(15-03-19)
புதுக்கோட்டையில் நேற்றைய தினம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதி கேட்டு கல்லூரி மாணவிகள் பெருந்திரளாக போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் தோழர் அரவிந்தசாமி மற்றும் மாவட்ட நிர்வாகி ஜனா ஆகியோர் வழிநடத்தியுள்ளார்கள். போராட்டத்தை ஒடுக்க எண்ணிய காவல்துறை கண்கானிப்பாளர் செல்வராஜ் தனது காவல் பரிவாரங்களுடன் இறங்கி போராட்டத்தை தலைமையேற்று பேசிவந்த அரவிந்த், ஜனா மற்றும் சில தோழர்களை குறிவைத்து கடுமையாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும் வாகனத்தின் உள்ளே வைத்து தாக்கியதில் அரவிந்த் மயக்கநிலையை அடைந்துள்ளார்.
இச்சூழ்நிலையில் போராட்டம் நடத்தி வந்த மாணவிகள் தங்கள் தோழனை தாக்குவதை கண்டு வாகனத்தை அரைமணி நேரத்திற்கும் மேலாக மறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸ் எவ்வளவு முயன்றும் வாகனத்தை மறித்த மாணவிகளை அப்புறப்படுத்த முடியவில்லை. பின் மாணவிகள் வாகனத்திற்க்குள்ளிருந்த தோழர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போராட்டத்தின் வீச்சையும் சங்கத்தின் வலிமையும் கண்டு மிரண்டு போன காவல்துறை அடக்குமுறையை கைவிட்டுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சங்கத்தின் தலைமையில் மாநிலச்செயலாளர் மாரியப்பன், பிரகாஸ் உள்ளிட்டோர் தலைமையேற்று முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் கண்கானிப்பாளர் செல்வராஜ் அரவிந்த சாமி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை இப்போராட்டம் நமக்கு காட்டுகிறது. மாணவர் ஒற்றுமையும், சமூகத்தின் மீதான உண்மையான காதலும் உள்ளவரை நம்மை எந்த அடக்குமுறையும் ஒன்றும் செய்துவிட முடியாது.
No comments:
Post a Comment