Thursday, November 25, 2021

வரலாறு என்னை விடுதலை செய்யும்..!!

வரலாறு என்னை விடுதலை செய்யும்..!!

"70 பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டைத்தான் நான் குறிப்பிடுகிறேன். அதாவது, நாம் இதற்கு முன் அறிந்திராத மாபெரும் படுகொலையைத்தான் நான் குறிப்பிடுகிறேன். 
குற்றவாளிகள் ஆயுதங்களுடன் இன்னும் மறைந்துதான் இருக்கிறார்கள். அவர்களின் கைகளிலுள்ள அந்த ஆயுதங்கள் தொடர்ந்து குடிமக்களை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. 

நீதிபதிகளின் கோழைத்தனத்தாலோ அல்லது நீதிமன்றங்களின்மீது, ஆட்சியாளர்களுக்குள்ள பிடிப்பினாலோ இன்னமும் சட்டத்தின் முழுவலிமையும் குற்றவாளிகளின்மீது பாயாமலிருக்குமானால், அந்த நிலையிலும் நீதிபதிகள் தங்களது பதவிகளைத் துறக்காமலிருப்பார்களேயானால் மதிப்பிற்குரிய நீதிபதிகளே, உங்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். 

இதற்கு முன் எப்போதும் இருந்திராத அவமானம் நீதித்துறையின்மீது விழப்போகிறது என்பது குறித்து நான் வருத்தப்படுகிறேன்.

இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் சுடுமையாக இருக்கும் என்பதையும் கோழைத்தனமான அடக்கு முறைகளும் மிருகத்தனமான கொடுமைகளும் அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் அறிவேன். 

இருந்தபோதிலும், எனது உயிரினுமினிய 70 தோழர்களைப் பலி வாங்கிய அந்தக் கொடுங்கோலனின் கோபத்தைக் கண்டு நான் எவ்வாறு அஞ்சவில்லையோ, அதைப்போன்றே இந்தச் சிறைவாசத்தை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை! 

என்னைத் தண்டியுங்கள்! 
அது எனக்குப் பொருட்டல்ல! 
வரலாறு என்னை விடுதலை செய்யும்..!!

- தோழர் பிடல் காஸ்ட்ரோ
(ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016)

#FidelCastro #Cuba #socialism

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...