அமெரிக்க ஓநாயின் தீராத இரத்தவெறி..😡
டிரம்பின் உத்திரவின்படி ஈரானின் தளபதியை படுகொலை செய்துள்ள அமெரிக்க இராணுவம்
மத்திய கிழக்கின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக இருந்த ஈரானை பதம் பார்க்க வெறிகொண்ட ஓநாயாக ட்ரம்பின் இராணுவம் தேன் கூட்டில் கல்லெரிந்துள்ளது. எண்ணெய் வளங்களை சுரண்டி கொழுக்க அமெரிக்க நேட்டோ நாடுகளின் சதிகளை துணிவுடன் எதிர்கொள்ள காரணமாக இருந்தவர் ஈரானின் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி.
கடந்த இருபதாண்டுகளாக CIA வின் எழும்பு துண்டுகளுக்கு மத்தியகிழக்கின் எத்தனையோ பலமிக்க அரசியல்வாதிகள் விலைபோனபோதிலும் ஈரானை வளைக்க முடியாமல் திணறியது. அமெரிக்க அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் குழாய்வழியில் எண்ணெய் பகிர்வு திட்டங்கள் அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்தது.
உலகின் ரௌடி தாதா அமெரிக்காவை விளையாட்டு பிள்ளையாக உதாசினபடுத்தும் வடகொரியா, சீனா போன்ற நாடுகளோடு ஈரான் நட்பு பாராட்டுவது உள்ளபடியே அமெரிக்காவிற்கு கப்பம் கட்டும் பல அடிமை நாடுகளுக்கு பயத்தை கலைக்க துவக்கியது.
அமெரிக்க நேட்டோவின் வளர்பு பிள்ளைகள் அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பின் கொட்டத்தை சுலைமானி ஒடுக்கினார்.
ஈராக் மற்றும் அரபு நாடுகள் கூட ஈரானின் அதிபர் ஹசன் ரௌஹானியை பின்தொடரும் நிலைக்கு மாறியிருப்பது சொல்லவா வேண்டு அமெரிக்க ஓநாய்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த.
எனவேதான் ரௌஹானியின் பலத்தை நம்பிக்கையை உடைக்க மத்தியகிழக்கின் மிகவும் பலமிக்க இராணுவ தளபதியை கோழைத்தனமான முறையில் ஈராக்கிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் போது ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் குண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளது. ஆப்கான், ஈராக், சிரியா, லிபியாவை போல் ஈரானின் எண்ணெய் வளத்திற்கான அமெரிக்காவின் சதியை உலகமக்கள் முறியடிக்க வேண்டும்.
ஏகாதிபத்திய கார்பரேட் ஊடகங்களின் ஊதுகுழலாக இருக்கும் ஊடகங்களுக்கு மாற்றாக மக்கள் ஊடகமாக விளங்கும் சமூகவளைதளங்களில் உண்மை நிலையை பகிர்வோம்…
-க.நிருபன்
#Iran #ஈரான் தளபதி கொலை #IranUSWarTension #IranUSWarTension
No comments:
Post a Comment