Saturday, March 16, 2019

SFI tamilnadu blockade the coimbatore district collectrate office 

SFI tamilnadu blockade the coimbatore district collectrate office in denouncing the rapists who raped, tortured and took the sexual assault videos of   above 273 girls  at pollachi.The case was transferred to the CBCID and file the case in goondas act  by the SFI movement.
#Arrestpollachirapists
#sfitamilnadu
#sfi

போராட்டத்தின் வலிமை


(15-03-19)
புதுக்கோட்டையில் நேற்றைய தினம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதி கேட்டு கல்லூரி மாணவிகள் பெருந்திரளாக போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் தோழர் அரவிந்தசாமி மற்றும் மாவட்ட நிர்வாகி ஜனா ஆகியோர் வழிநடத்தியுள்ளார்கள். போராட்டத்தை ஒடுக்க எண்ணிய காவல்துறை கண்கானிப்பாளர் செல்வராஜ் தனது காவல் பரிவாரங்களுடன் இறங்கி போராட்டத்தை தலைமையேற்று பேசிவந்த அரவிந்த், ஜனா மற்றும் சில தோழர்களை குறிவைத்து கடுமையாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும் வாகனத்தின் உள்ளே வைத்து தாக்கியதில் அரவிந்த் மயக்கநிலையை அடைந்துள்ளார்.
இச்சூழ்நிலையில் போராட்டம் நடத்தி வந்த மாணவிகள் தங்கள் தோழனை தாக்குவதை கண்டு வாகனத்தை அரைமணி நேரத்திற்கும் மேலாக மறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸ் எவ்வளவு முயன்றும் வாகனத்தை மறித்த மாணவிகளை அப்புறப்படுத்த முடியவில்லை. பின் மாணவிகள் வாகனத்திற்க்குள்ளிருந்த தோழர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போராட்டத்தின் வீச்சையும் சங்கத்தின் வலிமையும் கண்டு மிரண்டு போன காவல்துறை அடக்குமுறையை கைவிட்டுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சங்கத்தின் தலைமையில் மாநிலச்செயலாளர் மாரியப்பன், பிரகாஸ் உள்ளிட்டோர் தலைமையேற்று முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் கண்கானிப்பாளர் செல்வராஜ் அரவிந்த சாமி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை இப்போராட்டம் நமக்கு காட்டுகிறது. மாணவர் ஒற்றுமையும், சமூகத்தின் மீதான உண்மையான காதலும் உள்ளவரை நம்மை எந்த அடக்குமுறையும் ஒன்றும் செய்துவிட முடியாது.

Thursday, March 14, 2019

பொள்ளாச்சி கொடூரம்

பொள்ளாச்சி கொடூரத்திற்க்கு எதிராக SFI தலைமையில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. கைது செய்யப்பட வேண்டிய 20 மேற்பட்ட கயவர்கள் உல்லாசமாக சுற்றி வருவதை தடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

அதிமுக அரசியல் புள்ளிகள், பொள்ளாச்சி ஜெயராமன், அவரின் மகன்களை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகள் வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு தம்பி செல்லாத வகையில் பாஸ்போர்ட் முடக்கம், போலீஸ் அலார்ட் செய்ய வேண்டும்.

குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் பொள்ளாச்சி எஸ்.பி பாண்டியராஜன்,
டி.எஸ்.பி ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் பணியிடை மாற்றமாவது செய்யவேண்டும். சுதந்திரமான விசாரணை அப்போது தான் நடைபெறும்.

ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதால் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்/கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்னின் வழக்குரைஞர்கள், சகோதரர் உள்ளிட்டு குற்றவறவாளிகளுக்கு எதிராக வலுவாக செயல்படும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அரசியல், மதம், சாதி, ஊர் உறவினர் நெருக்கடி இல்லாத வகையில் நியாயமான வழக்குரைஞர்கள் கூடுதலாக இதில் பொதுநல அடிப்படையில் ஆஜர் ஆக வேண்டும்.

பாதிக்கப்பட்ட 273க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்திடும் வகையில் பெண்களின் பெயர் முகவரி அனைத்து இரகசியமும் பாதுகாக்கப்படும் வகையில் புகாரை பெறும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்திடாத வகையில் சைபர் குழு மூலம் பாதுகாப்பதை உறுதி செய்து. குற்றவாளிகளிடமுள்ள அனைத்து வீடியோக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட நியாயமான நடவடிக்கைகளை அரசு செய்யாமல் எருமை மாட்டில் பெய்த மழையாக சொரணையற்று இருக்கும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை.

க.நிருபன் SFI
14.03.2019

#Voice4PollachiVictim

Saturday, March 9, 2019

கல்வி சூழல் - 2018

நமது கல்வி வரலாற்றின் பின்புலத்தை பொறுத்தவரை இந்தியாவில் கல்விமுறை சிந்து சமவெளி
காலம் துவங்கி பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது. அரசர்கள், வணிகர்கள், கணக்காளர்கள்,
புலவர்கள் மற்றும் கண்காணிப்பளர்கள் என ஆரம்பக்காலத்தில் தங்கள் குடும்ப பணியாக தலைமுறை
தலைமுறையாக தங்கள் தொழில் சார்ந்த கல்வியையும், குருகுலக் கல்வியையும் கற்றும் கற்றுகொடுத்தும்
வந்தார்கள். வேதகாலம், பெளத்தம் மற்றும் சமணர்களின் காலம், சைவ, வைணவ காலம், இஸ்லாமியர்கள்
மற்றும் ஆங்கிலேயர்கள் காலம் வரை கல்வி முறை பலவடிவங்களில் இருந்து வந்திருந்தாலும், நாம் இன்று
கற்று வரும் திட்டமிடப்பட்ட அல்லது முறையானக்கல்வி (FORMAL EDUCATION)என்பது ஆங்கிலேயர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட “மெக்காலே கல்வி” முறையே ஆகும். அதே போல பதினாறாம் நூற்றாண்டு வரை
சாதாரண மக்களுக்கான திண்ணை பள்ளிகளும் இருந்து வந்துள்ளது.
கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயர் காலத்தில் வுட் அறிக்கை, ஹண்டர் கல்விக்குழு துவங்கி
இன்று வரை பலஅறிக்கைகளும், குழுக்களும் போடப்பட்டுள்ளது. அதே போல் தொடக்கக்கல்வியை ஆறு
வயது முதல் பத்துவயது வரை அரசே தரவேண்டும் என பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் கோபால
கிருஷ்ண கோகலே அவர்கள் தீர்மானம் முன்வைக்க அத்தீர்மானத்தை 13 பேர் மட்டுமே ஆதரித்து, 38 பேர்
எதிர்த்த 1910 ம்  ஆண்டு துவங்கி இலவச கட்டாயக் கல்வியுரிமை சட்டம் 2010 ம் ஆண்டு
நடைமுறையாகும் வரை கல்வியை அரசே தரவேண்டும் எனக்கூறவே நூற்றாண்டுகள் போராட்ட
வேண்டியுள்ளது. கல்வியில் சமூக நீதிக்கான கோரிக்கையும் இந்நூறாண்டு போராட்டத்தில்
இழையோடியுள்ளது. 1882 ம் ஆண்டு ஹன்டர் கல்விக்குழு முன் ஜோதிராவ் பூலேவும், சாவித்ரிபாய்
பூலேவும் முன்வைத்த கல்விக்கான சமூகநீதி கேள்விகள் இன்றும் தொடர்கிறது.
மிகமுக்கியமாக 1917ல் மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தம் தொடக்கக்கல்வியை உள்ளாட்சி
அமைப்பிடம் கொடுத்தது, பின் 1935 ல் கல்விப்பொறுப்பு மாநில அரசுக்கு மாற்றப்பட்டது. விடுதலைக்கு
பிறகு பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும் தற்போது ஆளும் பிஜேபி அரசு கல்வியை
மத்தியப்பட்டியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. 1937ல் காந்தியின் ஆதாரக்
கல்விக்கொள்கை உருவானது. பிறகு 1944 ம் ஆண்டு சார்ஜண்ட் அறிக்கை 3 முதல் 6 வரை முன்பருவமும்,
6 முதல் 14 வரை  கட்டாய இலவச தொடக்கக்கல்வி கொடுக்க வேண்டும் என்றது. 1948-49
இராதாகிருஷ்ணன் அறிக்கை முன்வைத்து 1950 ஆண்டு அரசு ஏற்றது. மேலும் ஏ.எல்.முதலியார்
ஆய்வுக்குழு உயர்நிலைப் பள்ளிக்கல்வி குறித்து கூறியது.
கல்வி குறித்தான குழுவில் மிகமுக்கியமாக 1962 – 64 கோத்தாரி கல்விக்குழு பொதுக்கல்வி,
அருகாமை பள்ளி அரசே செய்ய வேண்டும் என்பன பற்றி பேசியது. இன்றுவரை இதன் பரிந்துரைகள் பல

விவாதமாகவே உள்ளது. 1965 ம் ஆண்டுகளில் மும்மொழிக்கல்விக் கொள்கையை இராஜாஜி அரசு
அறிமுகப்படுத்தியது அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு  எதிரான போராட்டமாக
நடந்தது. பள்ளிக்கல்வியை கல்வித்துறைக்கு 1971 ல் மாற்றப்பட்டது. பின் 1975 ல் கல்வி மாநிலப்
பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதே போல 1982ம் ஆண்டில் தான் எம்ஜிஆர்
முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் அரசு ஊழியராக்கப்பட்டனர்.
நமது கல்விக் கொள்கையில் ஓரளவு சுயசார்பான வளர்ச்சியை தனியாரிடம் கொடுப்பதற்காக 1986
புதியக்கல்வி கொள்கை முன்வைக்கப்பட்டு 1992 ல்இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1991
இராமமூர்த்தி கல்விக்குழு, 1991– எழுதறிவுத்திட்டம், 1993 யஷ்பால் கல்விக்குழு, 1998 அம்பானி பிர்லா குழு,
2001 அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.எ), 2005ம் ஆண்டு செயல் வழிகற்றல் (எ.பி.எல்.)
அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 ல் கல்வியுரிமை மசோதா 2005 இறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
பின் 2009ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2010ம் ஆண்டு ஏப்ரல் 1 நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. 2009
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.எ).
நமது நாட்டில் தற்போதுள்ள கல்விமுறை என்பது மெக்காலே கல்வியாகவே இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் எடுபுடி வேலைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்ட குமாஸ்தா கல்வி முறையாகும்.
இருப்பினும் பல அடித்தட்டு சமூகத்திற்கு இதன் வழியே தான் கல்வி சென்று சேர்ந்தது. ஆனால்
விடுதலைக்கு பிறகும் எந்தவித மாற்றங்களும் இன்றி அதே மெக்காலே கல்வியை திணித்து வருவது
நியாயமானது இல்லை. தற்போது பிஜேபி இக்கொள்கைகளோடு இணைத்து புதியக் கல்விக் கொள்கை
என்ற பெயரில் இந்துத்துவ குலக் கல்வித் திட்டத்தை புகுத்தி வருகிறது. பாடத் திட்டங்களை மாற்றி,
புராணக்கதைகளை அறிவியலாகவும், வரலாறாகவும் எழுதி வருகிறது. சமஸ்கிருதத்தையும், இந்தியையும்
தன்னிச்சையாக அனைத்து மாநிலங்களிலும் திணித்து வருகிறது. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து
பொதுபட்டியலுக்கு காங்கிரஸ் கொண்டு சென்றது. தற்போது அதை மத்தியப்பட்டியலுக்கு
கொண்டுசெல்லும் நடவடிக்கையை பிஜேபி செய்து வருகிறது.  மத்திய மனிதவளத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் இந்தியா முழுமைக்கு ஒரே வகையான கல்வி போதும் என்கிறார். இது எந்த வகை
நியாயம் முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் கொண்ட நமது நாட்டில் ஒரே கல்வி சாத்தியமல்ல.
மேலும் HEERA (higher education empowerment regulation agency) என்ற உயர் கல்வி மேம்பாடு
மற்றும் ஒழுங்குபடுத்தும் நிறுவனம் என்ற பெயரில் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய
தொழிற்நுட்ப கவுன்சிலை கலைக்கப் போகிறது. தற்போது இந்திய உயர்கல்வி ஆணையம் (Higher
Education Commission of India - HECI)  என்ற பெயரில் UGC யை கலைத்துள்ளது. அதற்கான கருத்துக் கேட்பு
காலமும் தற்போது முடிந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு more power என்ற வார்த்தையை
ஆளும் பிஜேபி அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஜனநாயகத்தின் கட்டமைப்பு அனைத்தையும்
உடைத்து ஒருநபர் கீழ் கொண்டுசெல்லும் நடவடிக்கையே இது. ஜனநாயக இந்தியாவின் முக்கியமான
அம்சமாக இருந்த திட்டக்  கமிஷனை கலைத்து நிதி ஆயோக் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும்
குவித்து வருகிறது.
இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக  BAR COUNCIL, NCERT, MCI போன்ற அமைப்புகளையும்
கலைக்க உள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்த துறையையும் ஒருநபர் ஆதிக்கத்தின் கீழ்கொண்டு செல்லும்
ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்து வருகிறது. அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தையும்,
தனியாருக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் திறந்துவிட இருக்கிறது. எல்லா படிப்புகளுக்கும் தேர்வுகளை
வைத்து வடிகட்டும் வேலையை துவங்கியுள்ளது. தற்போது நடந்த நீட் தேர்வில் தேசிய அளவில் தலித்
மற்றும் பழங்குடி மாணவர்கள் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே தேர்ச்சியுற்றனர் என்பதே இதற்கு
மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
நிதிசார் பல்கலைக் கழகம் (financial autonomy) என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுக்கு
கொடுத்துவந்த நிதியை முழுவதும் குறைத்து தானே நிதியை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என
கூறியுள்ளது. அரசுடைமையாகவுள்ள பல்கலைக்கழகங்களை தனியார்வசம் கட்டுத்திடவே
இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் அனைத்துப் படிப்புகளுக்கும் கட்டணம் வசூல் செய்யவும்,
கட்டணத்திற்காக புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டிய சூழல்ஏற்படும் சாதாரணமற்றும் நடுத்தர
மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத சூழல் ஏற்படும்.

இந்தியாவில் நவீன தாராளமைய கொள்கை அமல்படுத்தப்பட்டு அனைத்து அரசு
நிறுவனங்களையும் சூறையாடிவரும் சூழலில் கல்வியை முழுவதும் விற்பனையாக்க 2000 ம் ஆண்டு
வாக்கில் அம்பானி பிர்லா பெயரில் ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதை அமல்படுத்தவே
இன்றுவரை வேலைகள் நடந்துவருகிறது. அந்தவகையில் ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசின் அதே கல்விக் கொள்கையையே தற்போதைய தேசிய ஜனநாயக முன்னணியும் கடைபிடித்து
வருகிறது.. பத்தாண்டுகளாக மன்மோகன் சிங் முயற்சித்ததை சில ஆண்டுகளிலேயே நரேந்திர மோடி
சாதித்து அம்பானி, அதானியின் கும்பல்களுக்கு மகிழ்ச்சியாகஇருக்கலாம்  ஆனால் மாணவர்கள்
சொல்லொண்ணா துயரத்தில் ஆட்பட்டுவருகிறார்கள்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகையை திட்டமிட்டுக் குறைத்து
வருகிறது. மத்திய அரசின் யுஜிசி நெட் பெலோஷிப் , பல்கலைக் கழகத்தின் நான்நெட் பெலோஷிப், ராஜீவ்
காந்தி தேசிய பெலோஷிப்  போன்ற பல உதவித்தொகைக்கான மாணவர் எண்ணிக்கையையும் குறைத்து
வருகிறது. உதவி பெரும் ஆய்வு மாணவர்களையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆய்வுக்கான மாணவர் எண்ணிக்கையையும் சரிபாதியாக குறைத்துள்ளது. பேராசிரியர்களின் கைட்ஷிப்
எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் இதை செய்து முடித்துள்ளது. உலகிலேயே மிகக்குறைவாக
ஆய்வுக்கட்டுரைகள் வரும் நாடாக இந்தியா உள்ள சூழலில் இது மேலும் நிலைமையை மோசமாக்கும்.
கல்வி நிலைய ஜனநாயகதை பாதுகாத்திட 2006 ல் லிண்டோ கமிட்டி ஒரு பரிந்துரை செய்தது.
அதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை போல இந்தியா முழுவதும் அனைத்து
வளாகங்களிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றது. ஆனால் இன்று ஜேஎன்யு வின் ஜனநாயகமே
மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள் மீதும்
கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதுமான மதவாத தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
ரோஹித் வெமுலா முதல் நஜீப், முத்துக்கிருஷ்ணன் வரை கல்விக்கூடம் கொலைகூடமாக மாறியுள்ளது.
குல்மெஹர் கவுர் என்றமாணவி “தன் தந்தை கார்கில் போரில் பாகிஸ்தானால் கொல்லப்படவில்லை,
போரினால் கொல்லப்பட்டார்” என்று கூறியதற்காக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் அந்த பெண்ணை
“பாகிஸ்தானிற்கு ஆதரவானவள்” என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பலாத்காரம் செய்வோம் எனக் கூறி
தொடர்கொலை மிரட்டல் விடுத்தது. இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதோடு, ஜவஹர்லால்
நேரு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதற்கான பணிகளை மத்தியஅரசு துவங்கியுள்ளது. கடந்தாண்டு
மட்டும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் 900 இடங்கள் வரை ஓராண்டுக்கு நிரப்பிவந்த மாணவர்
சேர்க்கையின் எண்ணிக்கையை குறைத்து வெறும் 100 இடங்களுக்கு மட்டும் அறிவித்திருந்தது.
கல்வி என்பது உயர்தட்டு ஜாதி மக்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் அதற்கடுத்தடுத்த
நிலைகளிலேயே இருக்க வேண்டும் எனவே கல்விக் கட்டணம் உயர்த்தப்படும், கல்வி உதவித்தொகை
நிறுத்தப்படும், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மாட்டுச் சாணியில்
விண்வெளி ஆராய்ச்சியும், கோவில் கழிவு நீரில் மருத்துவ ஆராய்ச்சியும் செய்ய நிதி வாரி இறைக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிக்கு போகாமல் யோகா, தியானம் செய்தால் அர்ஜுனா விருது வழங்கப்படும்.
மொத்தத்தில் பாபா ராம்தேவும், சத்குருவும் கல்வி தந்தைகள் ஆக்கப்படுவார்கள். தனியார் நிறுவன
முதலாளிகள் துணைவேந்தர்களாக ஆக்கப்படுவார்கள் என்பதே நிதர்சன் உண்மை.

தமிழக கல்வி சூழல்

மத்திய அரசின் அதே தாராளமய தனியார்மய கொள்கைகளை தமிழகமும் கடைபிடிப்பதால் கல்விக்
கொள்கையில் பெரிய மாற்றமின்றியே உள்ளது. ஆளும் கட்சிகளின் ஒரு அமைச்சர் பதவியும் லஞ்சமும்,
ஊழலுமே கல்வி துறையாக பார்க்கப்படுகிறது. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக கல்வி
பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிக்  கல்லூரிகளின் மோசமான லாபவெறி அரசு கல்வி நிறுவனங்களின்
வளர்ச்சியற்ற தன்மையே தமிழக கல்வியில் காணப்படுகிறது.
பள்ளிக் கல்வி
தற்போது நமது மாநிலத்தில்  பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்றுள்ளது.
பள்ளிக்கல்வி என்பது மழலையர் கல்வி தவிர்த்து மொத்தம் 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வியை இன்று படித்து
வருகிறோம். அதேபோல் இம்முறையிலான கல்வியை இங்கு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும்

பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசு கல்வி திட்ட பள்ளிகள் (சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.ஈ),
கேந்திர வித்தியாலயம், ஆங்கிலோ இந்தியன், மாண்டசரி, மதரசா, அமெரிக்கன் பள்ளி (ஐ.ஜி.சி.எஸ்.இ)
மற்றும் ஓரியண்டல் பள்ளிகள் உள்ளன. நமது நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக சமச்சீர்க்கல்வி
இன்று நடைமுறைபடுத்தப்பட்டாலும் அது பாடநூலாக மட்டுமே சுருங்கிப் போனது. எனவே இன்றும்
சாதாரண மாணவர்களுக்கும் உயர்தட்டு மாணவர்களுக்குமான வேறுபாடு அதிகமாகவே உள்ளது.
தற்போது பள்ளிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 36,505 அரசுப் பள்ளிகளும்,
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 8266 ம் என்ற எண்ணிக்கையிலும், தனியார் பள்ளிகள் 10896 ம்
என்ற எண்ணிக்கையிலும் உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 55,667 பள்ளிகளில் 1,35,05,795 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில்
அதிகப்படியாக மேல்நிலை பள்ளிகளில் மட்டும் 62,56,434 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தனியார்
பள்ளிகளில் 43,51,054 மாணவர்களும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 33,01,845
மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 58,52,896 மாணவர்களும் பயின்றுவருகிறார்கள். ஒப்பீட்டளவில் அரசு
பள்ளிகளை விட குறைவாக உள்ள தனியார் பள்ளிகளில் தான் பள்ளி மற்றும் மாணவர்களின் விகிதாச்சார
அடிப்படையில் அதிகமான மாணவர்கள் பயின்று வருவதை அறிய முடிகிறது. அரசுப் பள்ளிகளில்
பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதற்கடுத்தாற்
போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் பயின்று வருவதும் அரசுப்பளியில்
மாணவர்கள் விகிதம் அதைவிட குறைவு என்பதும் வேதனையான உண்மையாகும்.
தமிழக அரசு மாணவர்களுக்கு கடந்த காலங்களில் சத்துணவுத்திட்டம் துவங்கி சீருடை இலவச
பாடநூல் என பல சலுகைகளை கொடுத்து வந்துள்ளது. தற்போது தமிழக அரசு கிட்டத்தட்ட 14 பள்ளி
உபகரணங்கள் (சைக்கிள், பேனா, பென்சில், பேக்...... ) என நீளும் விலையில்லா பொருட்கள்
மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.நமது இந்திய
மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாய் தமிழகம் முழுவதும்
பல்வேறு கல்வி முறையாக பிரிந்து கிடந்த பள்ளிக் கல்வியை ஒரே கல்வி முறைக்குள் கொண்டுவந்திடும்
வகையில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்திட செய்தோம். 2012 ம் ஆண்டில் மாணவர்களின் புத்தகச்
சுமையைக் குறைக்கும் வகையில் பருவமுறை பாடத்திட்ட அறிமுகம் செய்தது. 2012 ல் தொடர்  மற்றும்
முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகம்செய்யப்பட்டது . தற்போது மதிப்பீட்டு முறையிலும் சில மாற்றம்
வந்துள்ளது.
ஆசிரியர்களை பொறுத்தவரை 36,505 அரசுப் பள்ளிகளில் 2,09,820 ஆசிரியர்கள் உள்ளனர்.
அந்தவகையில் கணக்கிட்டால் ஒருபள்ளிக்கு 6 ஆசிரியர்கள் தான் உள்ளனர்.  ஆனால் 10,896 பள்ளிகளை
கொண்ட தனியார் பள்ளிகளில் 2,44,716 ஆசிரியர்கள் உள்ளனர். அதாவது ஒரு பள்ளிக்கு 24 ஆசிரியர்கள்
என்ற வகையில் உள்ளனர். ஒப்பீட்டளவில் அரசு பள்ளி ஆசிரியர்களின் விகிதப்படி பார்த்தால் 4:1 என்ற
விகிதத்தில் நமது அரசு பள்ளிகள் அதல பாதாளத்தில் கிடக்கிறது. தற்போது பள்ளிக்கல்வி அமைச்சர்
செங்கோட்டையன் அவர்களின் சமீபகால பேட்டி ஒன்றில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்
 காலிபணியிடம் மொத்தம் 4,542 நிரப்பப்படும் என அறிவித்தார். உடனே ஊடகங்கள் இவ்வளவு
காலிபணியிடங்களா வியந்து எழுதி நம்மையும் நம்பவைத்து அதாவது தோழர்களே தனியார் பள்ளிகளை
ஒப்பிட்டால் விகிதாசார அடிப்படையில் இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசுப்பள்ளிக்கு மேலும்
தேவை என்பதே உண்மையாகும். ஊதியம் என்பதை பார்த்தோமானால் தலைகீழாக உள்ளது, அரசு பள்ளி
ஆசிரியர்கள் சராசரியாக 40 ஆயிரம் வாங்கினால் தனியார் பள்ளிகளோ 15 ஆயிரம் தருவதே ஆச்சரியமாக
உள்ளது. இந்த தலைகீழ் விகிதங்களை நாம் சரியாக எடுத்துரைத்தால் அனைத்து தரப்புகளையும்
அணிதிரட்டலாம்.
பள்ளிக்கல்வி செயலாளர் உதயச்சந்திரன் பல்வேறு மாற்றங்களை கடந்த காலங்களில் பள்ளிக்
கல்வித் துறையில் புகுத்தியுளார். புதிய பாடத்திட்ட வரைவில் பல நல்ல மாறுதல்கள் இருப்பதை பார்க்க

முடிந்தது. ரேங்க் முறையை ஒழித்தது, பதினொன்றாம்  வகுப்புக்கு தேர்வு நடத்திட எடுத்த முடிவு என சில
ஆரோக்கியமான மாற்றங்கள் இருந்தது. அதே நேரத்தில் இது போதுமானதில்லை. கல்வியுரிமை சட்டம்
இன்றளவிலும் முழுமையாக அமலாக்கவில்லை. நிதி குறைந்துள்ளது. புதிய பள்ளிகள்
உருவாக்கப்படவில்லை. கேரளாவில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து ஒன்றரை லட்சம்
மாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்த்துள்ளது. நம் தமிழகம், இருக்கும் மாணவர்களை பாதுகாப்பதே
போதும் என்றே உள்ளது.
அதே போல தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிரான நமது போராட்டமும் அதை
தொடர்ந்து சிங்காரவேலு, ரவிராஜ பாண்டியன் துவங்கி தற்போது மாசிலாமணி கமிட்டி வரை
போடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் இதை பொருட்படுத்துவதாக இல்லை பல்வேறு
பெயர்களில் மாணவர்களிடம் பெரும் தொகையை கல்விக் கட்டணமாக வசூல் வேட்டையை இன்றும்
நடத்தி வருகிறது.
உயர்கல்வி
தமிழகத்தின் உயர்கல்வி மிகமோசமான சூழ்நிலையில் உள்ளது. மதுரை காமராஜர்
பல்கலைகழகத்திற்கு உட்பட்ட  தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்த பேரம்பேசிய
நிர்மலாதேவி பிரச்சனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரை சென்றதே இம்மோசமான
சூழலுக்கான வெளிப்பாடு. கடந்த மூன்று ஆண்டுகளில் பத்து துணைவேந்தர்கள் வரை
காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்து கடந்தாண்டுகளில்தான் நியமித்தது. அதிலும் மத்திய
ஆர்எஸ்எஸ் கும்பலின் சேவகர்களை சட்டப் பல்கலைக்கழகத்தில், அண்ணா பல்கலைக்கழக்தில், இசை
பல்கலைக்கழகத்தில் நியமித்தது. தேடுதல்குழு(Searching committee) அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை
மதியாமல் ஆளுநரின் நேரடி தலையீட்டில் இந்நடவடிக்கைகள் நடந்துள்ளது.
நம் மாநிலத்தில் 10 கலை அறிவியல் 1 தொழிற்நுட்பம், 1 கல்வியல், 10 திறந்தநிலை என  மொத்தம்
23 மாநில பல்கலைக் கழகங்கள் உள்ளது. அதுபோக இரண்டு மத்திய பல்கலைக் கழகங்கள், 1 அரசு உதவி
பெரும் பல்கலைக் கழகம் , 28 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் உள்ளது. மருத்துவக் கல்லூரியை
பொறுத்தவரை 28 அரசு மருத்துவக் கல்லூரிகள், 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை 7 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும்
பொறியியல் கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், 618 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்
உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னாள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட பொறியியல்
படிப்புகளின் விற்பனை குறைந்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும்
கலந்தாய்விலும் கணிசமாக குறைந்து வருவது நிதர்சனமான உண்மையாகும். தொழிற்நுட்பக் கல்லூரிகளில்
518 பாலிடெக்னிக் கல்லூரிகளும் மேலும் சென்னை ஐ.ஐ.டி , திருச்சி என்.ஐ.டி. ஆகிய அரசு
தொழில்நுட்பக்கல்லூரியும்  உள்ளது.
கலைஅறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை நமது தொடர்ச்சியான போராட்டத்தின்  விளைவாக
37 பல்கலைக்கழக உறுப்புக்கு கல்லூரிகளை அரசு கல்லூரியாக சமீபத்தில் அறிவித்துள்ளது. 2003 ம்
ஆண்டு 67 நாட்கள் நாம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் முதல் இன்றுவரை நாம் நடத்திய
இயக்கங்களின் விளைவாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 83 அரசு கலைஅறிவியல் கல்லூரியும், 139
அரசு உதவிபெறும் கல்லூரியும், 496 சுயநிதிக் கல்லூரியும் என மொத்தம் 718 கல்லூரிகள் உள்ளன.
அதுபோக 11 உடற்கல்விக் கல்லூரி, 734 கல்வியல் கல்லூரிகள், 4 ஓரியண்டல் கல்லூரிகளும் உள்ளன.
மேலும் பள்ளிக்  கல்லூரிகள் என மொத்தம் 5000 மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன.
அரசுக் கல்லூரிகளை பொருத்தவரை திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும், போதிய
எண்ணிக்கையில் இல்லை கிட்டத்தட்ட 4500 மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல்
உள்ளது. பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இருக்கும் கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது.
 போதிய அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இருப்பதில்லை. விளையாட்டு உபகரணம்,
அறிவியல் உபகரணம்இருப்பதில்லை. இருக்கும் அறையை பல கல்லூரிகளில் பூட்டிவைப்பதும் நடக்கிறது.

இன்றளவிலும் கழிவறை வசதி எண்ணிக்கைக்கும் ஏற்ப உத்தரவாதப்படுத்தவில்லை. மாணவர்களின்
ஜனநாயக உரிமை அறவே அனுமதிப்பதில்லை.
தனியார் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் கடுமையான அடக்கு
முறைகளுக்கு உள்ளாகிறார்கள். அதே போல் மாணவர்கள் தற்கொலைகளும் கடந்த பத்தாண்டில்
மட்டும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

-க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

தமிழக அரசியல் சூழல் - 2018

விடுதலை கண்ட இந்தியாவில், சமூக நீதி தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் தமிழ்நாடு தான்
என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நாட்டு விடுதலைக்குப் பிறகு 20 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சிப்
பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சி, 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா அவர்கள்
தலைமையில் அமைந்த கூட்டணியால் வீழ்த்தப்பட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தற்போது
வரை 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இரண்டே கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. திமுகவும்,
அதிமுகவும்  மாறி, மாறி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத
அளவுக்கு இங்கு இரு துருவ அரசியலே கொடி கட்டி பறக்கிறது. தமிழக மக்களின் வாக்குகளை பெற்று
ஆட்சி செய்த இரு கட்சிகளின் தலைமையும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்ன
என்று திரும்பி நோக்கினால் வேதனை தான் மிஞ்சுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய
பங்காற்றிய வேளாண்மை தொழில் வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து
பூஜ்ஜியத்திற்கும் கீழே போய்விட்டது. வேளாண் தொழிலுக்கு அடுத்த நிலையிலிருந்த நமது பாரம்பரிய
நெசவுத் தொழில் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது.
தமிழகத்தில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் ஆட்சியாளர்களால்
சூறையாடப்பட்டன. ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, மலையளவு இரு கட்சிகளும்

பணத்தைக் குவித்துக் கொண்டன. நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும்
சிற்றோடைகள் புதர் மண்டி, தூர்ந்து போயின. இயற்கை கருணை காட்டும் போதெல்லாம் பெய்யும்
பெருமழை விழலுக்கு இறைத்த நீராயிற்று. குடிக்க தண்ணீர் இன்றியும், விவசாயத்திற்கு போதிய நீர்
இன்றியும், கால்நடைகளைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கும் தமிழ்நாட்டு கிராமங்கள் வறட்சியின்
கோரப் பிடியில் சிக்கி சீரழிந்ததற்கு திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தான் காரணம். தொலைநோக்கு
திட்டங்களும், தூய நிர்வாகமும் அறம் சார்ந்த நல்லாட்சியும் விடைபெற்று பல்லாண்டுகள் ஆகிவிட்டன.
வெற்று ஆடம்பர அரசியலும், விளம்பர மோகமும், குடும்ப ஆட்சியும், அருவருக்கத்தக்க வகையில்
கோலோச்சி வருகின்றன. தலைமைச் செயலகம் முதல் உள்ளாட்சி நிர்வாகம் வரை எங்கும், எதிலும்
லஞ்சமும், ஊழலும் வியாபித்து விட்டன. ஒட்டுமொத்த  ஆட்சி நிர்வாகத்திலும் புற்றுநோய் என ஊழல்
புரையோடிக் கிடக்கிறது.
ஏழை, எளியோருக்கு சுயமரியாதை மிக்க வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, அவர்களை
இலவச போதைக்குள் தள்ளி வாக்கு அறுவடைக்கு பயன்படுத்தி வரும் அவலம், இந்திய நாட்டில் திமுக,
அதிமுக ஆட்சியாளர்கள் தொடங்கி வைத்த சீரழிவு கலாச்சாரம் ஆகும். இலவசமாகத் தர வேண்டிய
கல்வியும், மருத்துவமும், விற்பனை பண்டம் ஆகி விட்டன.
இலவசங்களை வாரி இறைப்பதற்கு அரசுக் கருவூலம் இடம் தராததால் மதுக்கடைகளை திறந்து
வைத்தனர். இன்று தமிழ்நாடே குடிநோய்க்கு அடிமை ஆகி கிடப்பதற்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்
தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆட்சிப் பீடத்திலிருப்போரின் மதுபான உற்பத்தி ஆலைகள் தான்
‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு மதுப்புட்டிகளை விற்பனை செய்கின்றன. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள்
குடும்பத்தினர் அல்லது பினாமிகள் நடத்தும் மதுபான ஆலைகள், மதுபான கொள்முதலில் பல்லாயிரம்
கோடிகளை குவித்து குபேர குடும்பங்களாக திகழ்கின்றனர். ஆனால் சாதாரண, ஏழை, எளிய மக்களின்
குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி, வருமானத்தையெல்லாம் மதுபானக் கடைகள்
பறித்துக் கொண்டதால், பட்டினி கிடக்கும் பரிதாபம் நீடிக்கிறது.
தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறி சக்திகள் சாதிய மோதல்களை திட்டமிட்டு
நடத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள்
தொடர்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகின்றன.
தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருப்பது திராவிட அரசியல் கடந்த 50 ஆண்டு காலமாக
தமிழகத்தை திமுக வும் அதிமுக வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளது. திராவிட அரசியலின் அடிப்படை
நோக்கமாக முன்வைக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கை மெல்ல கரைந்து மாநில சுயாட்சி கோரிக்கையாக
மாறியது. மாநில சுயாட்சி குறித்து இன்றளவிலும் பேசப்பட்டு வந்தாலும் துவக்க கால வேகமோ,
உறுதியோ இல்லை அதுவும் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக விற்கும் மாநில சுயாட்சிக்கும்
நேரெதிரான பொருத்தமே இருக்கும். சுயமரியாதை, பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதியொழிப்பு
போன்ற இதர அடிப்படையான சில திராவிட கொள்கைகளை ஒருசில சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமே
மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. பெரியார் துவங்கிய திராவிடர் கழகம் பெரியாருக்கு பிறகு
தமிழகத்தில் ஆளும் கட்சிகளாக இருந்த திமுக, அதிமுக வைவிட சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும்
செய்துவிடவில்லை. ஒருசில கூட்டங்கள் இயக்கங்கள், விருது நிகழ்ச்சிகள் என பழைமையான மன்னர்
கால அரசியலை விட்டு நகரவில்லை. மற்ற திராவிட கட்சிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போராட்டம்,
இயக்கம் போன்ற நிகழ்வுக்கு மட்டுமே பங்கேற்பதாக இருந்து விடுகிறது.
பழமையான திராவிட அரசியல் எனும் சீர்திருத்தவாத சமூகவாத  கட்சிகளின் அரசியல் போதாமை
மிகப்பெரிய தேக்கத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும், கலைஞரின்
மரணமும் தமிழக அரசியலில் பல வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக ஊடகங்கள்
விவாதித்து வருகிறது. ரஜினி,கமல் அரசியல் பிரவாகம் முதல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழக
அரசியல் சுருங்கிப்போயுள்ளது வரை இந்த மாற்றத்தை நாம் பார்க்க முடியும். ஆனால் இதுவொன்றும்
நம்மை போன்ற முற்போக்கு அமைப்புகளுக்கு ஆச்சரியமான மாற்றம் ஒன்றுமில்லை மாநிலத்தின் வர்க்க
நலன் சார்ந்து பிரதேச முதலாளிகள் தங்களுக்கான அரசியல்வாதிகளை இப்படி பலவகையில் மக்கள்
மத்தியில் திணிப்பது வரலாற்றில் நடந்துவரும் நிகழ்வுதான். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என
தமிழக முதலாளிகளுக்கு சாமரம் வீசிய திராவிட கட்சிகள் ஊழலும், சொத்துக் குவிப்பும், பழையவசனம்

தலைகீழாக மாறி போனதாகவே உள்ளது. இந்திய பெருமுதலாளிகளின் லாபவெறி போட்டியில் தன்னை
நிலைநிறுத்திக்கொள்ள தமிழக முதலாளிகளுக்கு ஒரு குரங்குபொம்மை தேவைப்படுகிறது. அது ரஜினியோ,
கமலோ, செயல்தலைவர் ஸ்டாலினோ, அன்புமணியோ, சீமானோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் இனி எடப்பாடி, ஓபிஎஸ் அரசியல் மரக்கப்பல் தமிழகத்தில் மூழ்கிப்போன துருப்பிடித்த
தேவையற்ற பொருளே.
நாம் இதுபோன்ற பெருமுதலாளிகளின் பகடைக்காய் உருட்டலுக்கு மசிந்துகொடுக்கும் அரசியலை
 ஓங்கி மிதித்து விட்டு அனைவருக்குமான சோஷலிச அரசியலை இந்திய, தமிழக மாணவர்களின்
உள்ளக்குமுறலில் இருந்து முன்னெடுப்பதே சரியாக இருக்கும். அரசியலின் விரிவான வரலாறு, அறிவியல்,
சமூக விஞஞானம், பகுத்தறிவு, கலை, பண்பாடுகளை மாணவர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக நாம்
கொண்டுசெல்வதே இதை சாத்தியமாக்கும்.
இன்றைக்கும் தமிழக  மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் உண்மையான இயக்கங்கள்
பின்பு திரள்வதும் நடந்துதான் வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ
கார்பன், ஸ்டெர்லைட், எட்டுவழி சாலை எதிர்ப்பு என பல இயக்கங்களில் தன்னிச்சையாகவும்,
அமைப்பாகவும் திரண்டதை நாம் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் இந்த போராட்ட அரசியலை
முன்னெடுக்கவிடாமல் அரசும் அதன் கருவிகளும் தடுத்துக்கொண்டுதான் இருக்கும் ஆனாலும்
இதைக்கடந்து முன்னேறுவதே நமது கடமையாக உள்ளது.

க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

தேசிய அரசியல் நிலைமை - 2018

இந்திய அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் துன்பதுயரம் மிகவும்
அதிகரித்துள்ளது. மத்திய பிஜேபி அரசு வெறும் 31% சதமான ஓட்டுகளை மட்டுமே பெற்று தேர்தல்
ஜூம்லா (பொய் பித்தலாட்டம்) மூலம் பத்தாயிரம் கோடி தேர்தல் செலவு செய்து ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்தது முதல்  டிஜிட்டல் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன்
இந்தியா, கேஷ்லெஸ் எகானமி, ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்ற நூற்றுக்கணக்கான பெயர்களையும்,
திட்டங்களையும் தீட்டி மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மாட்டுக்கறி உண்ண தடை, கருத்து
சுதந்திரம் பறிப்பு, கர்வாபசி, லவ் ஜிகாத், ரோமியோ எதிர்ப்பு படை போன்ற கலாச்சார நடவடிக்கைகளால்
இதுவரை நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. கோவிந்த் பன்சாரே, நரேந்தர தபோல்கர்,
கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை படுகொலை செய்துள்ளது. கல்வியில் காவிமய
மதவாத சிந்தனையை புகுத்தி தலித் மற்றும் சிறுபான்மை இன மாணவர்களை கொலை செய்துவருகிறது.
ரோஹித் வெமுலா, நஜீப், திருப்பூர் சரவணன், சேலம் முத்துக் குமார் போன்ற எண்ணற்ற மாணவர்கள்
இப்பட்டியலில் அடங்குவார்கள்.
இந்திய தேசம் எல்லா வளங்களையும் கொண்டு மனித வளங்களையும் அதிக இளைஞர்களையும்
தன்னகத்தே கொண்ட நாடாகும். ஆனால் நமது வளங்களை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகள்
சூறையாடவும், மனித வளத்தை முறையாக பயன்படுத்தாத நாடாகவுமே இருந்து வருகிறது. ஒரு புறம்
இந்திய மக்களில் 1% சதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் 70% சத சொத்துகளை
குவித்து வைத்துள்ளனர். மறுபுறம் 37% மக்கள் ஒரு நாளைக்கு 33 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும்,
வறுமை கோட்டிற்கும் கீழே வாழும் தேசமாகவே நம் இந்தியா உள்ளது. ஐந்தாண்டு திட்டங்களையும் திட்ட
கமிஷனையும் கலைத்து நிதி ஆயோக் என்ற பெயரில் மக்கள் பயன்படுத்தும் ரேசன் கடைகளை மூடுவது
துவங்கி வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, போக்குவரத்து, சுகாதாரம் என அனைத்தையும் 100% தனியார்
முதலாளிகள் வசம் ஒப்பட்டைத்து வருகிறது.
லலித் மோடிக்கு 7 ஆயிரம் கோடி, விஜய் மல்லையாவுக்கு, 10,000 கோடி, நீரவ் மோடிக்கு 12
ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியுள்ள இந்திய அரசு சாதாரண ஏழை மாணவனுக்கு சில ஆயிரம் கடனை
கொடுக்க ஆயிரம் விதிமுறைகளையும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ரிலையன்ஸ்
அடியாட்களை வைத்து துன்புறுத்தி தற்கொலையும் செய்ய வைக்கிறது. பெட்ரோல் டீசல் விலை

நிர்ணயத்தை முதலாளிகளே தீர்மானிக்கலாம் என்றதும் தினமும் விலை ஏறிவருகிறது. இதனால்
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தை துளியளவும் மதிக்காத பிரதமர் மோடி அவர்கள் உலகம்
முழுவதும் முதலாளிகளின் வியாபார பேரம் பேச ஊர்ச்சுற்றி வருகிறார். மேலும் மோடி அரசு கோவா,
மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலத்தில் சூழ்ச்சி செய்து ஆட்சியமைப்பது, திரிபுராவில் காங்கிரஸ்
கட்சியை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது, லெனின், அம்பேத்கர், பெரியார், பூலே சிலைகளை
தகர்ப்பது, காஷ்மீர் ஆட்சியை கலைப்பது, தலித் மக்களின் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீர்த்து
போகச் செய்வது, சிறுபான்மையினரின்  அனைத்து உரிமைகளையும் பறிப்பது, பழங்குடியின மக்களை
காட்டை விட்டு துரத்துவது, கவர்னர்களை கொண்டு மாநில உரிமைகளை பறிப்பது போன்ற ஜனநாயக
விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். கார்ப்பரேட் சாமியார்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபி
செய்யும் பணிக்காக நமது அரசாங்கம் அவர்களுக்கு மக்கள் வாழ்விடத்தையும், இயற்கை வளத்தையும்
அழித்து சொகுசு குடியிருப்புகளை கட்டிக்கொள்ள அனுமதியளிக்கிறது.
சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதற்காக தற்போது பணமில்லா வர்த்தகத்தையும், பணமதிப்புநீக்கம்
எனும் முட்டாள் தனமான அறிவிப்பையும் மத்திய அரசு அறிவித்தது. வங்கியில் குறைந்தபட்சம் இருப்பு
தொகையை ஐந்தாயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் பணம் எடுக்கவும் போடுவதற்கும் கூட
கட்டணம் அறிவித்தது மட்டுமல்லாமல் இது ஒருலட்சத்திற்கு மேல் வங்கி இருப்பில்
வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என அறிவித்திருப்பது மக்கள் மீதான நேரடிதாக்குதல் ஆகும்.
பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் இந்திய முதலாளித்துவ கட்சிகளோடு இணைந்து தங்கள் சொந்த
பொருளாதார வளர்ச்சியை பாதுகாத்துகொள்ள எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராகவுள்ளது.
மத்திய அரசின் மதவாத கொள்கைக்கு எதிராகவும் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் எந்தவொரு
முதலாளித்துவ கட்சிகளும் குரல்கொடுக்க தயாராக இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் இந்த
கொள்கைகளுக்கு எதிரான மனநிலை வெகுவாக அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி  புள்ளி விவரம் மேம்பட்ட நிலையில் இருப்பதைப்போல
தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்ட போதும், அவ்வாறான ஜி.டி.பி தொடர்வரிசைகளின்படியே, 2015-
16ல் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 2017-18 க்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது நான்கு
ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் ஆகும். சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக, 2013-14
மற்றும் 2016-17 க்கு இடையில்  வேலைவாய்ப்பு முழுமையாக சுருங்கி இருப்பதாக தொழிலாளர் துறை
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தற்போது ஐ.நா வே இந்தியாவின் கடந்த இரண்டாண்டு கால
பொருளாதார பின்னடைவுக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி யுமே காரணம் என
கூரியுள்ளது.
பொருளாதாரத்தின் அடிப்படை துறைகளில் குறிப்பாக முறைசாரா துறைகளில்
பொருளாதார மந்தநிலை கூர்மையாக உள்ளது. மோடி ஆட்சியின் முதல் மூன்று
ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.7 சதவீதம் மட்டுமே
வளர்ந்தது. பொது செலவினத்தில் வெட்டுக்கள், ஆதரவு விலை குறைப்பு, அரசு
கொள்முதல் குறைப்பு, மற்றும்  இடுபொருள் ஒதுக்கீட்டை தனியார் வசம்
ஒப்படைத்து, சில முக்கிய இடுபொருட்களின் மீது அதிக மறைமுக வரி விதிப்பு
செய்ததன் விளைவாக உற்பத்தி செலவு செங்குத்தாக உயர்வு  ஆகிய காரணங்களால்
விவசாய வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பயிர் காப்பீடு, தனியார் காப்பீட்டு
நிறுவனங்களுக்கான ஆதாயமாக மாறியுள்ள அதே நேரத்தில், பரவலான பயிர்
இழப்பிற்கு காப்பீட்டு  நிவாரணம் விவசாயிகளுக்கு  மறுக்கப்படுகிறது. முறைசாரா
உற்பத்தி, ஜி.எஸ்.டி இன் அமலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மிக
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை பிரிவான, முறைசாரா தொழில்
உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறுகியகால அதிகாரப்பூர்வ

புள்ளிவிவரங்கள் சரியாகப் பிரதிபலிக்காது.   ஆனால், தொழில்துறை உற்பத்தி
குறியீட்டு எண் (IIB) போன்ற குறியீடுகளும் கூட, சில தொழில்துறை பிரிவுகளில்
வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர்  வளர்ச்சி தவிர்த்து கடந்த மூன்று
ஆண்டுகளில் அடிப்படை தொழில் துறைகள் மந்தமான வளர்ச்சி தான் கண்டுள்ளன
எனக் காட்டுகின்றன
நவம்பர் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் பண மதிப்பு நீக்க  அறிவிப்பை
வெளியிட்டது. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை,
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கூறியது. பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் செல்லாததான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 98.96 சதவீதம்
திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் கூறின. இது,
குறைந்தபட்சம் 4-5 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்குத் திரும்ப வராது
என்ற அரசின் கூற்றுகளை மறுதலித்தன. உண்மையில், பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளாக அரசு சொன்ன எதுவும்
நிறைவேறவில்லை.உண்மையில், கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் மின்-
பணப்பரிமாற்றங்களைக் கொண்ட பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு
நன்மை பயக்கத்தக்க ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஏற்படுத்த அரசாங்கம்
உருவாக்கிய பெரு வெடிப்பு-சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது.
டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்த மாற்றம் என்பது நமது நிதித் துறைகளில்
வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவிற்கு ஏதுவாக உள்ளது. இந்திய
பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான கடன்களை வழங்குவதற்கு
வளங்களைத் திரட்டி மறைமுகமாகப் பயனளிக்கும் முயற்சி இது. யாருடைய
கடன்களை மோசமான கடன்கள் என்று அரசு தள்ளுபடி செய்ததோ, அந்த பெரு
நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மறு
முதலீடு செய்ய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில்  செலுத்தப்பட்ட
பணம் பயன்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி அறிமுகம் என்பது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும், இது
மக்களின் மீது சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நவீன தாராளவாத
தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜி.எஸ்.டி, மாநிலங்களின் உரிமைகளை பாதித்து,
கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கி விட்டது. மேலும் மறைமுக வரி விதிப்பு
அளவு அதிகரித்துள்ளது. பொது மக்கள், சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும்
முறைசாரா தொழில்களில் புதிய சுமைகளை ஜி.எஸ்.டி.யை சுமத்தி உள்ளது. 
தொழில்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளும் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளும் ஜி.எஸ்.டி. யின்
தாக்குதலை எதிர் கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி பல பொருட்களின் விலைகளை
குறைத்துவிட்டது என்ற கூற்றுக்கு மாறாக, அநீதியான வரி அமைப்பு காரணமாக, பல
பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.
தனியார்மயமாக்கலை அமல்படுத்துவதில் முதன்மை அமைப்பாக நிதி
ஆயோக் விளங்குகிறது. அது 235 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 74
நிறுவனங்கள் மூடப்படவோ அல்லது திறன்சார் விற்பனை பாதை மூலம்

விற்கப்படவோ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 20 பொதுத்துறை
நிறுவனங்களுக்கு திறன்சார் முதலீடு விலக்கலை செய்ய மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது. இரயில்வே, வங்கிகள் மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள்
போன்ற அரசு ஏகபோகங்கள் தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட வேண்டும்
என்று ஆயோக் கூறியுள்ளது. அடிப்படை சேவைகளை தனியார் மயமாக்குவதன்
மூலம் நவீன தாராளமயமானது,  நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும்
சுகாதாரம் போன்ற அனைத்து  அடிப்படை சேவைகளையும் சந்தை சரக்காக பாவிக்க
வைக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயமாக்கலுக்கு இலக்காகி
உள்ளன. நிதிஆயோக், அதன் மூன்று வருட செயல்திட்டத்தின்படி சுகாதார
சேவைகளை  அனைத்து மட்டங்களிலும் தனியார்மயமாக்க விரும்புகிறது. மாவட்ட
மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்பு முன்மொழியப்
பட்டுள்ளது. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு மாதிரியின் கீழ் 50 க்கும்
குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை தனியார் துறைக்கு
ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
உலகின் அதிக ஊழல் நடைபெறும் தேசமாகவும், பாலியல் பலாத்காரம் போன்ற பல
காரணங்களால் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாகவும், மனிதவள குறியீட்டில் 131 இடத்தில் உள்ள
நாடாகவும், வறுமையில் வாடும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகவும், சுற்றுச் சூழல், கல்வி,
சுகாதாரம் என எத்தனையோ விசயங்களில் இந்திய நிலைமை ஆப்பிரிக்க நாடுகளை விட பின்தங்கியே
உள்ளது.
தற்போது இது போன்ற பல பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் அதிகளவில் விழிப்புணர்வு
அடைந்து களத்தில் இறங்கி வருகிறார்கள். மகாராஷ்டிராவில் இலட்சம் விவசாயிகள் வரை நடத்திய
பிரமாண்டமான இயக்கம், தொழிலாளர், மாணவர், இளைஞர், பெண்கள், மாணவர்கள் என பலரும்
களத்தில் இறங்கியுள்ளனர். கேரளாவில் தோழர் பினராய் விஜயனின் ஆட்சி போராடும் மக்களுக்கு
உத்வேகம் கொடுத்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு இரண்டு லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக
தனியார் பள்ளியில் இருந்து படிக்க வரசெய்தது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமைக்கு
தீர்வாக இயந்திரம் பயபடுதுவது, தலித் மக்களும் அர்ச்சகராகலாம், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு
போன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

சர்வதேச பொருளாதார சூழல் - 2018


சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் நவீனதாராளமய ஆட்சி முறையின் கீழ்,
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவுக்குப் பணத்தைக் குவித்து வைத்துள்ளன.  உள்நாட்டில்
கிராக்கி வளர்ச்சியடையாததால்,  அவற்றால் தாம் குவித்துள்ள பணத்தை சந்தைக்கு விடுவிக்க முடியாது.  தி
ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளபடி உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளாக விளங்கும் – தி
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தி ஐரோப்பியன் மத்திய வங்கி, தி பேங்க் ஆப் ஜப்பான், தி பேங்க் ஆப்
இங்கிலாந்து மற்றும் தி ஸ்விஸ் மற்றும் ஸ்வீடிஷ் சென்ட்ரல் வங்கிகள் – இப்போது 15 டிரில்லியன்
டாலர்களுக்கும் மேல் சொத்துக்களாக அல்லது 2008 க்கு முந்தைய பொருளாதார மந்த நெருக்கடிக்
காலத்திலிருந்ததை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கின்றன.  இது சொத்து
விலைகளை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், பொதுவான பணவீக்கத்தைக் குறைவாக
வைத்திருக்கிறது.  ‘நீர்க்குமிழி’ மீண்டும் வெடித்து மற்றொரு நிதி நெருக்கடியாக முற்றும் நிலைக்கு இது
இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும்
உலகப் பொருளாதாரம், மற்றொரு நிதி நெருக்கடியைத் துரிதப்படுத்திடக் கூடிய விதத்தில்,  நிலையற்ற
தன்மையுடன் காணப்படுகிறது.
2017 கிரெடிட் சுசெ (Credit Suisse) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் 2.7
சதவீதமாக இருப்பவர்கள் உலக வருவாயில் 70.1 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள்.  அதே சமயம்
மறுபுறத்தில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினர் உலக வருவாயில் வெறும் 8.6 சதவீத
அளவிற்கே தங்கள் பங்காகப் பெற்றிருக்கிறார்கள்.
2018ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, 1980 இலிருந்து உலகில் உச்சத்தில் உள்ள
1 சதவீதத்தினரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் பெற்றிருக்கின்ற வருமானத்தைவிட
இரு மடங்கு அளவாகும்.      உலக அளவில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்கும், உச்சத்தில்
உள்ள 1 சதவீதத்தினருக்கும் இடையேயான தனிநபர்களின் வருமானத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது
அல்லது பூஜ்யமாக இருக்கிறது. அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகளின் விகிதம் குறித்து உலகின் பல நாடுகள்
குறித்து ஆய்வு செய்துள்ள இந்த அறிக்கையானது, 1980 க்கும் 2015 க்கும் இடையிலான  நவீன தாராளமய
சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின்
வருமானத்தின் பங்கு 30 சதத்திலிருந்து 60 சதம் என்கிற அளவுக்குக் கூர்மையாக அதிகரித்திருப்பதைக்
காட்டுகிறது.
உலகமக்களில் பெரும்பான்மையான மக்கள் சந்தித்து வரும் கடுமையானவறுமை மேலும்மேலும்
அதிகரிப்பதும், உலகப் பணக்காரர்கள் மேலும்மேலும் பணக்காரர்களாக செல்வசெழிப்பில் திளைப்பதும்
அதிகரித்து வருகிறது.

சோசலிச நாடுகள்
சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டு விகிதம் 7.2 சதவீதம் என்ற
அளவிற்கு விரிவடைந்திருப்பதுடன், தன் நிலையை உலகின் இரண்டாவது பெரிய
பொருளாதார நாடு என்ற அளவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது, உலகப்
பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குத் தன்

பங்களிப்பினைச் செய்திருக்கிறது.  உலகப் பொருளாதார நெருக்கடியால்
ஏற்படுத்தப்பட்ட இன்னல்களிலிருந்து மீள்வதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்ட
முக்கியமான மாற்றம் என்னவென்றால் அது உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வை
அதிகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தியதாகும். இதனை
உத்தரவாதப்படுத்துவதற்காக,  அது குறைந்தபட்ச ஊதியங்களை படிப்படியாக
உயர்த்தியதுடன், வறுமையின் பிடியிலிருந்து 6 கோடி பேருக்கும் அதிகமானவர்களை
விடுவித்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும்.   ஒவ்வோராண்டும் நகர்ப்புறங்களில்
சராசரியாக 1 கோடியே 30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு
வேலைவாய்ப்பிற்கான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.
சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வல்லமை, சர்வதேச உறவுகளில்
அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பழைய பட்டு
சாலையையும் (Silk road), கடல்வழி வர்த்தக மார்க்கத்தையும் பின்பற்றி, சீனா
முன்முயற்சி எடுத்துள்ள ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்துடன்
பல நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவால்
முன்மொழியப்பட்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (The Asian Infrastructure
Investment Bank)யும் சுமார் 56 நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. கிரேட் பிரிட்டன்,
ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி
நாடுகள் கூட இந்த முன்முயற்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.
சீனாவின் அதிகரித்துவரும் வல்லமைக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ்
போன்ற பலதரப்பு அமைப்புகள் வலுவடைந்து வருவதும் சாட்சியமாகும். சர்வதேச
உறவுகளில் சீனாவின் வளர்ந்துவரும் நிலையைப் பார்த்து  எச்சரிக்கையடைந்துள்ள
அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளை
முடுக்கிவிட்டிருக்கிறது. தென் சீனக் கடலின் விவகாரங்கள், கொரிய தீபகற்பம்
மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அது தலையிட்டுக் கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் நாட்களில், ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், சோசலிஸ்ட் சீனாவிற்கும்
இடையே  உக்கிரமான போட்டியைப் பார்த்திட இருக்கிறோம்.
வியட்நாம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்
ஒன்றாக நீடிப்பது தொடர்கிறது. இக்காலகட்டத்தில் அதன் பொருளாதாரம் சராசரியாக
6.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இக்காலத்தில் மக்களின் தனிநபர் ஆண்டு
வருமானம் அதிகரித்திருந்த போதிலும், நகரங்களுக்கும் தொலைதூர
குக்கிராமங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைகளும், வேறுபாடுகளும்
அதிகரித்துக்கொண்டிருப்பதையும் வியட்நாமிய அரசு உணர்ந்து செயலாற்றி
வருகிறது. மேலும் சீனாவுடனான தென் சீனக் கடலின் சில சச்சரவுகளை சரிசெய்திட
நடவடிக்கை எடுத்துவருகிறது.
கியூபா அமெரிக்காவினால் மிகவும் நேர்மையற்ற முறையிலும்
மனிதாபிமானமற்ற முறையிலும்  திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின்
காரணமாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்கிறது. ஒபாமாவால்
இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது
போன்று மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும்

டொனால்டு டிரம்ப் கைவிடவும், மாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத்
தடையை தீவிரப்படுத்தவும்  தொடங்கியிருக்கிறார். வெனிசுலா போன்று லத்தீன்
அமெரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் கியூப
பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி நிகழும் கடும்
சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும் பொருளாதாரத்தின் மீது
கடுமையானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டின் பொதுச் சொத்துக்களிலும்,
சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளில்
தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் கியூப சோசலிசத்தின்
கீழ் அக்கொள்கைகளை ஒருபோதும் பிரயோகித்திட மாட்டோம் என்றும் மேலும்,
தேசப் பொருளாதாரத்தின் பிரதான வடிவமாக அடிப்படை உற்பத்திச் சாதனங்களின்
உடைமை உரிமை மக்களிடம் இருப்பது தொடரும் என்றும் கியூப அரசு
தெரிவித்துள்ளது. மாபெரும் தலைவர் பிடல்காஸ்ட்ரோவை தொடர்ந்து, ரால்
காஸ்ட்ரோவும் அவரை தொடர்ந்து மிகையில் டைஸ் கனாலும் அதிபராகியுள்ளார்.
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK – Democratic People’s Republic of Korea):
அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளிவிட்டு, கொரியா ஜனநாயக மக்கள்
குடியரசு, தென்கொரியாவுடனான நட்பை கிம் ஜோங் உன், மூன்சேவுடன் கைகுலுக்கி
புதுப்பித்தது. அமெரிக்காவும் சிங்கப்பூர் வரை வந்து வடகொரியாவுடன்
ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக
பார்க்கப்படுகிறது.
மேலும் லாவோஸ், நேபாளில் ஏற்பட்டுள்ள மாற்றம், வெனிசுவேலாவில்
மதுராவின் பெருபான்மையான வெற்றி என சோஷலிச பாதைக்கான வளர்ச்சி
தவிர்க்கமுடியாமல் முன்னேறி வருகிறது.
அண்டைநாடுகள்
அண்டை நாடுகளை பொறுத்தவரை இந்தியா உருப்படியான எந்த ஒரு நல்ல உறவையும்
அண்டை நாட்டு மக்களிடம் பேணவில்லை. தான் ஆட்சி பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதற்காக
பாகிஸ்தானை சகட்டு மேனிக்கு தூற்றுவதும், நேபாள், பூடான் மீது ஆதிக்கம் செலுத்த முயலுவதும்,
வங்கதேச அகதிகள், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் குறித்து முரட்டுத்தனமான
அணுகுமுறையும், இலங்கை தமிழ் பிரச்சனையை வேடிக்கை பார்த்ததுமே வரலாறாக உள்ளது. சீனாவுடன்
எல்லை பிரச்சனையை இன்றுவரை தீர்வுக்கான ஒருநல்ல முடிவை எடுத்தபாடில்லை. ஈரானின் எண்ணை
பைப்லைன் அமைப்பது, சீனாவின் “ஒன் பெல்ட் ஒன் ரோடு” திட்டம் போன்றவற்றை அமெரிக்க
நலனிலிருந்து இந்தியா எதிர்த்துவருகிறது. பாகிஸ்தானில் தற்போது தேர்தல் நடந்து இம்ரான்கான்
பெரும்பான்மையாக வென்று ஆட்சி அமைத்துள்ளார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இத்தேர்தலில்
வென்றுள்ளது மகிழ்ச்சியான விஷயமாகும்.

இறுதியாக ...
உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கா
தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல் அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் அல்லது நேட்டோ தலைமையிலான
இராணுவத் தலையீடுகள் உலகின் பலபகுதிகளில், குறிப்பாக மத்திய ஆசியா/வட

ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடர்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல்
இணைந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது
தொடர்கிறது. தன்னுடைய இராணுவத்தினை பால்டிக் நாடுகள் மற்றும் போலந்துக்கு
முதன்முறையாக விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் நேட்டோ மேலும்
வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தன்னுடைய இராணுவப் பிரிவுகளை பால்டிக்
நாடுகளுக்கு அனுப்பி, உக்ரைனில் தீவிரமானமுறையில்
தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் தன்னை
நோக்கிக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே ரஷ்யா மிகச்சரியான
முறையில் பார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், “சீனாவைக்
கட்டுக்குள்வைத்திருக்கும்” (“Containment of China”) போர்த்தந்திர நோக்கத்தை
மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றுவது தொடர்கிறது. சோசலிச நாடுகளுக்கு
எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள்,
ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான தற்போதைய சகாப்தத்தின்
மையமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.

-க.நிருபன் (ஆகஸ்ட்2018)

சர்வதேச அரசியல் சூழல் குறித்து - 2018

உலக அரசியல் சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த
முப்பது ஆண்டுகளாக அமலில் உள்ள நவீன தாராளமய கொள்கைகளின் தாக்குதல் 2008 ஆம் ஆண்டு
முதல் கடும் நெருக்கடியாக உருவெடுத்தது இது உலக முதலாளித்துவ நாடுகளுக்குள் முரண்பாட்டை
அதிகரிக்கச் செய்தது. உலகளவில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடிகளை மக்களின் மீது திணித்து
அவர்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. கடும் பொருளாதார
நெருக்கடிகளுக்கெதிராக மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் கோபத்தையும் வலதுசாரி பிற்போக்கு
அரசியலின் மூலம் ஆளும் அரசுகள் மடைமாற்றம் செய்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம்

அமெரிக்காவில் 2017 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபராக
இருந்த பாரக் ஒபாமாவை வீழ்திய குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் மிக மோசமான
பிற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறார். அமெரிக்காவை பொறுத்தவரை மாறி மாறி ஆட்சி
செலுத்திவரும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டு கட்சிகளும்
முதலாளிதுவத்திற்கு ஆதரவான வலதுசாரி அரசியலை கொள்கையாக கொண்டு செயல்படும் கட்சிகளே
ஆகும். தனது பாசிச இன மோதல் அரசியல் சித்தாந்தத்தின் மூலம் கடந்தாண்டு தலைமைப் பொறுப்பிற்கு
ட்ரம்ப் வந்தது முதல் வலதுசாரிகளின் மிகத் தீவிரமான பிற்போக்காளர்களின் தலைமை பாத்திரத்தை
செவ்வனே நிறைவேற்றி வருகிறார்.
அமெரிக்காவில் இதுவரையில் இருந்துவந்த ஓரளவு இனமோதலுக்கு எதிரான மனநிலை
தலைகீழாக மாறியுள்ளது. இனவாத போக்கின் உச்சமாக ஏழு இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு
அமெரிக்கா வருவதற்கான விசாவை தடைசெய்யும் முயற்சியை தொடர்ந்து. மெக்சிகோ எல்லையில்
அகதிகள் வருகையை தடுக்க 1,200 கி.மீ நீளத்திற்கு சுவர்களை எழுப்புவது போன்ற மோசமான
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவும்,
பொருளாதார நெருக்கடியின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய
மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய அரசியல்
மற்றும் ராணுவத் தலையீடுகளை மிகப்பெரிய அளவில் உலக நாடுகள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பல பயங்கரவாத கும்பலை தூண்டி அரசியல்
குழப்பங்களை ஏற்படுத்துவது போன்ற நாசகர செயலில் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் எரியும்
நெருப்பில் எண்ணெயை ஊற்றும் நடவடிக்கையாக இஸ்ரேல் தலைநகரை பாலஸ்தீன பகுதியான
ஜெருசெலத்திற்கு மாற்றி அதை வெள்ளை மாளிகையிலிருந்து அங்கீகரித்து தனது தூதரகத்தையும்
திறந்தது. சிரியா மீதான தாக்குதல்கள், காசாவில் அரங்கேறும் மனித உரிமை மீறல்கள், ஈரான் மீதான
பொருளாதார தடை என அமெரிக்கா தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளை வேட்டையாடி வருகிறது.
லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத்
தலையீடுகளுக்கு எதிராக ஓர் தீவீரமான மோதல் நடந்து கொண்டிருக்கிறது.  அமெரிக்கா தன்னுடைய
ஒட்டுமொத்த ராணுவப் பிரிவுகளையும் இக்கண்டத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான
அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன்  நிலவும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு அலையை மாற்றியமைத்திடவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  
ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் உள்ள வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளை உலக வங்கி,
ஐ.எம்.எப், உலக வர்த்தக நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தை
வேரறுத்து நாடுகளை ஒட்டச்சுரண்டி வருகிறது. சர்வதேச ஒப்பந்தங்கள் சிலவற்றிலிருந்து
ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், சுயேச்சையாக  நாடுகளுடன் இருதரப்பு
தேவைக்காக மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கே முன்னுரிமை வழங்குகிறது. புவி வெப்பமயமாதல்,
அமைதி, சுகாதாரம், கல்வி, வேலை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, உலக வர்த்தக அமைப்பு
போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் எதிர்காலம் நம்பிக்கையற்றதாக மாறியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில்
இராணுவரீதியாகத் தலையிடுவதை அமெரிக்கா தொடர்கின்ற அதேசமயத்தில்,
அமெரிக்காவின் உலக அளவிலான இராணுவ போர்த்தந்திர கவனம் பசிபிக்
பெருங்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. பசிபிக்கில் தன்னுடைய கப்பல் படைகளில்
மூன்றில் இரண்டு பங்கினை நிறுத்தி வைத்திருப்பதுடன், அமெரிக்கா “சீனாவைக்
கட்டுப்படுத்த வேண்டும்” என்பதற்காக தெற்கு சீனக் கடலில் ஏற்பட்டுள்ள சச்சரவு மீது
குறிப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஏனெனில், தன்னுடைய உலக மேலாதிக்க
சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக சீனாதான் வலுவாக வளர்ந்து வருகிறது
என கடும் எரிச்சலுடன் பார்க்கிறது.


ஐரோப்பா
தற்போது ஐரோப்பாவில் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் சக்திகளின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு
டிரம்ப்,  அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருப்பது  இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற பிரிட்டனில் பிரெக்சிட் (பிரிட்டன்
எக்ஸிட்) வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டது. அதுபோல் ஜெர்மன், ஆஸ்திரியா,
பிரான்ஸ் போன்ற  ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி
உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளிலிருந்து
பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற  அனைத்தும் வலதுசாரி அரசியல் வளர்ச்சியை
காட்டுகிறது.
அதே நேரத்தில் சில நாடுகளில் அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதற்கு
எதிர்ப்பு இருந்திருக்கிறது. போர்ச்சுக்கல் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாகத்  தொடர்ந்து நீடிப்பதுடன், தேர்தல்
ஆதாயங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சைப்ரஸில், கம்யூனிஸ்ட் கட்சி,
சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சித் தேர்தல்களில் தன்னுடைய நிலையை
மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பாவின் வேறுசில இடங்களில் நவீன-இடதுசாரி அமைப்புகள்
வளர்ந்திருக்கின்றன. கிரீஸில் சிரிசா நவீன தாராளமய சீர்திருத்தங்களை
எதிர்ப்பதாகவும், தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கைவிடுவோம்
என்றும் பறிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும்
அளித்திடுவோம் என்றும் வாக்குறுதிகள் அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.
கிரீஸில் மக்கள் மத்தியில் விளைந்துள்ள அதிருப்தியின் விளைவாக அது இப்போது
அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறும் இடமாக
மாறியிருக்கிறது. ஸ்பெயினில், போடிமோஸ் என்னும் ஒரு முற்போக்குக் கட்சி
அமைக்கப்பட்டு, இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கணிசமான
அளவிற்குத் தேர்தல் ஆதாயத்தைப் பெற்றிருக்கிறது.
கிரேட் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜெரிமி கோர்பின் தலைமையில்
புத்துணர்ச்சி பெற்று, மக்கள் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரங்களின் மையமாக
வைத்து செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருவிதத்தில் அது கிரேட் பிரிட்டனில்
இடதுசாரி நிகழ்ச்சிநிரலுக்குப் புத்துயிரூட்டியுள்ளது.  அமெரிக்காவில், பெர்னி
சாண்டர்ஸ் தன்னுடைய பிரச்சாரங்களை  உழைக்கும் மக்களின் மத்தியில் செய்து
ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் காட்டுவது என்னவென்றால்
எங்கெல்லாம் இடதுசாரிகளும் இடதுசாரிகள் தலைமையிலான சக்திகளும், நவீன
தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி
போராட்டங்களை வீரியத்துடன்  முன்னின்று நடத்துகிறார்களோ, அங்கெல்லாம்
மக்களின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்
என்பதும் எதிர்காலத்தில், இதுதான் அரசியல் போராட்டங்களுக்கான அரங்கமாக

இருக்கப்போகிறது என்பதும் நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒரு வலுவான
இடதுசாரிகள் தலைமையிலான எதிர்ப்பு இல்லையெனில், மக்களிடையே
அதிகரித்துவரும் அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆதாயமாக்கிக்
கொள்வார்கள் என்பதும் தெரிகிறது.

லத்தீன் அமெரிக்கா
லத்தீன் அமெரிக்காவில், மக்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும்
இராணுவத் தலையீடுகளுக்கும் இடையே ஓர் ஆழமான மோதல் கூர்மையாக
உருவாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், உணவுப்பற்றாக்குறையை
வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்கிக்
கொண்டிருக்கிறது. வெனிசுலாவின் மக்கள் தலைவனை கடந்த சில நாட்களுக்கு முன்
கொலைசெய்திடும் முயற்சியையும் செய்துள்ளது. அதேபோன்று, லத்தீன் அமெரிக்க நாடுகளான
பிரேசிலிலும் பொலிவியாவிலும் மற்றும் இதர நாடுகளிலும் இடதுசாரிகள் தலை
தூக்காவண்ணம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், முன்பு
இருந்ததைப்போன்று அந்நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும்
அமெரிக்காவின் தலையீடுகள் கூர்மையாகிக் கொண்டிருக்கின்றன.
சோசலிஸ்ட் கியூபாவும் அதன் தாக்குதல் இலக்காகத் தொடர்ந்து இருந்து
வருகிறது. முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் கியூபாவுடனான உறவுகளில்
சகஜநிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளைக்கூட
டொனால்ட் டிரம்ப் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்
தொடங்கியிருக்கிறார்.
மத்திய அமெரிக்காவில், நிகரகுவாவில் கிட்டத்தட்ட 13 சதவீதப்புள்ளிகள்
வறுமையைக் குறைத்ததன் காரணமாக, டானியல் ஒர்டேகா மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். வெனிசுலா அணியில் லத்தீன் அமெரிக்காவின் ஏனைய
நாடுகளான பொலிவியா, ஈக்குவேடார், ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் இடது-
முற்போக்கு அரசாங்கங்களை பலவீனப்படுத்து வதற்கானமுயற்சிகளில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேற்கு ஆசியா
மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா – இஸ்ரேல் உடன்படிக்கை தொடர்ந்து
ஒரு மையமான பங்கைச் செலுத்தி வருகிறது. இப்பகுதியை அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக
ஈரானை பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேலை வலுப்படுத்துவதும்
இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்
இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும்
இருக்குமாயின் அதனை நெரித்துக் கொல்வதற்கு அமெரிக்க நிர்வாகம்தான் 
பொறுப்பாகும். உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய

விதத்தில் இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றங்களையும் மோதல்களையும்
தூண்டிவிடும் தன்மையுடையதாகும்.
மத்தியக் கிழக்கு நாடுகளின் இதர பகுதிகளிலும் அமெரிக்காவின் தலையீடுகள்
தொடர்கின்றன. எனினும், இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவருவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து
முயற்சிகளையும் முறியடித்து, ஆறு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று
வந்த உள்நாட்டு யுத்தத்தில் சிரிய படையினரின் வெற்றி, ஒரு மிகப்பெரிய
சாதனையாகும். அமெரிக்கா மற்றும் அதன் அரபுக் கூட்டணியினரால்
முட்டுக்கொடுக்கப்பட்ட இஸ்லாமிஸ்ட் படையினர் தோல்வியடைந்திருப்பது மேற்கு
ஆசியாவின் அரசியலில் ஆழமான விளைவினை ஏற்படுத்தும். சிரியாவில்
ரஷ்யாவின் வெற்றிகரமான இராணுவத் தலையீடு இப்பிராந்தியத்தில் அதன்
தாக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ரஷ்யா – துருக்கி – ஈரான் கூட்டு முயற்சிகள்
இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் சூழ்ச்சித்தந்திரங்களை முறியடித்திருக்கின்றன. 
தன்னுடைய கூட்டணி நாடான சவுதி அரேபியாவுடன் சேர்ந்துகொண்டு,
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானை பலவீனப்படுத்துவதற்காக, ஏமனில் சவுதி
அரேபியர்கள் தமது இராணுவக் தலையீட்டைத் தொடர்வதை ஊக்குவித்து
வந்துள்ளது.  ஐ.நா. சபை ஏமனில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் குழந்தைகள் 2017
டிசம்பர் இறுதியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறந்திருப்பார்கள் என்று
மதிப்பிட்டிருக்கிறது. சவுதி அரேபியாவின் தலையீடுகள் கத்தார், சிரியா மற்றும்
ஏமனில் தொடர்கின்றன. இப்போது அது லெபானானைக் குறிவைத்திருக்கிறது.
கத்தார், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய  இராணுவத்
தளங்களில் ஒன்றை பராமரித்து வருகிறது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அமெரிக்க இராணுவத்தினர் பணியாற்றுகிறார்கள். மேலும் கத்தார், அமெரிக்காவின்
சென்ட்காம் எனப்படும் படைப்பிரிவின் தலைமையகத்தையும் பராமரித்துவருகிறது.
இது, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு
மிகவும் உதவியாக இருக்கிறது. கத்தாரும், ஈரானும் உலகின் மிகப்பெரிய சவுத்
பார்ஸ் எரிவாயு வயல்வெளி (South Pars gas field) யைக் கூட்டாக நடத்தி வருகின்றன. 
அதன் விளைவாக அவை ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் கூட்டாக
செயல்பட வேண்டியது தேவையாகவுள்ளது.

ஆப்பிரிக்கா
அதிதீவிர மதவெறி சக்திகள் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தை ஆதிக்கம்
செலுத்துவது தொடர்கிறது. லிபியா மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாட்டை
பலவீனப்படுத்தி சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும்
கடும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.  அதிதீவிர மதவெறி மற்றும்
பயங்கரவாத சக்திகள் இப்பிராந்தியத்தில் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக்
கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தன்னுடைய இராணுவத்
தலையீட்டை ஆப்ரிகாம் (AFRICOM) மூலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நைஜீரியா, மாலி, சாஹல் முதலான பல நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு

நடவடிக்கைகள் என்று கூறப்படுவனவற்றில் அமெரிக்க இராணுவத்தினர்
கொல்லப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்க
கண்டத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும்
என்பதற்காகவும், முக்கியமான வர்த்தக பாதைகளையும், சந்தைகளையும் தங்கள்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக்
கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா இந்நாடுகளின் உள்விவகாரங்களில்
தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

-க.நிருபன் (2018 ஆகஸ்ட்)

இந்திய பொருளாதார வரலாறு மார்க்சிய பார்வை - வே.மீனாட்சி சுந்தரம். நூல் அறிமுகம்


ஒரு காலத்தில் இந்தியா உலகின் செல்வந்த நாடுகளில் இரண்டாவது நாடக இருந்தது, எப்படி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு அடிமையானது?.
உலகின் தலைசிறந்த அறிஞர்களை கொண்ட இந்திய நாட்டில் நவீன கால வரலாற்றில் ஐரோப்பிய விஞ்ஞானிகளை போல் ஏன் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியவில்லை?.

சிந்துவெளி நாகரிகத்தின் நகரமய கழிவுநீர் கட்டமைப்பே பத்தொன்பதாம் நூற்றாண்டில் லண்டன் மாநகரின் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சுத்திகரிப்பு திட்டமிடலுக்கு தூண்டுதளாக இருந்திருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் சமூக வளர்ச்சி தேங்கி போனது. என பல கேள்விகளுடன் இந்நூலை அணுகுபவர்களுக்கு இந்நூல் சிறந்த துவக்கத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் தோழர்.வி.மீனாட்சி சுந்தரத்தின் மார்க்சிய கோட்பாட்டிற்கு நேர் எதிர் பொருளாதார சிந்தனையாளரான சென்னை வளர்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றிய பேராசிரியர்.நீலகண்டன் அவர்களின் விமர்சனபூர்வமான அணிந்துரை பல விவாதங்களை துவக்கி வைப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவின் சுயேட்சையான மூலதன சுழற்ச்சியின் வளர்ச்சியை தடுத்தே இங்கிலாந்து காலனியாதிக்கத்தை இங்கு நிறுவியுள்ளது. அதற்க்கு இந்தியாவின் சனாதன சாதிய ஏற்றதாழ்வுகளை உயர்திபிடிக்கும் மனுதர்ம பிராமணியக் கோட்பாடுகள் உதவிபுரிதுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான இலக்கியமான திருக்குறள், அகநானூறு மற்றும் புறநானூறுலிருந்து மேற்கோள்களை கொண்டு அக்கால தமிழகத்தின் பொருளாதார வாழ்வை எடுத்துரைக்கிறார். ஆப்பிரிக்காவின் வடபகுதியில் வாழ்ந்தவர்கள் சுரங்கம் தோண்டியதுபோல் இங்கு தோண்டவில்லை காரணம் இந்தியாவின் செழிப்பான பொருள் உற்பத்தி தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கொண்டு வந்து குவித்தது. 1748 ல் பிரான்ஸ் நாட்டின் பிரபல எழுத்தாளர் மாண்டேகு “ரோம சாம்ராஜிய காலம் முதல் இந்தியாவோடு வர்த்தகம் செய்ய வேண்டுமானால் தங்கமோ, வெள்ளியோ கொண்டு செல்லவேண்டும். பதிலுக்கு சரக்குகளை பெறலாம். நாம் சரக்குகளை கொண்டு போனால் விற்கமுடியாது. அவர்களுக்கு தேவை புல்லியன் (தங்கம், வெள்ளி) அங்கு போன புல்லியன் திரும்பவே செய்யாது” என்று எரிச்சலோடு கூறியுள்ளார். காரணம் ஐரோப்பாவிற்கு தேவையான கம்பளி, பட்டு, கலப்படமற்ற பஞ்சு, வாசனை பொருள்கள், மசாலா வகைகள் மற்றும் பீங்கான் போன்றவை இந்தியா, சீனாவிடமிருந்து தான் வாங்கவேண்டி இருந்தது. அதே போல் இந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஐரோப்பிய நாடுகள் செய்த பல சூட்சமங்களின் சுவாரசியமான தகவல்கள் இந்நூலை படிக்கும் போது அறிந்து கொள்ளமுடியும். இந்தியாவில் விளைவிக்கப்பட்ட அபின் சீனாவை அடிமையாக்கியது. அதேபோல் அபின் மற்றும் அவுரி கொள்ளை லாபத்திற்காக இங்கு பயிரிடப்பட்டதால் அப்போது செழிப்பாக இருந்த நெல் உற்பத்தி தடுக்கப்பட்ட்டது. இதனால் 1776 - 1779 ம் ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் வர காரணமானது.

இந்தியாவில் சுல்தான்கள் மற்றும் அக்பரின் காலத்தில் நிலவரி வசூலிப்பதையும் வட்டித்தொழில் செய்வதையும் குலதொழிலாக கொண்ட டானியா, போகரா, பார்சி, சிந்து, ஜெயின், மார்வாரி, செட்டி, கோமுட்டி பிற்காலத்தி மோடி போன்ற சாதியினர் மற்றும் லேவாதேவிகாரர்கள் இருத்ததை குறிப்பிடுகிறார். அக்பரின் அரசவையிலேயே ராஜா மான்சிங் (ஜெயின்), ராஜா தோடர்மால் (மார்வாரி), ராஜா பீர்பால் (பிராமணர்) போன்ற வசூல்ராஜாக்கள் இருந்துள்ளார்கள். மேலும் அரச அதிகாரிகள், ராஜ விசுவாசிகள், வர்த்தகர்கள் போன்ற நடுத்தர செல்வந்தர்களும் இவர்களுக்கு பணிவிடை செய்வதற்காகவும், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கவும் புதிய தாழ்த்த சாதிகள் உருவானதையும் குறிப்பிடுகிறார். அதே போல இங்கிலாந்து உலகின் முதல் ஏகாதிபத்திய நாடக உருவாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட வெடிமருந்து உப்பும், சூரத் கப்பல் கட்டும் தளமும், விசுவாசமிக்க சீக்கிய சிப்பாய்கள் உள்ளிட்ட இந்திய சிப்பாய்கள், அவுரி மற்றும் கஞ்சா மூலம் பெற்ற பொருளாதார, அரசியல் லாபங்கள் பெருமளவுக்கு உதவியுள்ளது. நெப்போலியனை வாடர்லூவில் தோற்கடிக்க டன் கணக்கான இந்திய வெடி உப்பே காரணம் என்பது வரலாற்றில் பதிய வேண்டிய அறிய உண்மை சம்பவம் ஆகும். இந்திய வரலாறு குறித்து இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்ய விரும்புபவர்கள், இளம் மாணவர்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தை வரலாற்றுபூர்வமாக அறிய விரும்பும் இளம் வாசகர்களுக்கு சுவாரசியமான துவக்க நூலாக இந்நூல் அமையும். மேலும் இந்நூலில் பல அறிய தகவல்கள் நிறைந்து கிடப்பதால் மேற்கோள் நூல் பட்டியல்கள் கொடுக்கபட்டிருந்தால் மேற்கொண்டு அறிந்துகொள்ள விரும்புவோற்க்கு உதவியாக இருந்திருக்கும்.

-க.நிருபன் (27-4-2017)

Friday, March 8, 2019

முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுகிற கொள்க...

கஜா புயலின் கோர தாண்டவம், அரசின் அலட்சியம்

இழப்பதற்கு எதுவுமில்லை
அத்தனையும் இழந்தாகிவிட்டது!!
29.11.2019
 ஆலமரங்களின் ஆணிவேர் மட்டுமல்ல , ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும்  பிடுங்கி எறிந்து இருக்கிறது கஜாபுயல்.

 நாகை மாவட்டம். விழுந்தமாவடியில், மரங்கள் மட்டும் அல்ல, மனங்களும் வீழ்ந்து கிடக்கிறது.
 குருத்து இல்லாத தென்னம்பிள்ளை, கொத்தும்  கொலையும்மாய், தலைகுப்புற மாமரம், சிதறிக்கிடக்கும் காய்கனிகள்,  நிறம் மாறிப்போன கருநிறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் இதன் நடுவே கூரையில்லா வீடுகளாய் கடும் துன்பத்தில் மக்கள்.


பார்க்கும்போதே மனம்  பதைபதைக்கிறது,  துன்பம் தொற்றிக்கொள்கிறது.
சில முற்போக்கு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், சமூக செயல்பாட்டாளர்களும் உதவி செய்திருக்கிறார்களே தவிர, அரசாங்கத்தின் உதவி என்பது இதுவரை கிடைத்த பாடில்லை.


தற்போது அம்மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் மரங்களை யாராவது வெட்டி எடுத்துச் செல்ல மாட்டார்களா என்பதே முதன்மையாக உள்ளது. மரங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம் வெட்டி எடுத்து இடத்தை சுத்தம் செய்து கொடுத்தால் போதும் என்கின்றனர்.
யாராவது உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
-க.நிருபன்
8695969787.
https://m.facebook.com/story.php?story_fbid=1879235712222962&id=100004096548014  

மகளிர் தினம் - வாழ்த்துகள் பகிறவா?

மகளிர் தினம் என்பது
மற்ற தினங்களை போல் அல்ல
வாழ்த்துகளும் மகிழ்ச்சியையும்
பகிர்ந்து கொள்ள.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த
பெண்ணடிமைதன
வலியும் வேதனையும் தான் மகளிர் தினம்.

எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான சம ஊதியம், ஓட்டு உரிமை என நூறாண்டுகளுக்கு மேலாக நாம் நடத்தும் போராட்டத்தின் நினைவாக
நமது திண்டாட்டத்தை நினைவுபடுத்துவது வெற்று கொண்டாடம் அல்ல.

இது மகிழ்ச்சியை பகிரும் நாள் அல்ல உரிமைக்கான போராட்டத்தை பகிரும் நாள்
முதலாளித்துவ அரசின், ஊடகங்களின் வியாபார வலைக்குள் அனைத்தையும் விற்பனையாக பார்க்கும் பார்வை நமக்கு வேண்டாம் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளார ஜெட்கின் முதல் இன்றுவரை களத்தில் உள்ள அனைத்து பெண் விடுதலை போராளிகளின் நினைவை போற்றுவோம் அவர்தம் கனவை வென்றெடுப்போம் இந்நாளில்.

சோவியத் யூனியன் கொடுத்த உரிமையில் பத்து சதவீதத்தை கூட இதுவரை எந்த அரசும் கொடுக்கவில்லை..

எனவே நண்பர்களே மகளிர் தினத்தை சபதமேற்க்க, உறுதியேற்றிட, ஆணாதிக்கத்தை தகர்திட, மனிதத்தை மீட்க போன்ற வார்த்தைகளுடன் வாழ்த்தை பகிர்ந்திடுங்கள்..
க.நிருபன்
8/3/2019

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...