Wednesday, January 29, 2025

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின் 
செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 80 டிரிலியன் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் அதிபாராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அடாவடித்தனமான அறிவிப்புகளை வெளியிட்டு கொக்கரித்துக் கொண்டிருந்தார். அவர் அறிவிப்பின் முக்கிய பொருளாதார பலனாக அவர் பேசியது ChatGPT AI உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பிற நிறுவனங்கள் 500 பில்லியன் டாலர்கள் (4.3 இலட்சம் கோடி) முதலீடு செய்ய போவதாக உறுதியளித்திருந்தது என்பதை தனக்கான வெற்றியாக பறைசாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த வாரம் திங்கட் கிழமை 20ம் தேதி, சீனாவின் DeepSeek நிறுவனம் AI ChatGPT யை அறிமுகப் படுத்தியது தான் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம். அறிமுகமான ஒருசில நாட்களிலேயே ஆப்பிள், கூகுள் ஆப் ஸ்டோர்களில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை படைத்துள்ளது. உலக செமிகண்டக்டர் சிப் துறையே அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. உலகின் முதல் 10 செமிகண்டக்டர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1 டிரில்லியன் டாலருக்கும் மேல் (87 இலட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக NVIDIA பங்குகள் 20 விழுக்காட்டிற்கும் மேல் சரிந்துள்ளன.

உலக AI ChatGPT துறையை நொடியில் அதிரவைத்த DeepSeekக்குப் பின்னால் இருப்பவர் சீனாவின் லியாங் வென்ஃபெங். 1985ல் பிறந்த லியாங் வென்ஃபெங் (40 வயது), 2015 ஆம் ஆண்டு தனது கல்லூரி நண்பர்களுடன் AI-ஐ மையப்படுத்திய ஹெட்ஜ் நிதியான High-Flyer நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு, 2023 ஆம் ஆண்டு, செயற்கை பொது நுண்ணறிவு, மனித நுண்ணறிவுடன் பொருந்தக்கூடிய வகையில் AI யை உருவாக்கும் நோக்கத்தில் DeepSeek நிறுவனத்தைத் தொடங்கினார் லியாங்.

DeepSeek இன் R1 மாடல் அதன் AI ChatGPT உருவாக்க அமெரிக்க நிறுவனங்கள் செய்த மொத்த செலவில் ஒரு பங்கிலேயே, லியாங் DeepSeek AI யை உருவாக்கியுள்ளார். அதிநவீன AI க்கு மிகப் பெரிய முதலீடும், உட்கட்டமைப்பும் தேவை என்ற நிலையை DeepSeek தலைகீழாக மாற்றியுள்ளது. 600 மில்லியன் டாலர்கள் (5,100 கோடி ரூபாய்) செலவில் 4,500 ஊழியர்களை கொண்டு AI ChatGPT உருவாக்கியிருந்த நிலையில், சீனாவின் DeepSeek AI யை உருவாக்க வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (50 கோடி ரூபாய்) மட்டுமே செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் GOOGLE, META , X போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் OpenAI யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட AI முயற்சியினை வெறும் இரண்டு ஆண்டுகளில் தகர்த்துள்ளது DeepSeek .

OpenAI மற்றும் GOOGLE போன்ற நிறுவனங்கள் 100 CHIP களைக் கொண்டு AI யை உருவாக்கினால், சீனாவின் DeepSeek வெறும் 50 CHIP களை வைத்து, மிகவும் சக்தி வாய்ந்த அதிநவீன AI மாடல்களை உருவாக்கியுள்ளது. சொல்லப்போனால், அதிகமான Hardware கட்டமைப்பு இல்லாமல், எளிய கட்டமைப்பில் இயங்க கூடிய வகையில் இந்த DeepSeek AI உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது, குறைவான கம்ப்யூட்டிங் ஆற்றலைப் பயன்படுத்தி சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்க முடியும் என்பதை DeepSeek நிரூபித்துள்ளது. இதனால், இனி வரும் காலத்தில் SEMICONDUCTOR CHIP களின் தேவை AI துறையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், OpenAI மற்றும் பிற நிறுவனங்கள் அமெரிக்காவில் AI உள்கட்டமைப்பை உருவாக்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதியளித்தன. இதனை " வரலாற்றில் மிகப்பெரிய AI முதலீடு " என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் எல்லா துறைகளையும் DeepSeek ஆட்டம் காண வைத்துள்ளது. ஒரே அடியில் அமெரிக்க AI உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது.

சமீப காலமாக, AI ChatGPT வேகமாக வளர்ந்து வந்தது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த தேடுபொறிகள், கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்க்கும் பதில் அளிக்கும். கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இல்லாமல், குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்தும் பதில்களை வழங்கும். AI தொழில்நுட்பத்தின் புதிய உச்சமாக இந்த ChatGPT கோலொச்சியிருந்தது. இந்த AI ChatGPT தொழில் நுட்பத் துறையில், OpenAI ChatGPT, google gemini என அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் மக்கள் சீனத்தின் DeepSeek AI அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் புரட்டி எடுத்து முன்னுக்கு வந்துள்ளது.

DeepSeek என்பது உண்மையில் சீன பங்கு வர்த்தக நிறுவனமான High-Flyer க்கு சொந்தமான ஒரு சீன ஸ்டார்ட்-அப் (துவக்க நிலையில் உள்ள நிறுவனம்) ஆகும். சீனாவில் இந்த ஸ்டார்ட்-அப், சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து இளம் மற்றும் திறமையான AI ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து தேவைக்கு ஏற்ற கூடுதலான ஊதியத்துடன் அதிநவீன ஆராய்ச்சி திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியுள்ளது. Hi-Flyer மற்றும் DeepSeek இரண்டும் சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங்கால் நடத்தப்படுகின்ற நிறுவனமாகும்.

இனி உலகின் எந்தவொரு நாடும், தனிநபரும் இதன் பயன்பாட்டை மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். விவசாயம் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பெரும் செலவை இது குறைத்துள்ளது. இலாபம் மட்டுமே நோக்கமாக கொண்ட முதலாளிதுவ நாட்டிற்கும், மக்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட நாட்டிற்குமான முரண்பாட்டில் சீனா முன்னிலை பெற்றுள்ளது. சோசலிசத்தை நோக்கிய மக்கள் சீனத்தின் மற்றுமொரு மைல் கல்லாக இது அமையும்.

- க.நிருபன் சக்கரவர்த்தி

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...