தேசதுரோகி என சங்கிகளால் அவமானப்படுத்தபட்ட வினேஷ் போகாத் நமது தேசத்திற்காக வரலாறு படைத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனை கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற, தோல்வியே கண்டிராத ஜப்பான் நாட்டின் யுஷுசாங்கியை காலியிறுதிக்கு முந்திய சுற்று போட்டியில் வினேஷ் போகாத் தோற்கடித்ததும் உலகின் அனைத்து ஊடகங்களும் வினேஷ் போகாத் பக்கம் திரும்பியுள்ளது. கடுமையான பயிற்சியும், உடல் வலிமையும் கொண்ட யூ ஷுசாங்கி எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்று தான் அனைவரும் அசட்டையாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் வினேஷ் போகாத்தின் விடாப்பிடியான உறுதியான போராட்டத்தை பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
ஒலிம்பிக் மல்யுத்த வர்ணனையாளரே ஒரு கட்டத்தில் "அவர் தன் தேசத்திற்காக உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவமானங்களை மட்டுமே சந்தித்த ஒரு பெண் தன் தேசத்திற்காக இந்த அளவிற்கு போராட முடியுமா?? உண்மையில் வினே போகாத் வரலாறு படைத்து வருகிறார்'' என்று பேசியதும் பாரிஸ் ஒலிம்பிக் 2024ன் தலைப்பு செய்தியாகியுள்ளார்.
இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி பதக்க பட்டியலில் 60ஆவது இடத்தில் உள்ளது. தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. நேற்று நடைபெற்ற அரையிறுதியில் வினேஷ், கியூப நாட்டு வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலமாக இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை படைத்துள்ளார். இதுவரையில் ஒலிம்பிக் ஒரு பதக்கம் கூட கைப்பற்றாத போகத்திற்கு இந்தப் போட்டி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறினார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் காலிறுதி போட்டியோடு வெளியேறினார். தற்போது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த தற்போதைய பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார்.
மல்யுத்த போட்டிக்கு வரும் வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் அத்துமீறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்து வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் ஒன்றிய அரசோ, காவல்துறையோ எடுக்காததால் வினேஷ் போகாத் போராட்டத்தை தீவிர படுத்தினார். ஒரு கட்டத்தில் தாம் வாங்கிய ஆசிய, காமன்வெல்த் பதக்கங்களை கங்கை ஆற்றில் கரைக்கும் அளவுக்கு சென்றார். டெல்லியின் வீதியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் தகவலறிந்து கண்ணீர் மல்க "வேண்டாம் மகளே அப்படி செய்துவிடாதே நாங்கள் இருக்கிறோம்" என கூறியதும் கட்டியனைத்து அழுது கொண்டே அவர்கள் வசம் பதக்கங்களை கொடுத்தார் போகத்.
அதே போல கடந்தாண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு நிகழ்வின் போது போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையாலும் இராணுவ பாதுகாப்பு படைகளாலும் கடுமையாக அத்துமீறி கைது செய்யப்பட்ட போது வினேஷின் வலது கால் காயமுற்று கடுமையாக பாதிக்கப்பட்டது அதனையும் மீறி இன்று வென்றுள்ளார்.
எனவே தான், தங்க மகன் நீரஜ் சோப்ரா ''இவ்வளவு அவமானங்கள், வலிகளுக்கு பிறகும் வினேஷ் போகாத் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அவர் செய்த பயிற்சியை விட தேசத்தின் மீது அவர் வைத்த நம்பிக்கையும், மனவலிமையுமே காரணம்'' என்று பொருத்தமாக கூறினார்.
இன்று போகத் பெற்றிருக்கும் வெற்றி சங்கிகளின் மீது விழுந்த செருப்படியாகும்...
-க.நிருபன் சக்கரவர்த்தி
Niruban Ganesan post
#Paris2024Olympic #gold #SportsUpdate #VineshPhogat #wrestling
No comments:
Post a Comment