International Working Women's day
உலக உழைக்கும் மகளிர் தினம்.
உலக தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக இந்த மகளிர் தினம் உள்ளது. இரத்தம் தொய்ந்த நமது போராட்ட வரலாற்றை நினைவு கூறும் தினம்.
மேதினம், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களை கொச்சைபடுத்துவது போலவே உலக மகளிர் தினத்தையும், திரைப்படம், கோலப்போட்டி, மியூசிக்சேர், சமையல் போட்டி, கலர்கலரான சேலை விளம்பரம், தள்ளுபடி, பிங் கலர் ஸ்கூட்டி ஆஃபர்... என இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூகம் கொச்சைபடுத்துகிறது.
எழுத்தறிவு பெற்ற தலைமுறையினராகிய நாம் மார்ச் 8 வரலாற்றை நம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. குறிப்பாக முதலாளித்துவ ஊடக தற்குறிகளுக்கு நாம் கண்டிபாக சொல்ல வேண்டியுள்ளது.
நமது துவக்க காலத்தில் ரோசா லக்ஸம்பர்க், கிளாரா ஜெட்கின், அலெக்சாண்டரா கொலண்டாய் வர்க்க போராட்ட வரலாற்றை இவர்களுக்கு சொல்லியாக வேண்டும். ஓட்டுரிமை, சொத்துரிமை, மகப்பேறு மீது முடிவெடுக்கும் உரிமை, பேறு கால விடுமுறை, ஆண் பெண் சம ஊதியம் என முதலாளித்துவ நாடுகளுக்கு எடுத்துகாட்டாய் விளங்கிய சோசலிச நாடுகளை பற்றி பேச வேண்டும்.
இந்திய சமூகத்தில் காலனியாதிக அடிமை தளையை தகர்ப்பதற்காகவும், நவீன முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தை எதிர்த்த நமது போராட்டத்தையும், ஆணாதிக்க சாதிய கொடுமைகளுக்கு எதிராய் நாம் நடத்திய போராட்டத்தையும் பெருமையோடு கொண்டாட வேண்டிய தினம்.
மேலும் நாம் அடைய வேண்டிய சோஷலிச சமூக லட்சியத்திற்கான வரலாற்று கடமையை முடிப்பதற்கான தெம்பை உரமேற்றிக் கொள்வதற்கான நாள்.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, கல்வி வாளாகங்களில் குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவிகள், ஆசிரியைகள் வரை அவர்கள் மீது இழைக்கப்படும் பாலியல் அத்து மீறல்களுக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் வேகமாக முன்னெடுக்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் பாலின பாகுபாடின்றி கிடைக்க செய்வது, 8 மணி நேர வேலையை அனைத்து துறைகளிலும் உறுதிபடுத்துவது, திருமணம் குழந்தை பேறு உள்ளிட்டவைகளை பெண்களே முடிவெடுத்துக் கொள்ளும் உரிமை.. என பல்வேறு உரிமைகளை போராட்டங்களை முன்னெடுப்போம்...
இன்கிலாப் ஜிந்தாபாத், மகளிர் உரிமை ஜிந்தாபாத், வெல்லட்டும் வெல்லட்டும் மகளிர் தினம் வெல்லட்டும், மார்ச் 8 கோரிக்கைகள் வெல்லட்டும்.
#womensday #workingwomen #internationalwomensday #march8
No comments:
Post a Comment