Friday, November 23, 2018

மாணவிகள் மீது தொடரும் பயங்கரம்

மாணவிகள் மீது தொடரும் பயங்கரம்...😡

தர்மபுரி அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தை சார்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பழங்குடி மாணவி சௌமியா தனது வீட்டின் அருகேயுள்ள ஓடையில் வைத்து சதீஸ், ரமேஸ் எனும் கொடூரர்களால் பாலியல் பலாத்கார முயற்ச்சியில் பரிதாபமாக உயிரிழப்பு.

5 ம் தேதி நடந்த இச்சம்பவத்தை
6 தேதி காவல்துறை வழக்கு பதிவு செய்து
இரண்டு நாள் ஹோமில் வைக்கப்பட்ட மாணவி
உடல்நிலை மோசமானதை தொடர்ந்து
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்பட்டுள்ளார்
முறையான சிகிச்சையின்மையால் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய மாணவர் சங்க தரப்பில் காவல்துறையிடம் விசாரித்த போது இன்று வரை குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காதது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்கு பின் மாணவி உயரிழந்திருப்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

தலித் மாணவிகளும், பழங்குடி மாணவிகளும்  கிள்ளுகீரைகளாக எண்ணும் அரசு எந்திரத்திற்கு எதிராக போராட்டம் தொடரும்....
-க.நிருபன்

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...