சிலியின் புதிய சகாப்தம் துவங்கியது.
நேற்று, சிலி தேசத்தின் ஜனாதிபதியும் இடதுசாரியுமான கேப்ரியல் போரிக் தனது மந்திரி சபையை அறிவித்துள்ளார். அதில் 24 அமைச்சர்களில் 14 பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கதாகும். சுமார் 60% விழுக்காடு வரை அமைச்சரவையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து முதலாளிதுவ ஊடகங்களே சிலாகித்து எழுதி வருகிறது. "இது இயல்பானதே குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்கள் என்ற வகையில் அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கேப்ரியல் கூறியுள்ளார்.
மேலும் இதில் மூன்று அமைச்சர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களாவர். அதில் தோழர் கமிலா வலேஜோ அவர்கள் அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளராக அறிவித்துள்ளனர். அவர் புரட்சிகரமான பல மாணவர் இயக்க போராட்டங்களை வழிநடத்திய இளம் கம்யூனிஸ்ட் ஆவார்.
2008 ஆம் ஆண்டு சிலியை ஆண்டு வந்த அமெரிக்க ஏகாதிபத்திய நிழல் அரசுக்கு எதிரான வலுமிகிக்க போராட்டம் நடந்த போது போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு, இரப்பர் தோட்டக்களால் சுடப்பட்டபோது வெடித்து சிதறிய துப்பாக்கி குண்டுகள் தோட்டா சிதிலங்களை குவித்து அதன் முன் அமர்ந்து அவர் நடத்திய தொடர் போராட்டத்தின் புகைப்படமே இரண்டாவதாக இருப்பது.
மூன்றாவது புகைப்படத்தில் இருப்பது மற்றொரு அமைச்சரும் சிலி சோசலிஸ்ட் கட்சியின் மகத்தான மக்கள் தலைவர் தோழர் சால்வடார் அலெண்டெவின் பேத்தி தோழர் மாயா பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சர். தோழர் அலெண்டெ இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் தேர்தல் முறையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சிஸ்ட் ஆவார். அவர் தேர்தெடுக்கப்பட்டதை பொருத்துகொள்ள முடியாத ஏகாதிபத்தியம் 1973 ஆம் ஆண்டு அமெரிக்க சிஐஏ வின் மனித ஓநாய்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இனி அலெண்டே வாரிசுகள் வட்டியும் முதலுமாய் திருப்பி செலுத்தும் காலம் துவங்கிவிட்டது.
#Chile #socialist #Communist #socialism #communism #DemocraticSocialism #Left #LeftAlternative #Leftist #latinamerican