Wednesday, March 18, 2020

இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் மார்க்சீய சிந்தனையாளர் தோழர் இஎம்எஸ் நினைவு தினம் இன்று

இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் மார்க்சீய சிந்தனையாளர் தோழர் இஎம்எஸ் நினைவு தினம் இன்று... 
உலக வரலாற்றில் மக்களால் ஓட்டு போட்டு முதன்முதலில் தேர்தெடுக்கபட்ட கம்யூனிஸ்ட் முதல்வர்..

இந்திய முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் 1957 பொது தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து கம்யூனிஸ்ட் அரசவையை அமைத்தார்..

மாணவர்களுக்கு மதிய உணவு, நிலசீர்திருத்தம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் பாதுகாப்பு, தோட்டத்தொழில், தேயிலை போன்ற மலையக தொழிலாளர்களின் ஊதிய உத்திரவாதம், சங்கம் சேரும் உரிமை, மருத்துவம் சுகாதாரம் விரிவுபடுத்தியது, பெண்கள் மீதான சாதிய கட்டுகளை உடைத்து உரிமைகளை நிலைநாட்டியது... போன்ற எண்ணற்ற புரட்சிகரமான நடவடிக்கைகள் மூலம் கேரளத்தை சிவக்க செய்தார் இஎம்எஸ்...

நேருவின் காங்கிரஸ் அரசாங்கம் கேரளத்தை கண்டு அஞ்சிநடுங்கியது மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஒரு கம்யூனிஸ்ட் அரசவை இருப்பதை பொருத்து கொள்ள முடியாமல் அமெரிக்க உளவுதுறை சிஐஏ மூலம் சதி தீட்டியது ..

வன்முறை வெறியாட்டங்களை திட்டமிட்டு தூண்டப்பட்டதை தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டம் 356யை பயன்படுத்தி இரண்டே ஆண்டுகளில் 1959ல் கேரள மக்கள் அரசை மத்திய அரசு கலைத்தது..

ஆனால் அதன் பிறகு பல முறை கேரளத்திலும், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மலர, வழிநடத்த எடுத்துகாட்டாய் சிறந்த அனுபவமாய் அந்த இரண்டு ஆண்டுகள் அமைந்து போனது...

முதலாளித்துவ அரசிற்குள் மக்களுக்கான போராட்டங்களோடு பாரளுமன்றத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை செயல்யுக்திகளையும் வகுத்தளித்ததில் இஎம்எஸ் முன்னோடியாக உள்ளார்..

அவரின் சம காலத்தில் அவர் சந்தித்த அதே ஆட்சி கவில்பு சதிகளை மற்றொரு மக்கள் தலைவனும் சந்திதார் அமெரிக்க ரௌடி சிஐஏ மூலம் படுகொலை செய்யபட்ட சிலி அதிபர் சால்வடார் அலெண்டே தான்..

முதலாளிதுவம் ஒருமுறை விழ்த்தப்படும்போது மீண்டும் அது நூறு மடங்கு பலத்தோடு எதிர் தாக்குதலை தொடுக்கும் என்ற மாமேதை லெனின் கூறியதற்கேற்ப ஆட்சி மாற்றம் மட்டும் தீர்வல்ல அடிப்படையே மாற்றி அமைப்பது அனைத்து பகுதிகளையும் புரட்சிகரமாக்குவது...

இஎம்எஸ் எந்தவொரு சூழலிலும் பாராளுமன்றமே தீர்வென்று கூறியதில்லை மக்கள் போராட்டமும் புரட்சிகர நடவடிக்கைகளுமே அவசியமானது அதன் ஒரு பகுதிதான் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது...

ஆயுதம்தாங்கிய போராட்டமா? மக்கள் போராட்டமா? நாடாளுமன்றவாதமா? எனும் போது இந்திய ஆளும் வர்க்கத்தை வீழ்த்த தற்போதைய சூழலில் மக்கள் போராட்டங்களையும் அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதும் அடங்கும்...

அதே வேளை புரட்சிகரமான நடவடிக்கைகளின் வளர்ச்சி போக்கில் எதிரிகளை வீழ்த்துவதற்கான ஆயுதங்கள் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

முதலாளிதுவ அரச கட்டமைப்பிற்குள் மக்களுக்கான அரசை கட்டமைப்பதே போராட்டத்தின் மிகமுக்கிய பகுதிதான் கேரளத்தில் இன்றும் மக்களுக்கான அரசாக இருந்து கொண்டு மத்திய அரசை வலுவாக எதிர்த்து போராடிவருகிறது...

தோழர் இஎம்எஸ்சின் 
நினைவை போற்றுவோம் 
ரெட்சல்யூட் சகாவே...

-க.நிருபன் சக்கரவர்த்தி 
19.03.2020

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...