Wednesday, March 30, 2022

சோமு செம்புவிற்க்கு மரணமில்லை

சோமு-செம்புவிற்கு மரணமில்லை..!
🌼💕🌼💕🌼💕🌼💕🌼💕🌼💕
சோசலிச சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில் மாணவர் இயக்கத்தின் கல்விக்கான போராட்டத்தின் பங்கு அளப்பரியது. அத்தகைய போராட்ட வரலாற்றின் மணிமகுடம்தான் தோழர்கள் சோமுவும் செம்புவும். 

1980 காலகட்டத்தில் பொறியியல் படிப்பு என்பது அவ்வளவு எளிதான தல்ல. தூத்துக்குடி மாவட்டம். துரை சாமிபுரத்தைச் சேர்ந்த சோம சுந்தரமும்,போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செம்புவும், அவர்களது கிரா மத்தின் முதல் பொறியியல் மாணவர் கள் மட்டுமல்ல, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களும்கூட. இரு வரும் நன்கு படிக்கக்கூடியவர்கள்.  

சோமு அரசியல் ஆழமும், ஸ்தாபன கட்டமைப்பும் கொண்ட மாணவர் தலைவராக உருவெடுக்கிறார். 

இரண்டாம் ஆண்டிலேயே எஸ்.எப்.ஐ கிளைச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டு பல மாணவர்களை சங்கத்தில் சேர்க்கிறார். அந்தவகையில் தான் செம்புவும் எஸ்.எப்.ஐ உறுப்பின ராகிறார்.

கல்லூரியில் மாணவர் சங்கச் செயல்பாடுகளில் முக்கியமானதாக முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுப்பது. மாண வர்களை சாதியாக பாகுபடுத்து வதற்கு எதிராக அனைத்து தரப்பு மாணவர்களையும் அமைப்பாக்குவது. கல்லூரிக்குள் அடிப்படைவசதியை மேம்படுத்துதல், தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக மாணவர்களை அணிதிரட்டி போராட்டம் நடத்து உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.  

குறிப்பாக கல்லூரி விடுதியிலும் முறையான உணவு வழங்கச் செய்வது, உணவுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை குறைப்ப தற்கான போராட்டத்தையும் நடத்துகி றார்கள். மாணவர்களை கோரிக்கை களுக்காக திரட்டுவது மட்டுமல்லாமல் அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.

இத்தகைய சூழலில் கல்லூரியில் நடைபெறும் மாணவர் பேரவையை கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அக்கல்லூரியில் ஏற்கனவே அமைப்பு இருந்தாலும் பேரவை தேர்தலை பொறுத்தவரை திமுக அல்லது காங்கிரஸ் மாணவர் அணிகளே அனைத்துப் பொறுப்புகளையும் கைப்பற்றி வந்தன. 

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டி யிட்டாலும் சாதிய அணி சேர்க்கையை எதிர்த்து ஓரிரு இடங்களை தவிர முக்கியமான பொறுப்புகளில் வெற்றி பெற முடியாத சூழல் நிலவிவந்தது.  

இந்நிலையில் எஸ்எப்ஐ தோழர்கள், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் ஒன்றிணைக்க “அன்புக் குழு” என்ற ஒரு குழுவை உருவாக்கி மாணவர்களிடம் ஒற்று மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங்கிலிருந்து பாதுகாக்கிறார்கள். மேலும் அவர்களை சாதியாகப் பிரியாதவகையில் நட்புணர்வை வளர்த்து அன்பு கேங்கில் இணைக்கி றார்கள். 

இத்தகைய நடவடிக்கையால் சில மாதங்களிலேயே மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவுகிறது. கல் லூரியில் நடைபெற்ற போராட்டங்க ளால் மேலும் ஒற்றுமை 
பெறுகி றார்கள். 

இந்நிலையில், 1980-81 ஆண்டிற் கான மாணவர் பேரவைத் தேர்தல் கல்லூரியில் அறிவிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு செம்புலிங்கம் எஸ்.எப்.ஐ சார்பில் போட்டியிடுகிறார். 

அன்புக் குழுவின் ஒற்றுமை முயற்சி யும் சேர்ந்து அவரை தேர்தலில் வெற்றி பெற வைக்கிறது. தோழர் ரவீந்திரன் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். 

மேலும் அனைத்து பதவி களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த தோழர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தோற்ற அணியினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வெறுப்பின் உச்சத்திற்கு சென்று பல்வேறு தகராறுகளை, தாக்குதல்களை தொடுக்கிறார்கள். 

இருப்பினும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலவில்லை.  அதனால் கல்லூரிக்கு வெளியே இருந்து 50க்கும் மேற்பட்ட குண்டர்களையும், ரெளடிகளையும் கொண்டு தாக்கத் திட்டமிடுகிறார்கள். 

சம்பவத்தன்று மாணவர் பேரவை யின் பொதுச்செயலாளர் செம்புலிங்கம் விடுதியிலிருக்கும் போது சமாதான பேச்சுவார்த்தையென விடுதிக்கு வெளியே அழைக்கப்படுகிறார். 

பேசிக் கொண்டிருக்கும்போதே அக்கும்பலி லிருந்து ஒருவன் செம்புலிங்கத்தின் கண்ணில் மண்ணை அடிக்க சம்பவம் அரங்கேறுகிறது. செம்பு பலசாலி திருப்பி தாக்கும் திறனுடையவர் என்ப தால் பேச்சுவார்த்தை என அழைத்து வஞ்சகமான முறையில் அவரை படுகொலை செய்கிறார்கள். 

சோமு ஜூனியர் மாணவர் ஒருவ ரோடு விடுதி அருகே வரும்போது அதே கும்பல் இவரையும் மடக்கி சுற்றி வளைத்து தாக்குகிறது. அருகிலிருந்த ஜூனியர் மாணவரை சோமு தள்ளி விட்டு தப்பிக்க செய்கிறார். 

அம்மாண வர் தப்பி சென்று சக மாணவர்களை அழைத்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. 21 வயதே ஆன அந்த இரண்டு இளைஞர்களும் மரணிக்கிறார்கள்.

கல்விக்கான போராட்டத்தில் புடம் போட்ட தங்கமாக மிளிறும் சோமு -  செம்புவின் வரலாறு என்றென்றைக் கும் மறையாது. அன்றிலிருந்து 2006 வரை தமிழகத்தின் அனைத்து கல்லூரி களிலும் மாணவர் பேரவையை பெரும் பாலும் எஸ்எப்ஐ கைப்பற்றி வந்தது. 

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம், கல்வி கட்டண நிர்ணயம், கேலிவதை தடுப்பு, பாலியல் வன்முறைக்கு எதிராக, தனியார் சட்டக்கல்லூரி திறப்பதற்கு எதிராக, ஐடிஐ, பாலிடெக்னிக், பள்ளி கல்லூரிகளில் நன்கொடை தடுப்பு, அரசு பள்ளி கல்லூரி பாதுகாப்பு, சமச்சீர் கல்விக்காக, நீட், தேசியக் கல்வி கொள்கை எதிர்ப்பு போராட்டம் என மாணவர் இயக்கத்தின் அனைத்து போராட்டங் களிலும் சோமுவும் செம்புவும் வாழ்ந்து வருகிறார்கள். 

மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக எல்லோருக்கும் கல்வியும், எல்லோ ருக்கும் வேலையும் கிடைப்பதற்கான அவர்தம் போராட்டங்களையும், இலட்சியங்களையும், கொள்கை களையும் ஒருபோதும் கொல்ல முடியாது.

—-க.நிருபன் சக்கரவர்த்தி / தீக்கதிர்

Friday, March 25, 2022

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு எனும் காவிகார்பரேட் கல்வி திட்டம்.

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு எனும் காவிகார்பரேட் கல்வி திட்டம்.

- இளைஞர் முழக்கம் DYFI

ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை NEP2020ஐ வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதன் மிகமுக்கிய நகர்வாக கடந்த பிப்ரவரி  ஒன்றாம் தேதி  NHEQF (National Higher Education Qualification Framework) எனும் தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பு வரைவை வெளியிட்டு உயர்கல்வியில் செய்யபோகும் மாற்றங்கள் குறித்து பதிமூன்று நாட்களில் கருத்து கூற காலகெடு விதித்திருந்தது.

புதிய கல்வி கொள்கை வரைவு வெளியிட்டது போன்றே இந்த வரைவையும் எந்த ஒரு மாநில மொழியிலும் வெளியிடவில்லை. 

குறைந்த காலகெடுவில் உள்ள அநீதியை அனைத்து தரப்பினரும் எதிர்த்த பிறகு வெறும் எட்டு நாட்களை கூடுதலாக அறிவித்து பிப்ரவரி 21க்குள் கருத்து கேட்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. 

நவதாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில். உலக வர்த்தக அமைப்பின் காட்ஸ் ஒப்பந்தத்தில் (WTO-GATS) இந்தியா கையெழுத்திட்டபடி பாஜகவின் வலதுசாரி தத்துவம், உலக நிதி மூலதனத்தோடு இணைந்து தனக்கான காவிமயச் சிந்தனைகளையும் புகுத்தி உருவாக்கப்பட்டதே இவ்வரைவு. 

63 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவ்வரைவு பி.ஏ., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து கூறியுள்ளது. இத்துடன் இவ்வரைவானது சட்டம், மருத்துவம் தவிர அனைத்துவிதமான உயர்கல்வி படிப்பிலும் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து கோட்பாட்டளவில் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை இணைத்து ஒருங்கி ணைந்த படிப்பாக உருவாக்கி உள்ளது. அதாவது NVEQF (Vocational) எனும் தேசிய தொழிற்கல்வி தகுதி கட்டமைப்பு  மற்றும் NSQF (Skill) தேசிய திறன் தகுதி கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அல்லது உள்ளடக்கி தேசிய உயர்கல்வி தகுத்திக் கட்டமைப்பு வரைவு (NHEQF) உருவாக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளது. 

கலை அறிவியலில் திறன் தொழில்நுட்பத்தை இணைப்பது சந்தைக்கான திறன்பெற்ற உழைப்பாளிகளை உருவாக்கவும், காவிவாதச் சிந்தனையின் குலக்கல்வி, குலத்தொழில் கொள்கையை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை நடைமுறைப் படுத்த இவ்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் கல்வி என்பது லாபத்தின் அடிப்படையில் அல்லது ‘தேவை- அளிப்பு விதிக்கு’ உட்பட்டு தேவை  அதிகமுள்ள அதாவது, கல்விச் சந்தையில் எந்தப் படிப்பிற்கு கிராக்கி அதிகமாக உள்ளதோ அத்தகைய படிப்புகளே கூடுதலாக உருவாக்கப்படும். அதன்படி ‘லாப மற்ற’ படிப்புகள், துறைகள் படிப்படியாக நீக்கப்படும்.

இளநிலை படிப்புகளை மூன்றாண்டுகளிலிருந்து நான்காண்டுகளாக மாற்றி மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு நான்காவதாண்டை ஹானர்ஸ்/ஆராய்ச்சி முக்கியத்துவம் கொண்ட படிப்பாக மாற்றப்போவதாக கூறியுள்ளது. அதாவது இதனால் மூன்றாண்டு படிப்பின் முக்கியத்துவம் இயல்பாகவே குறைக்கப்படும். 

இதற்கான அறிவிப்பு கூட, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலைப் படிப்பில் எந்த ஆண்டில் வேண்டு மானாலும் இடையில் வெளியேறலாம்; அவ்வாறு வெளி யேறும் போது அதற்கான சான்று வழங்கப்படும்.  

முதலாம் ஆண்டு என்றால் சான்றிதழ்  (Undergraduate Certificate) சான்றும், இரண்டாம்  ஆண்டு என்றால்  டிப்ளோமா படிப்பு (Undergraduate Diploma) சான்றும், மூன்றாண்டு படித்து முடிக்கும் மாணவருக்கு இளநிலை பட்டம் (Bachelor’s Degree) வழங்கப்படும்; நான்காவதாண்டை முடிக்கும் போது இளநிலை ஹானர்ஸ்/ஆராய்ச்சி (Bachelor’s Degree Honours/Research) பட்டம் வழங்கப்படும். 

இடைநிற்றலை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தின் நோக்கமே அனைவரும் உயர்கல்வி முழுமையாக பயிலக் கூடாது என்பதுதான். 

மேலும் சான்றிதழ், டிப்ளோமா, பட்டம் பெறுதலுக்கான படிப்புகளோடு ஒருங்கிணைந்த படிப்பிற்கான பாடங்களை மற்றும் கற்பித்தலை (Curriculum and Pedagogy) துவங்குவது நடைமுறை சாத்தியமற்ற திட்டமாகும். இது மாணவர்களை குழப்பத்திற்கே உள்ளாக்கும்.
 
முதுநிலையில் முதலாம் ஆண்டை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை டிப்ளோமா (Post-Graduate Diploma) பட்டம் வழங்கப்படும், இரண்டாண்டு முதுநிலை படித்து முடிக்கும் மாணவர் களுக்கு முதுநிலை பட்டம் (Master Degree) வழங்கப் படும். 

மேலும் இதில் மூன்றாண்டு பட்டத்தை முடித்தவர்கள் இரண்டாண்டு முதுநிலை படிப்பை படித்தால் முதுநிலை பட்டம் பெறலாம். நான்காண்டு இளநிலை படிப்பை முடித்தவர்கள் ஓராண்டு படித்தால்  போதுமானது முதுநிலைப் பட்டம் வழங்கப்படும். அல்லது நான்காண்டு இளநிலை ஹானர்ஸ்/ஆராய்சி முடித்தால் நேரடியாக பிஹெச்டி முனைவர் பட்டப்படிப்பில் சேரலாம்.

தற்போது யுஜிசி இவ்வறிவிப்பை மார்ச்சில் அறிவித்துள்ளது. 

மேலும் எம்பில் நிரைஞர் படிப்பையும் இந்த கல்வியாண்டோடு முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது. நிரைஞர் பட்டம் என்பது மினி பிஹெச்டி என அழைக்கப்படுவதுண்டு பல ஏழை எளிய மாணவர்கள், பெண்கள் இத்தகைய படிப்பை ஒரே ஆண்டில் முடித்து விரிவுரையாளராக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

இளநிலையில் மூன்றாம் ஆண்டை முடித்தவர்கள் ஒட்டுமொத்த தர புள்ளி சராசரி (CGPA - Cumulative Grade Point Average) 7.5 புள்ளிகள் வாங்கியிருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டு செல்ல முடியும்.

கல்வி பயிலும் வருடங்களை பத்து நிலைகளாக (Levels) பிரித்துள்ளது. நிலை 1 முதல் 4 வரை  பள்ளிக் கல்வியாகவும், நிலை 5 முதல் 10 வரை உயர்கல்வியாகவும் தீர்மானித்துள்ளது. 

அதாவது 5ஆம் நிலை இளநிலை சான்றிதழ் சான்று (இரண்டு செமஸ்டர்கள்), 6ஆம் நிலை இளநிலை டிப்ளோமா சான்று (நான்கு செமஸ்டர்கள்), 7ஆம் நிலை இளநிலை பட்டப்படிப்பு (ஆறு செமஸ்டர்கள்), 8ஆம் நிலை   இளநிலை ஹானர்ஸ் ஆய்வு  (எட்டு செமஸ்டர்கள்) மற்றும் முதுநிலை சான்றிதழ் சான்று (இரண்டாண்டு முதுநிலையில் முதல் இரண்டு செமஸ்டர்கள்), 9ஆம் நிலை முதுநிலை பட்டம் (நான்கு செமஸ்டர்கள்) மற்றும்  நான்காண்டு இளம்நிலை ஹான்ர்ஸ்/ஆய்வு முடித்தவர்களுக்கான ஓராண்டில் முடிக்கும் முதுநிலை பட்டம் (இரண்டு செமஸ்டர்), 10ஆம் நிலை முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பு.

இளம்நிலையில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முடிப்பவர்கள் இரண்டுமாத தொழிற்பயிற்சியுடன் (Appranticeship/Internship) அவருக்கான சான்று வழங்கப்படும். அப்படியான தொழிற்பயிற்சி அந்தந்த பிராந்தியம் சார்ந்த தொழிலை கற்க வேண்டும். 

அது கோழிப்பண்ணையாகவோ, ஆடு  வளர்ப்பாகவோ, மாடு வளர்ப்பு அல்லது பண்ணையாகவோ, தோட்டவேலை, விவசாயக் கூலி, தொழிற்சாலை பணிகள், கடைகள், வணிக வளாகம்... அல்லது பிரதமர் மோடி அவர்களின் வார்த்தையில் பக்கோடா போடுதலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு அதிகபட்சம் 10 கிரெடிட் அளவிற்கு வழங்கப்படும். 

குறைந்தது 6 கிரடிட் கண்டிப்பாகப் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் கிரெடிட் வழங்கப்படும்.  இத்தகைய கிரெடிட் எவ்வாறு தீர்மானிக்க முடியும் அப்படுயான கட்டமைப்பு வளர்ந்த மாநிலகளிலேயே இல்லாதபோது, உ.பி., ம.பி., பீகார் போன்ற மாநிலங்களில் இதை யோசித்துகூட பார்க்க இயலாது. 

மேலும் வர்ணபேத கல்விக் கொள்கையின்படி பகுதிசார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த தொழில் என்னவாக இருக்கும்; அப்படி யான தொழிலில் மாணவர்களுக்கான கிரெடிட் அளவீடு எவ்வாறு கணக்கிடப்படும் என்பதும் அறுதியிட்டுக் கூறமுடியும் இது குழப்பமானதாகும்.
 
ஏபிசி (ABC-Academic Bank of Credit) என்ற ‘கல்வி கிரெடிட் வங்கி’ உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் பெறும் கல்விக்கான ஒட்டுமொத்த கிரெடிட் இணையத்தின் மூலம் சேமிக்கப்படும். இந்த இணைய சேவைக்கு தொகை வசூலிக்கப்படும். 

இந்த கிரெடிட் அடிப்படையிலேயே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படும். கடந்தாண்டு ஜூலை மாதமே இது ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதன் மூலம் ஒருவர் ஒரு  கல்லூரியில் படித்துக்கொண்டே மற்றொரு பாடத்தை வேறொரு நிறுவனத்தில் படிக்கலாம் என்கிறது. 

அதாவது எழுபது விழுக்காடு படிப்புகளை கல்லூரிக்கு வெளியே படிக்கலாம் என்கிறது. அதாவது இணைய வழி மூலமே 70% விழுக்காடு  படிப்புகளை தொடர லாம் என்கிறது. அவ்வாறு பார்க்கும் போது அந்நிய கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் இதன் மூலம் கோலோச்ச முடியும். 

மேலும் கிரேடு அளவீடு வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இளநிலை முதலாம் ஆண்டிற்கு 40 கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் நான்காண்டில் 160 கிரேடு பெற வேண்டும் என்பதாகும்.

 தேசிய  உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரச்சான்று வழங்கும் ‘NAAC’ (தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று  அவை) அங்கீகரித்துள்ள A, A+ போன்ற தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களே இத்தகைய படிப்புகளை வழங்க முடியும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகளே கல்விச் சந்தையில் 90 விழுக்காடு கல்வி விற்பனையை தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ளும்.

அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். தற்போது கூட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவு தேர்வு (CU-CET) அறிவித்துள்ளது இதன் பின்னணியில் இருந்தே. இனி வரும் ஆண்டுகளில் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இந்த பொது நுழைவு தேர்வில் இணைக்கப்பட உள்ளன.

 இளநிலை முதல் முதுநிலைப் படிப்பு வரை எந்தாண்டு வேண்டுமானாலும் வெளி யேறி, உள்நுழையலாம் (Multiple entry and exit)  என்பதை ‘பிரேக்கிங் சிஸ்டம்’ (ஒரு ஆண்டிலுள்ள இரண்டு செமஸ்டர்களையும் அரியர் இன்றி  தேர்ச்சி  பெறாமல் அடுத்த ஆண்டு செல்ல இயலாது)  கொண்டு வரப்பட்டுள்ளதில் இருந்து புரிந்து கொண்டால் இதன் சூட்சமத்தை தெரிந்து கொள்ள முடியும். இயல்பாகவே மாணவர்கள் தொழிற்பயிற்சியோடு மலிவான தொழிலாளியாக வெளியேற்றப்படுவார்கள்.

இந்த வரைவு அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலக்காக பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, தரம் உயர்த்துவது, செயல் திறன் மேம்பாடு, கற்றல் திறன் வளர்ப்பு, தொழிநுட்பத்திறன்,  தொழிற்பயிற்சி, தொழிற்பயிற்சியின் போது சமூக உறவு என்றெல்லாம் ஏராளமான விசயங்கள் பேசப்பட்டாலும்;  அனைத்துப் படிப்புகளுக்கும் அறநெறி, மனித நம்பிக்கைகள், நன்னெறி, நீதிநெறி போன்றவை கற்றுத் தரப்படும் என்கிறார்கள். இப்படி யான வார்த்தைகளுக்கான ஆர்எஸ்எஸ் உள்ளடக்கத்தின் விஷமத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
 
கலைத்துறை மீதான அறிவியலற்ற பார்வையை முன்வைக்கிறது. அறிவியல் துறையின் அடிப்படையாக ஆதாரங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலான அனுமானம், யூகங்களை நடைமுறையில் ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்றவற்றுக்கு மாறாக, நம்பிக்கை அறிவியல் (Moral scidnce), கட்டுக்கதைகளின் அடிப்படையில் உண்மையாக (Post truth) உருவகப்படுத்தல்/நம்பிக்கை கொள்ளுதல் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை வளர்த்தெடுப்பதற்கான திட்டமிடலாக உள்ளது. 

ஆராய்ச்சிப் படிப்புகளை இந்தப் பின்னணியிலிருந்து புரிந்து கொண்டால், எதிர் காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறும் புராணக்கதைகள் அடிப்படையில் ஆய்வுகள் நடைபெற்று முனைவர் பட்டம் வழங்கப்படும்.
 
இவ்வரைவு திட்டம், இணைய வழிக்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. தொலைதூரக்கல்வியை இணையவழிக் கல்வியோடு இணைக்க உள்ளது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அதிகப்படுத்தப் படவுள்ளன. அவ்வாறான இணையவழிக் கல்வியும் நேரடிக்கல்வியும் சமமானதாக உருவாக்கப்படும். 

நேரடிக்கல்வி மற்றும் நேரடிக் கற்றலின் முக்கியத்துவம் குறைக்கப்படும். ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் ஒட்டு மொத்த மாநிலக் கல்வியும் தீர்மானிக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் பெயரளவில் உரிமையாளராக மட்டும் இருக்கும்; அனைத்து திட்டமிடலும் மத்தியப்படுத்தப்படும்.

21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் வளர்ச்சியை பிற்போக்கான பார்வையில் பார்க்கும் இந்த வரைவு மாணவர்களும், இளைஞர்களும் முழுவதும் நிராகரிக்க வேண்டும்.
 
தேசிய கல்விக் கொள்கை உரு வாக்கத்தின் போது எப்படி அநீதியான முறையில் குறிப்பிட்டவர்களுக்கான கூட்டம், கருத்துக்  கேட்புகள் நடைபெற்றதோ அதுபோலவே தற்போதும்  நடந்துள்ளது. 

இதை ஒட்டுமொத்தமாக நிராகரித்து கூறப்படும் கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில கல்வி நிறுவனங்களில் இணைய வழிகூட்டமாக நடத்தி மாணவர் ஒப்புதல் பெற்றதாக பொய்யான தகவல்களை சேகரித்துள்ளது. 

ஒட்டுமொத்ததில் இந்த தேசிய உயர்கல்விக் கட்ட மைப்பு வரைவு முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டிய தாகும். 

க.நிருபன் சக்கரவர்த்தி
25.03.2022

தேசிய உயர்கல்விக் கட்டமைப்பு வரைவை முற்றாக நிராகரிப்போம்!

தேசிய உயர்கல்விக் கட்டமைப்பு வரைவை 

முற்றாக நிராகரிப்போம்! 
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

- க.நிருபன் சக்கரவர்த்தி / தீக்கதிர்

இந்திய அரசாங்கம் தேசிய புதிய கல்விக் கொள்கையை வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதன் மிகமுக்கிய நகர்வாக கடந்த பிப்ரவரி  ஒன்றாம் தேதி  என்எச்இகியூஎப் (National Higher Education Qualification Framework) என்ற தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பு வரைவை வெளி யிட்டது. 

புதிய கல்வி கொள்கை வரைவு வெளியிட்டது போன்றே இந்த வரைவையும் எந்த ஒரு மாநில மொழியிலும் வெளியிடவில்லை. 

பிப்ரவரி 21க்குள் கருத்து கேட்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. 

நவதாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில். உலக வர்த்தக அமைப்பின் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டபடி பாஜகவின் வலதுசாரி தத்துவம் உலக நிதி மூலதனத்தோடு இணைந்து தனக்கான காவிமயச் சிந்தனைகளையும் புகுத்தி உருவாக்கப்பட்டதே இவ்வரைவு. 

63 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவ்வரைவு பி.ஏ., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து கூறியுள்ளது. 

இவ்வரைவில் சட்டம், மருத்துவம் தவிர மற்ற படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் பற்றி பேசியுள்ளது. 

கலை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம் இணைத்து ஒருங்கி ணைந்த படிப்பாக உருவாக்கி உள்ளது. அதாவது NVEQF (Vocational) எனும் தேசிய தொழிற்கல்வி தகுதி கட்டமைப்பு  மற்றும் NSQF (Skill) தேசிய திறன் தகுதி கட்டமைப்பை ஒருங்கிணைத்து அல்லது உள்ளடக்கி தேசிய உயர்கல்வி தகுத்திக் கட்டமைப்பு வரைவு (NHEQF) உருவாக்கப்பட்டுள்ளதாக 
தெரி வித்துள்ளது. 

கலை அறிவியலில் திறன் தொழில்நுட்பத்தை இணைப்பது சந்தைக்கான திறன்பெற்ற உழைப்பாளிகளை உருவாக்கவும், காவிமயச் சிந்தனையின் குலதொழில் கொள்கை யை பள்ளிக்கல்வி முதல் கல்லூரி வரை நடைமுறைப் படுத்தவுமே உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் கல்வி என்பது லாபத்தின் அடிப்படையில் அல்லது ‘தேவை- அளிப்பு விதிக்கு’ உட்பட்டு தேவை  அதிகமுள்ள அதாவது, கல்விச் சந்தையில் எந்தப் படிப்பிற்கு கிராக்கி அதிகமாக உள்ளதோ அத்தகைய படிப்பு களே கூடுதலாக உருவாக்கப்படும். அதன்படி ‘லாப மற்ற’ படிப்புகள் துறைகள் படிப்படியாக நீக்கப்படும்.

நான்காண்டு பட்டப்படிப்பு

இளநிலை படிப்புகளை மூன்றாண்டுகளிலிருந்து நான்காண்டுகளாக மாற்றி மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு நான்காவதாண்டை ஹானர்ஸ்/ஆராய்ச்சி முக்கியத்துவம் கொண்ட படிப்பாக மாற்றப்போவதாக கூறியுள்ளது. அதாவது மூன்றாண்டு படிப்பின் முக்கியத்துவம் இயல்பாகவே குறைக்கப்படும். 

இதற்கான அறிவிப்பு கூட, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலைப் படிப்பில் எந்த ஆண்டில் வேண்டு மானாலும் இடையில் வெளியேறலாம்; அவ்வாறு வெளி யேறும் போது அதற்கான சான்று வழங்கப்படும்.  

முதலாம் ஆண்டு என்றால் சான்றிதழ்  (Undergraduate Certificate) சான்றும், இரண்டாம்  ஆண்டு என்றால்  டிப்ளோமா படிப்பு (Undergraduate Diploma) சான்றும், மூன்றாண்டு படித்து முடிக்கும் மாணவருக்கு இளநிலை பட்டம் (Bachelor’s Degree) வழங்கப்படும்; நான்காவதாண்டை முடிக்கும் போது இளநிலை ஹானர்ஸ்/ஆராய்ச்சி (Bachelor’s Degree Honours/Research) பட்டம் வழங்கப்படும். 

இடைநிற்றலை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தின் நோக்கமே அனைவரும் கல்வி பயிலக் கூடாது என்பதுதான். 

மேலும் சான்றிதழ், டிப்ளோமா, பட்டம் பெறுதலுக்கான படிப்புகளோடு ஒருங்கிணைத்த படிப்பிற்கான பாடங்களை துவங்குவது நடைமுறை சாத்தியமற்ற திட்டமாகும். இது மாணவர்களை குழப்பத்திற்கே உள்ளாக்கும்.

 
முதுநிலையில் முதலாம் ஆண்டை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை டிப்ளோமா (Post-Graduate Diploma) பட்டம் வழங்கப்படும், இரண்டாண்டு முதுநிலை படித்து முடிக்கும் மாணவர் களுக்கு முதுநிலை பட்டம் (Master Degree) வழங்கப் படும். 

மேலும் இதில் மூன்றாண்டு பட்டத்தை முடித்தவர்கள் இரண்டாண்டு முதுநிலை படிப்பை படித்தால் முதுநிலை பட்டம் பெறலாம். நான்காண்டு இளநிலை படிப்பை முடித்தவர்கள் ஓராண்டு படித்தால்  போதுமானது முதுநிலைப் பட்டம் வழங்கப்படும்.

ஒட்டுமொத்த தர புள்ளி சராசரி (CGPA - Cumulative Grade Point Average) 7.5 புள்ளிகள் வாங்கியிருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டு செல்ல முடியும். 

10 நிலைகள்

மேலும் கல்வி பயிலும் வருடங்களை பல நிலை களாக (Level) பிரித்துள்ளது. நிலை 1 முதல் 4 வரை  பள்ளிக் கல்வியாகவும் நிலை 5 முதல் 10 வரை உயர்கல்வியாகவும் தீர்மானித்துள்ளது. 

அதாவது 5ஆம் நிலை இளநிலை சான்றிதழ் சான்று (இரண்டு செமஸ்டர்), 6ஆம் நிலை இளநிலை டிப்ளோமா சான்று (நான்கு செமஸ்டர்கள்), 7ஆம் நிலை இளநிலை பட்டப்படிப்பு (ஆறு செமஸ்டர்), 8ஆம் நிலை   இளநிலை ஹானர்ஸ் ஆய்வு  (எட்டு செமஸ்டர்), மேலும் முதுநிலை சான்றிதழ் சான்று (இரண்டாண்டு முதுநிலையில் முதல் இரண்டு செமஸ்டர்), 9ஆம் நிலை முதுநிலை பட்டம் (நான்கு செமஸ்டர்) மற்றும்  நான்காண்டு இளம்நிலை ஹான்ர்ஸ்/ஆய்வு முடித்தவர்களுக்கான ஓராண்டில் முடிக்கும் முதுநிலை பட்டம் (இரண்டு செமஸ்டர்), 10ஆம் நிலை முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பு.
இளம்நிலையில் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு முடிப்பவர்கள் இரண்டுமாத தொழிற்பயிற்சி யுடன் (Appranticeship/Internship) அவருக்கான சான்று வழங்கப்படும். அப்படியான தொழிற்பயிற்சி அந்தந்த பிராந்தியம் சார்ந்த தொழிலை கற்க வேண்டும். 

அது கோழிப்பண்ணையாகவோ, ஆடு  வளர்ப்பாகவோ, மாடு வளர்ப்பு அல்லது பண்ணை யாகவோ, தோட்டவேலை, விவசாயக் கூலி அல்லது பிரதமர் மோடி அவர்களின் வார்த்தையில் பக்கோடா போடுதலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு அதிகபட்சம் 10 கிரெடிட் அளவிற்கு வழங்கப்படும். 

குறைந்தது 6 கிரடிட் கண்டிப்பாகப் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் கிரெடிட் வழங்கப்படும்.  

வர்ணபேத கல்விக் கொள்கையின்படி பகுதிசார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த தொழில் என்னவாக இருக்கும்; அப்படி யான தொழிலில் மாணவர்களுக்கான கிரெடிட் அளவீடு எவ்வாறு கணக்கிடப்படும் என்பதும் குழப்பமானதாகும்.

 
ஏபிசி (ABC-Academic Bank of Credit) என்ற ‘கல்வி கிரெடிட் வங்கி’ உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் பெறும் கல்விக்கான ஒட்டுமொத்த கிரெடிட் இணையத்தின் மூலம் சேமிக்கப்படும். இந்த இணைய சேவைக்கு தொகை வசூலிக்கப்படும். 

இந்த கிரெடிட் அடிப்படையிலேயே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படும். கடந்த ஜூலை மாதமே இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் ஒரு  கல்லூரியில் படித்துக்கொண்டே மற்றொரு பாடத்தை வேறொரு நிறுவனத்தில் படிக்கலாம் என்கிறது. 

அதாவது எழுபது விழுக்காடு படிப்புகளை கல்லூரிக்கு வெளியே படிக்கலாம் என்கிறது. அதாவது இணைய வழி மூலமே 70 விழுக்காடு  படிப்புகளை தொடர லாம் என்கிறது. இளநிலை முதலாம் ஆண்டிற்கு 40 கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் நான்காண்டில் 160 கிரேடு பெற வேண்டும்.  

பன்னாட்டுக் கல்வி  நிறுவனங்களும் இதில் பங்கு பெறும். மேலும் தேசிய  உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரச்சான்று வழங்கும் ‘நாக்’ (தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று  அவை) அங்கீகரித்துள்ள ஏ(A). ஏ+(A+) போன்ற தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களே இத்தகைய படிப்புகளை வழங்க முடியும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகளே கல்விச் சந்தையில் 90 விழுக்காடு முன்னுக்கு வரும்.

நுழைவுத் தேர்வு கட்டாயம்

அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். இளநிலை முதல் முதுநிலைப் படிப்பு வரை எந்தாண்டு வேண்டுமானாலும் வெளி யேறி, உள்நுழையலாம் (Multiple entry and exit)  என்பதை ‘பிரேக்கிங் சிஸ்டம்’(ஒரு ஆண்டிலுள்ள இரண்டு செமஸ்டர்களையும் அரியர் இன்றி  தேர்ச்சி  பெறாமல் அடுத்த ஆண்டு செல்ல இயலாது)  கொண்டு வரப்பட்டுள்ளதில் இருந்து புரிந்து கொண்டால் இதன் சூட்சமத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வரைவு அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலக்காக பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, தரம் உயர்த்துவது, செயல் திறன் மேம்பாடு, கற்றல் திறன் வளர்ப்பு, தொழிநுட்பத்திறன்,  தொழிற்பயிற்சி, தொழிற்பயிற்சியின் போது சமூக உறவு என்றெல்லாம் ஏராளமான விசயங்கள் பேசப்பட்டாலும்;  அனைத்துப் படிப்புகளுக்கும் அறநெறி, மனித நம்பிக்கைகள், நன்னெறி, நீதிநெறி போன்றவை கற்றுத் தரப்படும் என்கிறார்கள். இப்படி யான வார்த்தைகளுக்கான ஆர்எஸ்எஸ் உள்ளடக்கத்தின் விஷமத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

 
கலைத்துறை மீதான அறிவியலற்ற பார்வையை முன்வைக்கிறது. அறிவியல் துறையின் அடிப்படையாக ஆதாரங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலான அனுமானம், யூகங்களை நடைமுறையில் ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்றவற்றுக்கு மாறாக, நம்பிக்கை அறிவியல் (Moral scidnce), கட்டுக்கதைகளின் அடிப்படையில் உண்மையாக (Post truth) உருவகப்படுத்தல்/நம்பிக்கை கொள்ளுதல் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை வளர்த்தெடுப்பதற்கான திட்டமிடலாக உள்ளது. 

ஆராய்ச்சிப் படிப்புகளை இந்தப் பின்னணியிலிருந்து புரிந்து கொண்டால், எதிர் காலத்தில் மாட்டுச் சாணம் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வுகள் நடைபெற்று முனைவர் பட்டம் வழங்கப்படும்.

 
இப்புதிய திட்டம், இணைய வழிக்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. தொலைதூரக்கல்வியை இணையவழிக் கல்வியோடு இணைக்க உள்ளது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அதிகப்படுத்தப் படவுள்ளன. அவ்வாறான இணையவழிக் கல்வியும் நேரடிக்கல்வியும் சமமானதாக உருவாக்கப்படும். 

நேரடிக்கல்வி மற்றும் நேரடிக் கற்றலின் முக்கியத்துவம் குறைக்கப்படும். ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் ஒட்டு மொத்த மாநிலக் கல்வியும் தீர்மானிக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் பெயரளவில் உரிமையாளராக மட்டும் இருக்கும்; அனைத்து திட்டமிடலும் மத்தியப்படுத்தப்படும்.

21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் வளர்ச்சியை பிற்போக்கான பார்வையில் பார்க்கும் இந்த வரைவு முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
 
தேசிய புதியக் கல்விக் கொள்கையை உரு வாக்கத்தின் போது எப்படி அநீதியான முறையில் குறிப்பிட்டவர்களுக்கான கூட்டம், கருத்துக்  கேட்புகள் நடைபெற்றதோ அதுபோலவே தற்போதும்  நடந்துள்ளது. 

இதை ஒட்டுமொத்தமாக நிராகரித்து தற்போது கூறப்படும் கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில கல்வி நிறுவனங்களில் இணைய வழிகூட்டமாக நடத்தி மாணவர் ஒப்புதல் பெற்றதாக பொய்யான தகவலை சேகரித்துள்ளது. 

ஒட்டுமொத்ததில் இந்த தேசிய உயர்கல்விக் கட்ட மைப்பு வரைவு முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டிய தாகும். 

கட்டுரையாளர் : எஸ்எப்ஐ மாநில துணைத் தலைவர்

Friday, March 18, 2022

இலங்கை நெருக்கடி

நமது அண்டை நாடான இலங்கை பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மக்கள் கடுங்கோபத்தில் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். கொழும்பில் பழைய பாராளுமன்றத்தின் முன் மக்கள் கூடி முழக்கமிட்டு வருகிறார்கள். சில கடைகள் சூறையாடப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் வெறுப்பும் பசியும் படர்ந்துகிடக்கிறது.
டாலரின் மதிப்பு இலங்கை நாணயத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் கோதுமை, உற்பத்தி பொருட்கள், வாகனங்கள் மற்றும் இன்னும் பல பொருட்கள் நாட்டில் மக்கள் பெற்றுக் கொள்ள முடியா வண்ணம் மிகக்கடுமையாக அதிகரித்துள்ளது. 

சாதாரண ஒரு கிலோ அரசியின் விலை நிர்ணயம் பத்து  பதினைந்து ரூபாய் அதிகரித்திருந்தால் கூட சமாளித்திருப்பார்கள். ஆனால் ஆயிரம் ரூபாய் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த அத்யாவசிய பொருட்களும் கிடைக்காமல் திணறுகின்றனர்.
தினமும் மின்சாரம் 7மணி நேரம் அதற்கு மேலும் நிறுத்தப்படுகிறது. இப்படியான நிலைகளை தாண்டி சீனாவுடன் கைகோர்த்து பல கடன்களை வாங்கி குவித்துள்ளது, பல இடங்களை விற்று நாட்டின் கடன்கள் தீரவில்லை. சீனாவை திட்டிய நமது ஊடகங்கள் எதுவும் அந்நாட்டின் மிக மோசமான இனவாத மதவாத அரசியலை வலதுசாரி திட்டமிடலை கண்டிக்கவில்லை. 

கொரோனா காலத்தில் இலங்கை அரசுக்கு பல நாடுகளிலிருந்தும், உலக சுகாதார ஒன்றியத்தில்லிருந்தும் கோடிக்கணக்கான பில்லியன் டாலர்கள் உதவி செய்யப்பட்டிருந்தது. எதையும் உருப்படியாக செலவழிக்கவில்லை. கடனுக்கு மேல் கடன்.
நாட்டின் கடனை போக்க மக்களின் தங்க நகைகளையும் தந்து உதவலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கருவூலத்தில் எப்போதோ கைவைத்தாயிற்று. மக்களின் மீது கண்மூடித்தனமான வரி மட்டுமே இவர்களுக்கான தீர்வாக வைத்துள்ளார்கள். 

ஏன் இராஜபக்சே மற்றும் சிலோன் ஆளும் வர்க்க கும்பலின் சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்கள் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் வங்கிகளில் இருக்கும் கோடிக்கணக்கான பணம், 
சொகுசு கார்கள் , மனைவிகளின், பிள்ளைகளின் நகைகள், உறவினர்களின் வியாபரத்தில் இவற்றையெல்லாம் விற்று நாட்டின் கடனை அடைத்து மக்களை காப்பாற்ற செய்யலாம். அரசியல் கொள்கையில் இனவாதத்தில் மதவாதத்தில் இராஜபக்சே நம்ம மோடிஜீயின் அடிபொடி. அத்தகையோரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 
பணக்காரர்கள்மீது சொத்துவரி பதுக்கல் மற்றும் இலங்கை மக்களின் அடிப்படை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பலிடம் வரியை போட்டு வசிலிக்கலாம். கைபற்றலாம் அவ்வாறு செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும்.

ஆனால் இவை தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்களின் அன்றாட வாழ்வில் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் விலையேற்றி விட்டு இலங்கை அரசு மக்கள் அடித்து கொண்டு சாகட்டும் என விட்டுள்ளது .

''அத்தியவசியமற்ற புனரமைப்பு வேலைகள், மத்தள விமான நிலையம், மக்கள் பயன்பாட்டில் இல்லாத பலாலி விமான நிலையம் மட்டுமன்றி இன்னும் எத்தனை செய்ற்திட்டங்கள். எதுவும் வளர்ச்சிகாக இல்லை திட்டமிடலில் மிகப்பெரிய கோளாரை அரசு செய்துள்ளது'' என இலங்கை செய்தி கூறுகிறது.

 உண்மையான ஜனநாயக வழி திட்டமிடலே அந்நாட்டை காப்பாற்ற இயலும். அதற்கு அப்படியான அரசு அமைய வேண்டும். இந்தியா கொடுத்துள்ள 7,500 கோடி உதவி பாராட்டதக்கதுதான். ஆனால் அதையும் இந்த இராஜபக்சே கும்பல் விழுங்கி ஏப்பமிட்டுவிடும்.

#இலங்கை #SriLanka #crisis
 #rajapaksa #india #China

Monday, March 7, 2022

உலக உழைக்கும் மகளிர் தினம்.

International Working Women's day

உலக உழைக்கும் மகளிர் தினம்.

உலக தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக இந்த மகளிர் தினம் உள்ளது. இரத்தம் தொய்ந்த நமது போராட்ட வரலாற்றை நினைவு கூறும் தினம். 
மேதினம், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களை கொச்சைபடுத்துவது போலவே உலக மகளிர் தினத்தையும், திரைப்படம், கோலப்போட்டி, மியூசிக்சேர், சமையல் போட்டி, கலர்கலரான சேலை விளம்பரம், தள்ளுபடி, பிங் கலர் ஸ்கூட்டி ஆஃபர்... என இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூகம் கொச்சைபடுத்துகிறது. 
எழுத்தறிவு பெற்ற தலைமுறையினராகிய நாம் மார்ச் 8 வரலாற்றை நம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. குறிப்பாக முதலாளித்துவ ஊடக தற்குறிகளுக்கு நாம் கண்டிபாக சொல்ல வேண்டியுள்ளது.
நமது துவக்க காலத்தில் ரோசா லக்ஸம்பர்க், கிளாரா ஜெட்கின், அலெக்சாண்டரா கொலண்டாய் வர்க்க போராட்ட வரலாற்றை இவர்களுக்கு சொல்லியாக வேண்டும். ஓட்டுரிமை, சொத்துரிமை, மகப்பேறு மீது முடிவெடுக்கும் உரிமை, பேறு கால விடுமுறை, ஆண் பெண் சம ஊதியம் என முதலாளித்துவ நாடுகளுக்கு எடுத்துகாட்டாய் விளங்கிய சோசலிச நாடுகளை பற்றி பேச வேண்டும்.
  இந்திய சமூகத்தில் காலனியாதிக அடிமை தளையை தகர்ப்பதற்காகவும், நவீன முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தை எதிர்த்த நமது போராட்டத்தையும், ஆணாதிக்க சாதிய கொடுமைகளுக்கு எதிராய் நாம் நடத்திய போராட்டத்தையும் பெருமையோடு கொண்டாட வேண்டிய தினம்.
மேலும் நாம் அடைய வேண்டிய சோஷலிச சமூக லட்சியத்திற்கான வரலாற்று கடமையை முடிப்பதற்கான தெம்பை உரமேற்றிக் கொள்வதற்கான நாள். 
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, கல்வி வாளாகங்களில் குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவிகள், ஆசிரியைகள் வரை அவர்கள் மீது இழைக்கப்படும் பாலியல் அத்து மீறல்களுக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் வேகமாக முன்னெடுக்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் பாலின பாகுபாடின்றி கிடைக்க செய்வது, 8 மணி நேர வேலையை அனைத்து துறைகளிலும் உறுதிபடுத்துவது, திருமணம் குழந்தை பேறு உள்ளிட்டவைகளை பெண்களே முடிவெடுத்துக் கொள்ளும் உரிமை.. என பல்வேறு உரிமைகளை போராட்டங்களை முன்னெடுப்போம்...
இன்கிலாப் ஜிந்தாபாத், மகளிர் உரிமை ஜிந்தாபாத், வெல்லட்டும் வெல்லட்டும் மகளிர் தினம் வெல்லட்டும், மார்ச் 8 கோரிக்கைகள் வெல்லட்டும்.

#womensday #workingwomen #internationalwomensday #march8

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...