இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களே கொஞ்சம் கவனியுங்கள்.
இன்றைய விலை நிலவரம்
(திருப்பூர், தோட்டத்து பாளையம்)
வெங்காயம் கிலோ - 100
கத்தரிக்கா கிலோ- 120
உருளைக்கிழங்கு கிலோ - 55
முள்ளங்கி கிலோ- 60
கேரட் பீன்ஸ் கொலோ- 100
மாங்காய் கிலோ - 80
முருங்கைக்காய் ஒன்று - 10
.........etc
வேலைக்கு போகாமல் வீட்டிலிருந்தால் எப்படி வாங்குவது இந்த விலை உயர்ந்த பொருட்களை. வேலையுமில்லை கையில் காசுமில்லை. ரேசன் அரிசியில் சாதம் வடித்தாலும் எவ்வளவு நாள் குழம்பு வைத்து சாப்பிட முடியும் தெரியல. கேஸ் அடுப்பு தீறப்போகிறது கேஸ் வந்தாலும் 900 ரூபாய்க்கு எங்க போவது.
பெட்ரோல் 73, டீசல் 66 என்கிற விலையையாவது குறைந்தபட்சம் 10 ரூபாய் குறைத்தாலே போதும் ஓரளவு விலை குறையுமென எங்கள் தெருவின் கடைக்காரே சொல்கிறார்.
வங்கி மற்றும் பல்வேறு வகையில் வாங்கிய கடன்/லோனிற்கான வட்டியை, வீட்டு வாடகையை எப்படி கட்டுவது. சிறு தொழில், சிறு உற்பத்தியாளர்கள் எங்கள் பகுதியில் பலபேர் உள்ளனர். சாமானியனையும் தாண்டி அவர்களையும் ஜிஎஸ்டி, இஎம்ஐ கழுத்தை நெருக்குகிறது.
எங்கள் பகுதியின் பனியன் கம்பெனிகளையும் மூடிவிட்டார்கள் இதுவரை செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்க ஆர்டர் கொடுத்தவர்களிடமிருந்து பணம் வரவில்லை. எனவே ஊதியமுமில்லை.
கொரானா தொற்றை கட்டுபடுத்த இன்னும் எத்தனை நாட்கள் தாங்கள் வீட்டிலிருக்க சொல்லுகிறீர்களோ அத்தனை நாட்கள் நாங்கள் இருக்க தயாராயுள்ளோம். எங்கள் அருகாமையில் இருப்போரையும் ஒத்துழைக்க செய்வோம்.
பணமதிப்பு நீக்கத்தை ஒரே இரவில் நீங்கள் அறிவித்த போது கருப்பு பணத்தை ஒழித்து எங்கள் அக்கவுண்டில் 15 இலட்சத்தை போடுவதாக சொன்னீர்கள் ஆனால் நம் தேசத்தின் சொத்தான ரிசர்வ் வங்கியிலிருந்து ஒன்னறை இலட்சம் கோடியை எடுத்து பாவபட்டு கஸ்டப்படும் அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.
அந்த முதலாளிகள் யாரும் ஒரு பைசா மக்களுக்காக இதுவரை உதவியதில்லை ஆனால் பெட்ரோல் டீசல் இலாபத்தில் மட்டும் மத்திய அரசோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
சாமானிய மக்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள உணவு தானியங்கள் 6500 கோடி டன்னில் சிறு பகுதியையாவது மக்களுக்கு கொடுக்க முன்வாருங்கள்.
ஒரு மாநில அரசு கேரளா 20 ஆயிரம் கோடி ஒதுக்கும் போது ஒட்டு மொத்த தேசத்திற்கே 15 ஆயிரம் கோடி எந்த மூளைக்கு போதுமானதாக இருக்கும். உங்கள் அதிகாரிகளை கடந்து வருவதற்கே இது போதுமானதல்ல.
வெறும் கையில் நீங்கள் முழம்போடுவதை நம்பும் எங்கள் பகுதியில் உள்ள உங்கள் கட்சி தொண்டர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் கேட்கிறோம்.
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே வழக்கம் போல் உங்க ஸ்டைலில் இன்னும் சில நாட்களில் இரவு 8 மணிக்கு வந்து ஏதேனும் அறிவிப்பு செய்வீர்கள் என நம்புகிறோம்.
-க.நிருபன் சக்கரவர்த்தி