Wednesday, June 9, 2021

பெருந்தொற்றுக்கு எதிரான மகத்தான சேவையில் SFI

#SFItamilnadu 

இந்திய மாணவர் சங்கத்தின் துடிப்புமிக்க தோழர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் உயிரை துட்சமென கருதி கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு எதிராக மிக்கடுமையான பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் #SFI மாவட்டச்செயலாளர் தோழர் ஜாய்சனை நேரடியாக கைபேசியில் அழைத்து கோவிட் பெரும் தொற்றுக்கெதிரான பணியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களோடு களப்பணியில் ஈடுபட அழைத்த நாள் முதல் இன்று வரை அம்மாவட்டத்தில் முப்பது நாட்களாக கிட்டதட்ட 35 தோழர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் பணியை மருத்துவமனையின் டீன் உச்சிமுகர்ந்து பாராட்டியது அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது. மேலும் பத்திற்க்கு மேற்பட்ட தோழர்கள் மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலும் மாணவிகள் என்பது குறிப்பிட தக்கதாகும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் அரவிந்தசாமி தலைமையில் 15 தோழர்கள் கடந்த இருபது நாட்களாக #CPIM அலுவலகத்தில் தங்கியிருந்து தஞ்சை மண்டலத்தின் மைய மருத்துவமனையாக இருந்து வரும் பொது மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார்கள்.

கடலூர் அரசு மருத்துவமனையில் தோழர்கள் செம்மலர் மற்றும் குமரவேல் உள்ளிட்ட 15 தோழர்கள் மருத்துவமனையிலும், கிராமபுறங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக களப்பணியாற்றி வருகிறார்கள். 

விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் தோழர் மாடசாமி தலைமையில் தொடர்ச்சியாக 8 தோழர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த மே 24ம் தேதிமுதல் தோழர் ஜெ.த.வசந்த் தலைமையில் 6 தோழர்கள் மருத்துவமனையின் டீன் கேட்டு கொண்டதற்கிணங்க மருத்துவமனைக்குள் உதவிமையம் அமைத்து இன்று வரை பணியாற்றி வருகிறார்கள்.

திருப்பூர் அவினாசி அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு முகாமை தோழர் மணிகண்டன் தலைமையில் 10 தோழர்கள் சுழற்சிமுறையில் கண்கானித்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தோழர் தமிழ்பாரதி உள்ளிட்ட தோழர்கள் உதவி தேவைப்படும் நேரங்களில் உடனடியாக சென்று தேவைப்படும் உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

அதே போல் மதுரை, திருச்சி, நாகை, நாமக்கல், சேலம் போன்ற இன்னும் பல மாவட்டங்களில் நமது #SFI தோழர்கள்  உணவு கொடுப்பது, மூலிகை கசாயம், கொரோனா தகவல் மற்றும் உதவிமையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகம்முழுவதும் பல்வேறு இடங்களில் #DYFI அமைப்போடு இணைந்தும் பல்வேறு களப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். 

மருத்துவமனை பணிகளை குறிப்பிட்டு எழுதும் நோக்கில் இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதில் சில தகவல்கள் விடுபட்டிருக்கலாம். தமிழகத்தின் அனைத்து நெருக்கடியான பகுதிகளிலும் நமது #SFI தோழர்களின் உணர்வுபூர்மான தன்னார்வபணி இருந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது முதல் கொரோனா பரிசோதனை, மருத்துவர் அறை, கோவிட் வார்டு, உணவு வழங்குதல், மருந்து வழங்குதல், கணிப்பொறி, எழுத்துபணி, கூட்டத்தை கட்டுபடுத்துதல், துப்புரவு மற்றும் உடற்கூறு அறைக்கு வெளியிலிருந்து இறந்தவர்களின் உடலை பெறுகின்ற இடம் வரை நமது தோழர்கள் பணியிருந்துள்ளது.

#COVID19 #CoronavirusPandemic #covid

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...