Tuesday, November 26, 2019

மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!!!! அவர் தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்!!!! ***************************

மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!!!!
அவர் தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்!!!!
***************************

மகாராஷ்டிரத்தில் மிக ஏழ்மையான சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிக்கோல். அந்த தோழரைக் குறித்து மனோரமா குழுமத்தின் ஆங்கில வார இதழான ‘தி வீக் இப்படி குறிப்பிடுகிறது.

‘மகாராஷ்டிரத்தில் ஜனநாயகத்தை வெக்கி தலைகுனிய வைக்கும் அரசியல் குதிரை வியாபாரம் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கோடீஸ்வரர்களான எம்எல்ஏக்கள் மத்தியில் சாதாரண மனிதரான சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிக்கோல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைபோகாத, வாக்களித்த மக்களுக்கும் வாய்ப்பளித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நம்பிக்கையான ஒரு எம்எல்ஏ மட்டுமே மகாராஷ்டிரத்தில் உள்ளார். அது தோழர் வினோத் நிக்கோல்தான்’.

இந்த செய்தி குறித்து மகாராஷ்டிராவில் வேலை செய்யும் மலையாளியான தீபக் பச்சுவின் முகநூல் பதிவு இது, “எனக்கு இதுபோன்ற மிகவும் ஆவேசமும். பெருமையும் அளித்த அரசியல் அனுபவம் அண்மை காலத்தில் ஏற்பட்டதில்லை. இப்போது இந்த காலைப்பொழுதில் என்னோடு வேலை செய்யும் நண்பர் ‘தி வீக்’ ஆங்கில வார இதழில் வெளியான செய்தியை எனக்கு செல்பேசியில் காட்டினார். அதன் தலைப்பு இவ்வாறு இருந்தது. 'Maharashtra : Why no one is trying to woo this MLA'.  (மகாராஷ்டிரா: இந்த எம்.எல்.ஏ.வை ஏன் கவர்ந்திழுக்க யாரும் முயற்சிக்கவில்லை)

            மகாராஷ்டிரத்தில் 288 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் அளித்துள்ள கணக்கு விவரங்கள் அடிப்படையில் இவர்களது சராசரி சொத்து மதிப்பு 22.4 கோடியாகும். 93 சதவிகிதம் எம்எல்ஏக்கள் கோடீஸ்வர்கள். 2014இல் இது 10.8 கோடியாக இருந்தது. அதாவது ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகரிக்கும் சொத்துக்களுடனேயே சட்டமன்றம் செல்கிறார்கள்.

ரூ.500 கோடிக்கு சொத்துகள் கொண்ட பாஜக எம்எல்ஏ பராக் ஷாதான் மிகப்பெரிய பணக்காரன். பாஜகவின் மும்பை தலைவர் மங்கள் பிரதாப் லோயாதான் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு மத்தியில் மிகவும் ஏழை, ரூ.51 ஆயிரத்து 82 மட்டுமே சொத்தாக உள்ள சிபிஎம் எம்எல்ஏ வினோத் நிக்கோலாதான். கட்சியின் முழுநேர ஊழியர் ஆவதற்கு முன்பு ‘வடாபாவ்’ விற்றவர் தோழர் வினோத். அதாவது சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்களில் அதிக தேவைகள் இருந்த மனிதர் இவர்தான். ஆனாலும் பணாதிபத்திய அரசியலால் அவரை நெருங்க முடியவில்லை. கோடிகள் புரளும் இடத்தில் அவரது பார்வை சொந்த அரசியலிலிருந்து விலகவில்லை. இந்த தோழரைப்பற்றிதான் மனோரமாவின் தி வீக் அவ்வாறு எழுதியது.

அலுவலகத்தின் இருக்கை அருகில் வந்து நின்ற அந்த நண்பரிடம் தலை நிமிர்ந்து பெருமிதத்தோடு நான் கூறினேன். "...because, he is our comrade and a Communist".  (ஏனெனில் அவர் நமது தோழர் மட்டுமல்ல ஒரு கம்யூனிஸ்ட்) இதை கூறியதும் எனது கால்விரல் நுனியிலிருந்து ஒரு சிறிய குளிர்ச்சி உடம்பில் பரவி சிலிர்க்க வைத்தது.

நான் கூறியதை புரிந்துகொள்ளும் அரசியல் அறிவு அந்த தமிழ் இளைஞனிடம் உண்டு”. என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...