Wednesday, April 22, 2020

கிம் ஜாங் உன்

#KimJongUn பற்றிய அமெரிக்க சொரியாசிஸ் தகவல் படர்தாமரையாக பரவ எல்லோரும் மாறி மாறி சொரிந்து இரத்தம் வர துவங்கியுள்ளது - அமெரிக்கா இது போல் பலமுறை பிடல் இறந்துவிட்டதாக இரங்கல் செய்தியே வெளியிட்டுள்ளது. பிபிசியும், சிஎன்என்னும் கார்பரேட் மூளைகாரர்களின் கொள்ளைபுற காகிதங்கள்..

Thursday, April 16, 2020

நீ ஒரு கம்யூனிஸ்ட்

"நீ ஒரு கம்யூனிஸ்ட்" என்று சொல்லி இறுதிவரை அமெரிக்க அரசால் குடியுரிமை மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வார்பில் உருவான மாகாகலைஞன்.
நமது சாப்ளினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன்னால் நாங்கள் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் அதிகார வர்க்கத்தை குலைநடுங்க செய்கிறது.

Saturday, April 11, 2020

ஹல்லா போல் - உரக்கபேசு

"ஹல்லா போல் - உரக்கபேசு" - நவீன இந்தியாவின் உழைப்பாளி மக்களின் போராட்ட உணர்வை தட்டியெழுப்பிய வீதி நாடக கலைஞன் தோழர் சப்தர் ஹஸ்மியின் பிறந்த தினம் இன்று. 
1989 புத்தாண்டின் இரவில் தனது ஹல்லா போல் எனும் வீதிநாடகத்தை தில்லியின் அருகேயுள்ள சந்தாபூரில் நடத்தி கொண்டிருக்கும் போது ஆளும் வர்க்கத்தின் ரெளடிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். 

அவர் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இரண்டாம் நாளே ஹல்லா போல் நாடகத்தை அவர் மனைவி மாலா மீண்டும் அரங்கேற்றி நிறைவு செய்தார். 

இன்றும் ஆயிரக்கணக்கான வீதி நாடகக் கலைஞர்கள் ஹாஸ்மியின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி இந்திய தேசத்தின் வீதிகளில் உரக்கப்பேசி வருகிறார்கள். 

"ஹல்லா போல்''

#SFI #SFI50

Tuesday, April 7, 2020

சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று

இது ஒரு அற்புதமான காட்சி வியாட்நாமில் லாக்டவுன் அறிவித்துள்ள நிலையில் சாதாரண ஏழைமக்கள் பயன்படுத்தும் வகையில் அரிசிக்கான 24மணிநேர ATM வைத்துள்ளது. இதில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் இரண்டு கிழோ அரிசிவரை வரும். ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

 "உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களை போன்ற மற்றவருக்கும் கொஞ்சம் தாருங்கள்" என்பதை போன்ற வாசகம் இதன் முழக்கமாக வைத்துள்ளனர். யாரும் தேவைக்கு மேல் எடுத்ததில்லை என்பது கூடுதல் சிறப்பு.


அந்த நாட்டின் அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 1,90,000 டன் அரிசி மக்களுக்கானதாக அறிவித்துள்ளது... 


ஜூன் இறுதிவரை முழு லாக்டவுன்அறிவித்துள்ள நிலையில் உணவு பொருள், மருந்து கையிருப்பு, மருத்துவமனை, இணையவழி பாடம் அனைத்தும் வியாட்நாமில் உறுதி செய்யபட்டுள்ளது..  


வியாட்நாம் சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சோசலிச குடியரசு நாடாகும்..


#SocialismistheFuture #socialism #covid_19 #pandamic

Monday, April 6, 2020

மதத்துவேசத்தை நிறுத்துங்கள்

KARVAANINDIABBC
இங்கிலாந்தில் கொரோனா பரவ இஸ்கான் இந்து அமைப்பின் ஒரு இறுதிநிகழ்வு காரணமாக இருந்துள்ளது.. சுமார் 1000 பேர்வரை பங்கேற்ற இந்நிகழ்ச்சி மார்ச் 12ல் நடந்துள்ளது... இது இன்றைய உலகிற்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்தி இருக்கிறது....
இந்த செய்தி இந்தியாவில் தப்ளீஸ் இஸ்லாமியர்கள் மீது அமில மழை பொழியும் மதவெறியர்களுக்கு ஒரு பாடம். இஸ்கான் எனப்படு கிருஷ்ண வழிபாட்டுகார்களுக்கும், தப்ளீசினருக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பொருத்தவரை எந்த வேறுபாடுமல்ல... இரண்டு நிகழ்வும் ஊரடங்கு முன்பு நடந்துள்ளது.. இரண்டையும் அரசுதான் முன்னெச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும்... இரண்டுமே தவறவிட்டது அரசுதான் இஸ்கான் மார்ச் 12 என்றால் தப்ளீஸ் மார்ச் 13-15 .... பின்புதான் மார்ச் 16ல் பிரட்டனும் 22ல் இந்தியாவும் ஊரடங்கை அறிவித்தது... இங்கு எப்படி தப்ளீஸ் அமைப்பினரை போலவே இஸ்கான்களும் இந்த உலகாலாவிய நோய் தொற்றை ஆரம்பத்தில் அலட்சியம் செய்துள்ளனர்.. பிறகு இரண்டு அமைப்பின் மதத் தலைவர்களுமே தனித்திருப்பதையும் டெஸ்டிங்கையும் ஒத்துக்கொண்டதுமே நல்ல அம்சம்.... 

ஆனால் அங்கு யாரும் இந்துகள் தான் இங்கிலாந்தில் கொரோனாவை பரப்பினார்கள் என சொல்லவில்லை.... இத்தனைக்கும் போரிஸ் ஜான்சன் ஒரு கடைந்தெடுத்த வலதுசாரி... அவ்வாறு அவர் அங்கு சொல்வாரேயானால் பொதுசமூகம் அவர்மீது காரி உமிழ்ந்துவிடும்... ஆனால் இந்தியாவில் நேர்மாறாக இது சீன வைரஸ் என்பதிலிருந்து.. இஸ்லாமிய வைரஸாக மாறியுள்ளது... 
உலகின் பல வேறுபாடுகளை உடைத்தெரிந்த இந்த வைரஸ் இந்தியாவின் மதவெறியர்களின் கரடுதட்டிபோன மூளைகளையும் சரிசெய்யுமா என பார்போம்... 

கிளாடியேடர்காலத்தில் கைளில் போர்வாலுடன் இருக்கும் படைவீரர்களை எந்தவித ஆயுதகளுமின்றி அல்லது ஒரு சாதாரண தற்காப்பு கருவியை மட்டும் வைத்துக்கொண்டு அடிமைகள் மோதுவார்கள்... இதில் கொடூரமாக அடிமைகள் கொலைசெய்யப்படுவார்கள்.... இதில் அந்த படைவீரனுக்கு பழக்கப்பட்ட சிங்கம், புலி போன்ற கொடூர மிருகம் வேறு களமிறக்கப்படும்... 

அத்தகைய சூழலில் விடுதலை என்ற ஒற்றை நம்பிக்கையுடன் மட்டும் போராடும் அடிமைகளை போல் நாமும் போராடுகிறோம்.... நிச்சயம் ஸ்பார்ட்டகசும் அவனை தொடர்ந்து விடுதலைப்பெற்ற அடிமைகளையும் போல மோதிக்கொண்டே இருக்க வேண்டயது தான்..... அப்படி ஏற்படும் மாற்றம் நமக்கானதல்ல அது எல்லோருக்கானதாக இருக்கும்.... 

க.நிருபன் சக்கரவர்த்தி

Friday, April 3, 2020

கலீல் ஜிப்ரான்

இதோ இந்த கலீல் ஜிப்ரானின் கவிதையை வாசியுங்கள். 
துயரடுக்குககளில் துவண்டு கொண்டிருக்கும் மக்களும், மாட்சிமை பொருந்திய அரசுகளும்(மோடிகளும்) காட்சியாக வந்து செல்வார்கள்...

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்
நீங்கள் மகிழ்ச்சியின் மக்கள்.
நீங்கள் சிரிக்கும் போது நாங்கள் வேதனையில் அழுகிறோம்.

எங்களை (ஏழைகளை) நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
ஆனால், நாங்கள்  எம் அனுதாபத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் எங்களை 
நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.
நாங்கள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறோம்
உங்கள் விநோத குரல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்.
எங்கள் அழுகையை நீங்கள் கவனிப்பதே இல்லை
தினங்களின் கூக்குரல்களே உங்கள் செவிகளை நிறைந்திருக்கின்றன

துன்பப்பட்டு அடையும் நாடோடி மீதும் பரிதாபத்துக்குரிய விதவை மீதும் நாங்கள் இரக்கம் கொண்டு அழுகிறோம் 

ஆனால் நீங்கள் பொன்னின் ஒளி கண்டுதான் சிரித்து மகிழ்கிறீர்கள் 

ஒடுக்கப்பட்ட பலவீனர்களின் துயரங்களையும்
ஏழை மக்களின் வேதனை குரல்களையும்
 நாங்கள் செவிகொடுத்து கேட்கிறோம்
அவர்களுக்காக அழுகிறோம்

ஆனால் நீங்கள் அவற்றுக்கு செவி சாய்ப்பது இல்லை உங்கள் செவிக்கினிய ஓசை எல்லாம் 
மது கிண்ணங்களில் உரசல்களே

நாங்கள் உங்களுக்காக மாளிகைகள் சமைத்து கொடுத்தோம் 
நீங்களோ
எங்களுக்காக சவக்குழியை
தோன்றி வைத்தீர்கள் 

அரண்மனைகள் அழகிற்கும் சவக்குழிகள் அருவருப்பிற்குமிடையில்
மனித சமுதாயம் ஆயுதமேந்தி நடைபோட்டு காவல் காக்கிறது 

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள் நீங்கள் மகிழ்ச்சியில் மக்கள்.
கலீல்ஜிப்ரான்.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...