தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் 150ரூபாயை கடக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுபோல் நடந்தால் இந்தியா அடுத்த இலங்கையாக மாறும்...!!
மக்கள் உழைப்பிலிருந்து பெறும் ஊதியமும் விலைவாசியேற்றமும் சமவிகிதத்தில் இல்லாதபட்ச்சத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து இந்திய ரூபாய் மதிப்பும் மதிப்பிழந்து போகும். ஒரு டீயின் விலை 50,100 என குடிக்கும் நிலைமையும் ஏற்படும்.
ஆனால் ஒருபோது ஊதியமானது எளிய மனிதர்கள் பெறும் ஊதியம் முதல் மத்தியதர வர்க்கத்தினர் பெறும் ஊதியம் வரை விலையேற்றத்திற்க்கு ஏற்ப அமைந்ததே இல்லை. தலைகீழான விகிதத்திலேயே அமைகிறது. ஒரு பிரமிடைபோல் அவ்வாறான சம்பள உயர்வு ஊதியம் பெறுவோரிடம் மேலிருந்து கீழே குறைந்து கொண்டே தான் அமைகிறது.
தனக்கு கிடைக்கும் இத்தகைய அற்பமான கூடுதல் ஊதியத்தை பெற்றுகொண்டு மத்திய தர ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருந்தாலும் விவசாய தொழிலாளி வர்க்கம் வெகுண்டெழுந்து மாற்றத்தை உருவாக்கும். அத்தகைய மாற்றத்தை மக்கள் நிகழ்த்தும் போது கொள்கையளவிலான மாற்றமாக அமைய வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்கிறது.
இலங்கையில் அத்தகைய மாற்றத்தை அம்மக்கள் ஏற்படுத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு பேரழிவை நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும்
க.நிருபன்
No comments:
Post a Comment