உக்ரைன் மீதான ஓநாய்களின் கவலை
ஆடு நனையிதேனு ஓநாய் கவலைபட்ட கதையாக ஜோபைடனும், போரிஸ் ஜான்சனும் தனது நீலிக்கண்ணீரை உதிர்த்து வருகிறார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக இரஷ்யாவின் எல்லாவிதமான பொருமையையும் காலில்போட்டு மிதித்த நோட்டோவும், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய கூட்டணியும் சாத்தான் வேதம் ஓதிய கதையாக அமைதி, சமாதானம் குறித்து வார்த்தைகளை உதிர்த்து வருகிறது.
உலக ரெளடி வாய்சொல் வீரர்கள் தங்கள் அடாவடித்தனத்தின் நவதுவாரங்களை மூடிக்கொண்டு சமாதான கொடியை தற்போது பறக்கவிடுவது உள்ளபடியே இரத்தம்குடிக்கும் ஓநாய்களின் அகிம்சை பிரசங்கமாகவே இருக்கிறது. நமது நண்பர்கள் போர் வேண்டாம் என்பதற்கும் இந்த இரத்த காட்டேரிகளின் போர்க்கு எதிரான ஓலத்திற்க்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் உள்ளது.
ஆனால் ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறுபுழுவாயினும் குச்சியால் சீண்டும் போது அதுவும் சிறு எதிர்பாய் துள்ளும் என்பதே போன்றே இரஷ்யா போன்ற யானையை அங்குசத்தால் கண்ணில் குத்தினால் அது என்ன செய்யுமோ அதுவே தற்போதைய நடவடிக்கை. ஓநாய் ஒரு மானை வேட்டையாடும் போது சில நேரங்களில் உந்தி தள்ளியோ தனது கால்களால் முகத்தில் உதைத்தோ சில நேரங்களில் மான் தப்பிப்பதை போல் தான் உலக மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து தன்னைவிடுவிக்க இரஷ்யா முயன்றுள்ளது. என்ன நேட்டோ ஓநாய்கள் இரஷ்யாவை மானாக கருதியிருக்க கூடாது. இரண்டாம் உலகப்போரில் உலக மக்களை காக்க மகத்தான செம்படை வீரர்கள் இரண்டு கோடி பேர் உயர் தியாகம் செய்த நாடு என்பதை மறந்திருக்க கூடும்.
வியட்நாம், ஆப்கான், ஈராக், ஈரான், லிபியா, ஆப்ரிக்க, லத்தின் நாடுகளை அமெரிக்க நேட்டோ கும்பல் வேட்டையாடிய போதும் நம் நண்பர்களால் போர் அமைதி குறித்து பிரசங்கம் செய்யதான் முடிந்தது ஒருவேளை நமது கையில் திருப்பி தாக்குவதற்கான ஆயுதம் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்பதாக புரிந்து கொண்டால் இன்றைய பிரச்சினைகளை நாம் சரியாக அனுக முடியும்.
உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் பரவலை தடுக்கவும், சோவியத் விரிவாக்கத்தை தடுக்கவும் ஏற்படுத்தபட்ட இரத்தவெறி ஓநாய்களின் கூட்டணிதான் நேட்டோ கூட்டணி. 1991 ஆம் ஆண்டே சோவியத் சிதைவு, சோசலிச பின்னடைவுக்கு பின் இந்த கூட்டணியை தார்மீகமாக கலைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதை கலைக்காமல் உலக ஏழைநாடுகளை கபளீகரம் செய்து வருகிறது.
மேலும் தற்போது இரஷ்யாவில் இருப்பது ஒரு முதலாளித்துவ ஆட்சி. புடின் ஒரு வலதுசாரி, உலக முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான போட்டி மோதலில் தான் இத்தகைய விளைவுகள் அரங்கேறி வருகிறது. ஆனால் உலகின் US, UK, ஆஸ்திரேலியா போன்ற மோனோபோலி ஒருதுருவ முதலாளிதுவ அரசியலுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையை நாம் கவனமாக கவனிக்க வேண்டும்.
லிபியா, ஈரான், ஈராக், ஆப்கான் போன்ற எத்தனையோ அரசுகள் இடதுசாரி அரசல்ல, அவர்கள் தங்கள் நாடளவில் ஒரு முதலாளிதுவ அரசாகவோ அல்லது ஓரளவு ஜனநாயக அரசாகவே இருந்து வந்தது. பிறகு ஏன் இந்த நேட்டோ கூட்டணி அங்கு படைகளை அனுப்பி சூரையாடியது. அதுதான் முதலாளித்துவத்தின் சாபக்கேடு ஒரு சந்தையில் நான்மட்டுமே ஏகத்துவ வியாபாரியாக இருக்க வேண்டும் என்ற நியதியை முதலாளித்துவ கட்டமைப்பு உந்தி தள்ளிக்கொண்டே இருக்கும். அல்லது சந்தையில் ஏற்கனவே உள்ள பெரும் வியாபார முதலாளிகள் சிறுகுறு விற்பனையாளர்களுக்கு எதிராக கொண்டிருக்கும் கூட்டணியே இந்த மேற்குலக கூட்டணி. எண்ணெய் வியாபரத்தில் கொழிக்கும் இலாபத்திற்காக நாவில் எச்சில் ஊர கைபற்ற வந்ததே அத்தகைய தாக்குதல்கள்.
இரஸ்யா, சீனா போன்ற நாடுகள் முதலாளித்துவ போட்டியில் கோலோச்சுவது பழைய முதலாளித்துவ நாடுகளுக்கு உள்ளபடியே எரிச்சலை ஏற்படுத்த செய்யும். எனவேதான் இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான பல உள்குத்து வேலைகளை மேற்கத்திய கூட்டணி படுகேவலமாக செய்து வருகிறது. அதற்கு ஆதரவான நாடுகளை தொம்சம் செய்து சிதைத்து வருகிறது. நியாயமான இலாபம் என்ற ஒன்று எப்படி கிடையாதோ அதேபோலவே முதலாளித்துவ கட்டமைபிற்குள் முதலாளிதுவ நாடுகளுக்குள் நியாயமான கூட்டணி ஒன்று இருக்கவே முடியாது. தங்கள் அளவில் கொள்ளையடித்து சுரண்டி கொழுக்க வேண்டும் என்பதே ஒரே நியதி. மான்களை வேட்டையாட ஓநாய்களும், கழுதைபுலியும் செய்துகொள்ளும் ஒப்பந்தமே நேட்டோ, ஜி7 போன்ற கூட்டணி.
உக்ரைனில் நடப்பது ஒரு காமெடி நடிகர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கியின் இனவாத நேட்டோ ஆதரவு அரசு, மேற்கத்திய நாடுகளோடு உக்ரைன் இணையக்கூடாது இரஷ்யாவோடு நட்புறவு பேண வேண்டும் என அந்நாடுமுழுவதும் குரல் எழுப்பபட்டாலும். கிழக்கு (டான்பாஸ்) பகுதியில் வலுவான போராட்டங்களும் நடந்து வந்தது. போராடுபவர்களை இராணுவத்தை கொண்டு கடுமையாக ஒடுக்கியதோடல்லாமல் 16,000 இரஷ்ய இனத்தவரை படுகொலை செய்துள்ளது. இதற்கு மேலும் ஆதரவாக மேற்கத்திய நேட்டோ கூட்டணி அபாயகரமான ஆயுதங்களோடு உக்ரைனில் இறங்கியுள்ளது எந்தவகையில் நியாயமாகும். நாளை இதேபோல் நேட்டோ ரெளடிகள் ஐம்பாதாயிரம் துருப்புகளை பங்களாதேசில் இறக்கினால் நாம் என்ன செய்வமோ அதைதான் தற்போது இரஷ்யா செய்து வருகிறது.
மேலும் பேச்சுவார்த்தைகான எல்லா முகாந்திரத்தையும் படுகேவலாகம காலில் போட்டு மிதித்துவிட்டு பதில்நடவடிக்கையின் போது கோரஸ்பாடுவது சரியல்ல காரணங்களை கலைவதே விளைவுகளை தடுக்க முடியும்.
இராணுவ தளவாட தாக்குதல் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் அப்பாவி மக்கள் இதில் பாதிக்கப்படுவதை ஏற்க்க முடியாது எனவே, அமைதி நிலவ வேண்டும். அட்டைகத்தி மாவீரர்கள் ஜோபைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்கள் பிரச்சனையில் எண்ணெய் ஊற்றாமல் அவர்கள் செய்தது தவறென ஒப்புக்கொண்டு இரஷ்யாவோடு அமைதி பேச்சு நடத்த வேண்டும்.
பன்னாட்டு ஊடகம் நேட்டோ, அமெரிக்க எலும்புதுண்டுகளுக்காக ஒரு சார்பு செய்திகளை வாசிக்கலாம் நியாயமான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மூன்றாம் உலகப்போர் என உதார்விடாமல் உண்மை நிலையை கொண்டு சேர்க்க வேண்டும்.
க.நிருபன் சக்கரவர்த்தி
#peace #RussiaUkraine #NATO #usa #russia #RussiaUkraineConflict #ukraine
No comments:
Post a Comment