Friday, April 3, 2020

கலீல் ஜிப்ரான்

இதோ இந்த கலீல் ஜிப்ரானின் கவிதையை வாசியுங்கள். 
துயரடுக்குககளில் துவண்டு கொண்டிருக்கும் மக்களும், மாட்சிமை பொருந்திய அரசுகளும்(மோடிகளும்) காட்சியாக வந்து செல்வார்கள்...

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்
நீங்கள் மகிழ்ச்சியின் மக்கள்.
நீங்கள் சிரிக்கும் போது நாங்கள் வேதனையில் அழுகிறோம்.

எங்களை (ஏழைகளை) நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
ஆனால், நாங்கள்  எம் அனுதாபத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் எங்களை 
நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.
நாங்கள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறோம்
உங்கள் விநோத குரல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்.
எங்கள் அழுகையை நீங்கள் கவனிப்பதே இல்லை
தினங்களின் கூக்குரல்களே உங்கள் செவிகளை நிறைந்திருக்கின்றன

துன்பப்பட்டு அடையும் நாடோடி மீதும் பரிதாபத்துக்குரிய விதவை மீதும் நாங்கள் இரக்கம் கொண்டு அழுகிறோம் 

ஆனால் நீங்கள் பொன்னின் ஒளி கண்டுதான் சிரித்து மகிழ்கிறீர்கள் 

ஒடுக்கப்பட்ட பலவீனர்களின் துயரங்களையும்
ஏழை மக்களின் வேதனை குரல்களையும்
 நாங்கள் செவிகொடுத்து கேட்கிறோம்
அவர்களுக்காக அழுகிறோம்

ஆனால் நீங்கள் அவற்றுக்கு செவி சாய்ப்பது இல்லை உங்கள் செவிக்கினிய ஓசை எல்லாம் 
மது கிண்ணங்களில் உரசல்களே

நாங்கள் உங்களுக்காக மாளிகைகள் சமைத்து கொடுத்தோம் 
நீங்களோ
எங்களுக்காக சவக்குழியை
தோன்றி வைத்தீர்கள் 

அரண்மனைகள் அழகிற்கும் சவக்குழிகள் அருவருப்பிற்குமிடையில்
மனித சமுதாயம் ஆயுதமேந்தி நடைபோட்டு காவல் காக்கிறது 

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள் நீங்கள் மகிழ்ச்சியில் மக்கள்.
கலீல்ஜிப்ரான்.

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...