயுதம் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதாக புரிந்து கொண்டால் இன்றைய பிரச்சினைகளை நாம் சரியாக அனுக முடியும்.
உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் பரவலை தடுக்கவும், சோவியத் விரிவாக்கத்தை தடுக்கவும் ஏற்படுத்தபட்ட இரத்தவெறி ஓநாய்களின் கூட்டணிதான் நேட்டோ கூட்டணி. 1991 ஆம் ஆண்டே சோவியத் சிதைவு, சோசலிச பின்னடைவுக்கு பின் இந்த கூட்டணியை தார்மீகமாக கலைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதை கலைக்காமல் உலக ஏழைநாடுகளை கபளீகரம் செய்து வருகிறது.
மேலும் தற்போது இரஷ்யாவில் இருப்பது ஒரு முதலாளித்துவ ஆட்சி. புடின் ஒரு வலதுசாரி, உலக முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான போட்டி மோதலில் தான் இத்தகைய விளைவுகள் அரங்கேறி வருகிறது. ஆனால் உலகின் US, UK, ஆஸ்திரேலியா போன்ற மோனோபோலி ஒருதுருவ முதலாளிதுவ அரசியலுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையை நாம் கவனமாக கவனிக்க வேண்டும்.

லிபியா, ஈரான், ஈராக், ஆப்கான் போன்ற எத்தனையோ அரசுகள் இடதுசாரி அரசல்ல, அவர்கள் தங்கள் நாடளவில் ஒரு முதலாளிதுவ அரசாகவோ அல்லது ஓரளவு ஜனநாயக அரசாகவே இருந்து வந்தது. பிறகு ஏன் இந்த நேட்டோ கூட்டணி அங்கு படைகளை அனுப்பி சூரையாடியது. அதுதான் முதலாளித்துவத்தின் சாபக்கேடு ஒரு சந்தையில் நான்மட்டுமே ஏகத்துவ வியாபாரியாக இருக்க வேண்டும் என்ற நியதியை முதலாளித்துவ கட்டமைப்பு உந்தி தள்ளிக்கொண்டே இருக்கும். அல்லது சந்தையில் ஏற்கனவே உள்ள பெரும் வியாபார முதலாளிகள் சிறுகுறு விற்பனையாளர்களுக்கு எதிராக கொண்டிருக்கும் கூட்டணியே இந்த மேற்குலக கூட்டணி. எண்ணெய் வியாபரத்தில் கொழிக்கும் இலாபத்திற்காக நாவில் எச்சில் ஊர கைபற்ற வந்ததே அத்தகைய தாக்குதல்கள்.
இரஸ்யா, சீனா போன்ற நாடுகள் முதலாளித்துவ போட்டியில் கோலோச்சுவது பழைய முதலாளித்துவ நாடுகளுக்கு உள்ளபடியே எரிச்சலை ஏற்படுத்த செய்யும். எனவேதான் இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான பல உள்குத்து வேலைகளை மேற்கத்திய கூட்டணி படுகேவலமாக செய்து வருகிறது. அதற்கு ஆதரவான நாடுகளை தொம்சம் செய்து சிதைத்து வருகிறது. நியாயமான இலாபம் என்ற ஒன்று எப்படி கிடையாதோ அதேபோலவே முதலாளித்துவ கட்டமைபிற்குள் முதலாளிதுவ நாடுகளுக்குள் நியாயமான கூட்டணி ஒன்று இருக்கவே முடியாது. தங்கள் அளவில் கொள்ளையடித்து சுரண்டி கொழுக்க வேண்டும்  என்பதே ஒரே நியதி. மான்களை வேட்டையாட ஓநாய்களும், கழுதைபுலியும் செய்துகொள்ளும் ஒப்பந்தமே நேட்டோ, ஜி7 போன்ற கூட்டணி.
உக்ரைனில் நடப்பது ஒரு காமெடி நடிகர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கியின் இனவாத நேட்டோ ஆதரவு அரசு, மேற்கத்திய நாடுகளோடு உக்ரைன் இணையக்கூடாது இரஷ்யாவோடு நட்புறவு பேண வேண்டும் என அந்நாடுமுழுவதும் குரல் எழுப்பபட்டாலும். கிழக்கு (டான்பாஸ்) பகுதியில் வலுவான போராட்டங்களும் நடந்து வந்தது. போராடுபவர்களை இராணுவத்தை கொண்டு கடுமையாக ஒடுக்கியதோடல்லாமல் 16,000 இரஷ்ய இனத்தவரை படுகொலை செய்துள்ளது. இதற்கு மேலும் ஆதரவாக மேற்கத்திய நேட்டோ கூட்டணி அபாயகரமான ஆயுதங்களோடு உக்ரைனில் இறங்கியுள்ளது எந்தவகையில் நியாயமாகும். நாளை இதேபோல் நேட்டோ ரெளடிகள் ஐம்பாதாயிரம் துருப்புகளை பங்களாதேசில் இறக்கினால் நாம் என்ன செய்வமோ அதைதான் தற்போது இரஷ்யா செய்து வருகிறது. 
மேலும் பேச்சுவார்த்தைகான எல்லா முகாந்திரத்தையும் படுகேவலாகம காலில் போட்டு மிதித்துவிட்டு பதில்நடவடிக்கையின் போது கோரஸ்பாடுவது சரியல்ல காரணங்களை கலைவதே விளைவுகளை தடுக்க முடியும். 

இராணுவ தளவாட தாக்குதல் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் அப்பாவி மக்கள் இதில் பாதிக்கப்படுவதை ஏற்க்க முடியாது எனவே, அமைதி நிலவ வேண்டும். அட்டைகத்தி மாவீரர்கள் ஜோபைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்கள் பிரச்சனையில் எண்ணெய் ஊற்றாமல் அவர்கள் செய்தது தவறென ஒப்புக்கொண்டு இரஷ்யாவோடு அமைதி பேச்சு நடத்த வேண்டும். 

பன்னாட்டு ஊடகம் நேட்டோ, அமெரிக்க எலும்புதுண்டுகளுக்காக ஒரு சார்பு செய்திகளை வாசிக்கலாம் நியாயமான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மூன்றாம் உலகப்போர் என உதார்விடாமல் உண்மை நிலையை கொண்டு சேர்க்க வேண்டும்.

க.நிருபன் சக்கரவர்த்தி

#peace #RussiaUkraine #NATO #usa #russia #RussiaUkraineConflict #ukraine

நேட்டோ சதி

உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலென்ஸ்கி அட்டை கத்தி வீச்சை நிறுத்தி மக்கள் நலனில் முடிவெடுக்க வேண்டும்.

உக்ரைனின் முன்னால் நகைச்சுவை நடிகரும் இந்நாள் அதிபருமான வொலாடிமிர் செலென்ஸ்கி அந்நாட்டின் செளகிதாராக பன்னாட்டு ஊடகம்மூலம் விளம்பரம் செய்து அரசியலற்ற அரசியல் என்று மக்களை ஏமாற்றி வந்த ஒரு வலதுசாரி அரசியல்வாதியாவர்.

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சும்மா இருந்தா ரஸ்யாவை நேட்டோ பேச்சை கேட்டு சொரிந்துவிட்டார். இன்றைக்கு இவ்வளவு பெரிய விளைவுக்கு பிறகும் பதிலடி கொடுப்போம் என காமெடி செய்து  வருகிறார்.
1. மக்கள் நலனை கருத்தில் கொண்டு இரஸ்ய அதிபரோடு பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிக்க வேண்டும். 

2. நேட்டோ போன்ற நாசகர கூட்டணியில் இணைய மறுப்பதாக அறிவிக்க வேண்டும்.

3. ஜோபைடன், போரிஸ்ஜான்சன் சுடும் வடைகளை இனி நம்பமாட்டேன் என அறிவிக்க வேண்டும்.

4. இரஸ்ய அரசும், புடினும் உக்ரைன் மக்கள் நலன் கருதி இராணுவ நடிவடிக்கையை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த தயாராக வேண்டும்.

#peace #RussiaUkraine #NATO #russia #ukraine #usa

Tuesday, February 22, 2022

மண்ணை கவ்விய பாஜக

கன்னியாகுமரியில் பெற்ற வெற்றியை #பாஜக தமிழகம் முழுவதும்‌ பெற்ற வெற்றியாக ஊதிபெருக்குகிறது.

பாஜக பெற்ற 22 மாநகராட்சி வார்டில் 11வார்டு நாகர்கோவிலில் பெற்றுள்ளது.

58 நகராட்சி வார்டில் சுமார் 40 வரை குமரியில் மட்டுமே பெற்றுள்ளது.

230 பேரூராட்சி வார்டில் 170 வரை குமரி மாவட்டத்தில்.

இப்படி இருக்க பொய்யான பரப்புரையை பாஜக செய்கிறது. அதன் தளமாக அறிவித்த அக்கா வானதி சாவால்விட்ட கோவையில் 67 மாநகராட்சி வார்டில் டெப்பாசிட் இழந்துள்ளது. பல நகராட்சி பேரூராட்சி இடங்களில் ஒத்த ஓட்டும், பூஜியமும் வாக்கியுள்ளது. 

எச்ச.ராஜா, நயினார் நாகேந்திரன் சொந்த ஊரில் படுதோல்வி. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தளமும் தகர்ந்து போனது.

உண்மையில் பாஜக சென்னை மாநகராட்சி தேர்தலில் பெற்ற ஒரே ஒரு வார்டு மட்டுமே அதற்கான வெற்றியாகும்..

குமரியில் திமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் தனிதனியே நின்றதன் விளைவாய் கொள்கைசார்ந்த ஓட்டுகள் சமமாக பிரிந்துள்ளது. பாஜக வழக்கமாக பெறும் குமரியில் உள்ள வலதுசாரி சிந்தாந்ததிற்கான வாக்கையே தற்போது பெற்றுள்ளது. அதுவும் பர்சன்டேஜ் வரும்போது குறைய வாய்பிருக்கும்.

பாஜகவை தொடைக்க வேண்டியது முதலில் குமரியில் தான் அற்கு குமரியில் இனி வருங்காலங்களில் திமுக, காங்கிரஸ் "பஸ்ல ஏறுனாலும் கம்பிய பிடிக்காம போவோம்''னு சொல்லாம நியாயமான கொள்கைவழி உடன்பாடை செய்தால் அங்கும் பாஜகவை துடைத்தெரியலாம்.. 

பாஜகவின் இறுதி அத்தியாயத்தை இத்தேர்தல் காட்டுகிறது. நாம் சுயமரியாதை, சமூகநீதி, முற்போக்கு ஜனநாயக பாரம்பரியத்தை இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதே அதை விரைபடுத்த ஒரே வழி.
22.02.22

#LocalBodyElections2022 #LocalBodyElection #LocalBodyElections #localbodyelection2022 #TNElectionResults #CPIM #DMK #Congress #BJP #kanniyakumari

Wednesday, February 16, 2022

கல்வி பறிக்கும் மோடி அரசு; மாணவர் சமூகம் பதிலடி தரும்!

கல்வி பறிக்கும் மோடி அரசு; 
மாணவர் சமூகம் பதிலடி தரும்! 

- க.நிருபன் சக்கரவர்த்தி
நமது நிருபர் 
பிப்ரவரி 16, 2022.

ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் கொள்கை இந்திய கல்வியில் மிகப்பெரிய அசமத்து வத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கல்வி கொள்கை, நீட் போன்ற மாணவர் விரோத நட வடிக்கைகளால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாஜக அரசு பொறுப்பேற்ற ஏழாண்டுகளில் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
பெண் குழந்தைகளின்  கல்விக்கு எதிராக...

தற்போதைய ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பில் கூட மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகையை (NSIGSE) நிறுத்தியுள்ளது. அதன் 80% விழுக்காட்டு நிதியை “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” எனும்‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற மோடி யின் விளம்பரத் திட்டத்திற்கு திருப்பியுள்ளது. 2015ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தால் என்ன பயன் என்று இன்று வரை மோடி பதில் அளிக்கவில்லை.  மேலும் எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) எனும் ஓராண்டு படிப்பு பல மாணவிகள் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. குடும்ப சூழல், பொருளாதார காரணங்களால் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு மேல் படித்து முனைவர் பட்டம் பெற இயலாத பல மாணவர்களுக்கு எம்.பில்  சிறந்த படிப்பாக இருந்தது. தேசியக் கல்வி கொள்கை இப்படிப்பினை தேவையற்றது என நீக்கியுள்ளது. பட்டப்படிப்பை நான்காண்டாக மாற்றுவது, மூன்றாம் வகுப்பு முதல் பொதுதேர்வுகள் எனப் பல வடிகட்டும் முறைகளைக் கடைபிடிக்க உள்ளது. மேலும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 3% விழுக்காடுக்கு மேல் உயர்த்துவோம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மாறாக கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. 

பட்டியலின மாணவர் எண்ணிக்கை குறைந்தது

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் வி.சிவதாசன் அவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைத்து ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைகள் பற்றி கேள்வி  எழுப்பினார். அதில் குறிப்பாக 2016-17 ஆம் ஆண்டு களில் தேசிய அளவில் முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவி தொகை பெற்றுவந்த பட்டியல் சமூக மாணவர்கள் எண்ணிக்கை 9,503 ஆக இருந்தது; 2020-21ல் 3,986 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 58% விழுக்காடு மாணவர்கள் எண்ணிக்கையை குறைத் துள்ளது. முனைவர் பட்டத்திற்கு பிறகு படிக்கும் ‘போஸ்ட் டாக்டொரல்’ (முது முனைவர்) படிப்புக்கான உதவித்தொகை பெறுவோரில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி மாணவர் எண்ணிக்கை 2016-17 ஆம் ஆண்டில் 554 பேராக இருந்தது; 2020-21ல் 332 ஆக குறைந்துள்ளது. இதில் மாணவிகள் எண்ணிக்கையும் 2016-17ல் 642 என்ற எண்ணிக்கையிலிருந்து 2020-21ல் 434 ஆக குறைந்துள்ளது. அடிப்படை அறிவிய லுக்கான ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையும் 83% விழுக்காடு குறைந்துள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை குறையக் காரணம்... மாணவர்கள் படிக்க வரவில்லை என்பதல்ல;  உதவி பெறுவோர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு திட்ட மிட்டு குறைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 

கல்விக்காக அரசு செலவழிப்பது தேவையற்றது; அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும் தனியார் முதலாளிகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம். இத்தகைய கருத்தை 1998 லேயே பிர்லா-அம்பானி கல்வி கொள்கை தெரிவித்திருந்தது. இன்று அது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி மாணவர் எண்ணிக்கையும் வீழ்ச்சி

உலகளவில் ஆய்வுகளுக்கான மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் ஒரே தேசம் இந்தியா வாகதான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வெளியேற்றுவது மிகப் பெரிய அநீதி. மேலும் நெட், ஜே.ஆர்.எப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கான தகுதி மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகளை முறையாக நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது. வரு டத்திற்கு இரண்டு முறை நடைபெற்ற தேர்வை இனி ஒரு முறை நடத்தினால் போதும் என்கிறது. ஒரு பேராசிரி யருக்கு வழங்கி வந்த ஆய்வு மாணவர்கள் எண்ணிக் கையை சரிபாதியாக குறைத்துள்ளது. அவ்வாறு குறைக்கப்பட்டால் பேராசிரியர் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் ஆனால் பேராசிரியர் எண் ணிக்கையும் குறைக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை குறைய இது ஒரு அடிப்படையான காரணமாகும்.  மேலும் அனைத்து மத்திய கல்வி நிலையங்களிலும் பன்மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இத்தகைய உயர்வுக்கு எதிராக போராடியதற்காக மாணவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையை அந்நிர்வாகம் வழங்கியது.

முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை 2016ல் 4,141 என்ற மாணவர் எண்ணிக்கையிலிருந்து சரிபாதியாக குறைத்து 2020ல் 2,348 என்ற எண்ணிக்கையில் வழங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது சமூகத்தில் பல்வேறு தாக்கு தலை தொடுப்பது மட்டுமின்றி அவர்களின் கல்வியிலும் ஒன்றிய அரசு கைவைத்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உயர் கல்வி பயில வரும் மாணவிகள் எண் ணிக்கை வெறும் 5% விழுக்காடுதான். மொத்த உயர் கல்வி பயில வரும் மாணவிகள் விழுக்காடு 49%. இந்த நிலையில், அவர்களின் மத பழக்கவழக்கங்களை முன்வைத்து கர்நாடகத்தில் காவி கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டம் இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

ஆர்எஸ்எஸ் வெறியர்களின் இழிசெயல்கள் 

மாணவர்கள் மீது கல்வியில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரள விடாமல் அவர்களை சாதிய, மதவாத உணர்வுக ளுக்குள் மூழ்கடிக்கும் வேலையை பாஜக செய்து  வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கருத்து களை மாணவர்களிடம் திட்டமிட்டு புகுத்தி வருகிறது. சமீபத்தில் புள்ளி பாய், சுள்ளி டீல் என்ற வலைதள செயலி பெண்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமூ கத்திற்கு எதிராகவும் மிக மோசமான வேலைகள் நடந்து வந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் புகைப்படம், உருவகேலி, தொலைபேசி எண் பகிர்வது போன்ற வேலைகள் அதில் நடைபெற்றது. சில ஆதிக்க சாதி இந்து ஆண்கள் மற்றும் பெண்களும் இவ்வேலைகள் செய்தது தெரியவந்தது. இவர்களின் வயது 17தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மதவாத பிற்போக்கு சிந்தனையை இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்ந்த மாணவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

கல்வியில் ஆர்எஸ்எஸ்சின் வலதுசாரி திரிபு வேலை களை வெளிப்படையாகவும் மிகவும் வேகமாகவும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் கல்வித்துறை சார்பில், ஒன்றிய பாஜக அரசின் காவிவாத கல்விக்கொள்கையை வெளிப் படுத்தும் ஊர்தியை இடம் பெறச்செய்தது. அதில் மனுவாத குருகுல கல்வியை இந்திய கல்வியாக உலகிற்கு பறைசாற்றும் வேலையை செய்தது. தில்லி  பல்கலைக் கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளா கத்தில் மாணவிகள் விடுதி அருகில் பசுவிற்கான கோசாலையை அக்கல்லூரி நிர்வாகம் அமைத்து வருகிறது. மேலும் அனைத்து கல்வி வளாகத்திலும் கோசாலை அமைக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மனு அளித்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் இதை  கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.

ஜேஎன்யுவின் கதி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட்,  நாதுராம் கோட்சே புகழை டிவிட்டரில் பதிந்து பின் எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். இவர்தான் விவசாயிகள் போராட்டத்தை ‘காலிஸ்தான் ஜிஹாதிகள்’ என இழிவு படுத்தியவர். மேலும் துணைவேந்தராக நியமித்த தற்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடிதத்தில் பல பிழைகள் இருந்ததை ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்களே குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பியதும், அதை நான் எழுதவில்லை; என் அலு வலக ஊழியர் என மழுப்பியுள்ளார். நமது தேசத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படியானவர்கள் கையில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் பள்ளிப்படிப்பை, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தி வேலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் வேலை யின்றி மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வேலை தேடி மக்கள் சொந்த ஊர், மாநிலங்களை விட்டு இடப்பெயர்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வட மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சுமார் இரண்டு கோடிபேர் தமிழகம், கேரளாவில் இடம்பெயர்ந்துள் ளனர். மோடி அரசின் இத்தகைய செயல்பாடுகள் இந்திய இளைஞர்களிடையே பெறும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியான கொதிப்பை சாதியாகவும், மதமாகவும் மடைமாற்றம் செய்து வன் முறை, மோதலை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. இதை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

கல்வி, வேலை, சமூக மேம்பாடு மதநல்லிணக்கம் குறித்த முற்போக்கான அரசியலை நோக்கி மாணவர்க ளையும், இளைஞர்களையும் வளர்த்தெடுக்க இந்திய மாணவர் சங்கம் உறுதியேற்றுச் செயல்படுகிறது. 

கட்டுரையாளர் : 
மத்தியக்குழு உறுப்பினர்,
இந்திய மாணவர் சங்கம்.

நன்றி : தீக்கதிர்
#Theekkathir #தீக்கதிர் #SFI #SFItamilnadu

Saturday, February 5, 2022

கர்நாடக அரசின் சங்கி வேலை

ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் தனக்கு பிடித்த மத அடையாளங்களை பயன்படுத்துகிறார். ஆனால் எந்த மத அடையாளத்தையும் முன்னிறுத்தாமல் ஜனநாயகத்தை முன்னிருத்துவதே பிரதமர் உள்ளிட்டவர்களின் கடமை.
அதேபோல் ஹிஜாப் அணிவது, டர்பன் கட்டுவது, பூணுல் போட்டுக்கொள்வது என தனிமனிதர்களின் மத அடையாள்ங்களை இந்தியக்குடிமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 25 கூறுகிறது. 

ஆனால் நேர்மாறாக பிரதமரை கண்டிக்க வேண்டியவர்கள் மாணவர்களையும், குடிமக்களையும் நிர்பந்திப்பது சட்ட விரோதமாகும். இதற்கு கர்நாடக அரசே துணைபோவது ஏற்புடையதல்ல. மதக்கலவரங்களை தூண்டி அரசியல் லாபம் அடைய துடிக்கும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கும்பலை மக்கள் தனிமைபடுத்த வேண்டும்.
கர்நாடகாவில் போராடும் மாணவிகளுக்கு அங்குள்ள பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, தேசபற்றுமிக்க மக்கள் துணைநிற்க வேண்டும்.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...