ஒரு முறை கண்திறந்து பாருங்கள் பாரத பிரதமரே இவர்கள் செய்த தவறென்ன. கொரோணா வைரஸை ஒழிக்க இவர்கள் கைகளையும் தட்டுவார்கள், மணியும் அடிப்பார்கள். தங்கள் சொந்த காசை வங்கியில் எடுக்க முடியாமல் கால்கடுக்க நின்று அந்த வங்கியின் அருகிலேயே மாண்டும் கிடப்பார்கள்.
கழிவறையின் கனநேரச் சிந்தனையில் உதிக்கும் உங்களின் பல யோசனைகளுக்கு உங்களை சுற்றியுள்ள பின்னணி இசைஞர்கள் போல அரசியல் மரமண்டைகள் ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் சொல்லலாம்.
நீங்களும் வருத்த முந்திரியும் திராட்சையும் சாப்பிட்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு உங்கள் யோசனையை அறிவித்து நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அமல்படுத்தலாம். ஆனால்
இவர்களை பற்றி ஒரு சில விநாடிகளாவது சிந்தியுங்கள். இராமாயணம் பார்த்து பொழுதை கழிக்க இவர்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் எம்பிக்கள் அல்ல.
பசியுடன் இரத்தம் வழியும் கால்களுடன் 1000 கி.மீகளை நடந்தே கடக்கும் இவர்களுக்கா ஒரு சிறு அவகாசம் வழங்கியிருக்கலாமே உயர்திரு 56 இஞ்ச் மோடி அவர்களே.