Friday, March 18, 2022

இலங்கை நெருக்கடி

நமது அண்டை நாடான இலங்கை பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மக்கள் கடுங்கோபத்தில் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். கொழும்பில் பழைய பாராளுமன்றத்தின் முன் மக்கள் கூடி முழக்கமிட்டு வருகிறார்கள். சில கடைகள் சூறையாடப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் வெறுப்பும் பசியும் படர்ந்துகிடக்கிறது.
டாலரின் மதிப்பு இலங்கை நாணயத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் கோதுமை, உற்பத்தி பொருட்கள், வாகனங்கள் மற்றும் இன்னும் பல பொருட்கள் நாட்டில் மக்கள் பெற்றுக் கொள்ள முடியா வண்ணம் மிகக்கடுமையாக அதிகரித்துள்ளது. 

சாதாரண ஒரு கிலோ அரசியின் விலை நிர்ணயம் பத்து  பதினைந்து ரூபாய் அதிகரித்திருந்தால் கூட சமாளித்திருப்பார்கள். ஆனால் ஆயிரம் ரூபாய் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த அத்யாவசிய பொருட்களும் கிடைக்காமல் திணறுகின்றனர்.
தினமும் மின்சாரம் 7மணி நேரம் அதற்கு மேலும் நிறுத்தப்படுகிறது. இப்படியான நிலைகளை தாண்டி சீனாவுடன் கைகோர்த்து பல கடன்களை வாங்கி குவித்துள்ளது, பல இடங்களை விற்று நாட்டின் கடன்கள் தீரவில்லை. சீனாவை திட்டிய நமது ஊடகங்கள் எதுவும் அந்நாட்டின் மிக மோசமான இனவாத மதவாத அரசியலை வலதுசாரி திட்டமிடலை கண்டிக்கவில்லை. 

கொரோனா காலத்தில் இலங்கை அரசுக்கு பல நாடுகளிலிருந்தும், உலக சுகாதார ஒன்றியத்தில்லிருந்தும் கோடிக்கணக்கான பில்லியன் டாலர்கள் உதவி செய்யப்பட்டிருந்தது. எதையும் உருப்படியாக செலவழிக்கவில்லை. கடனுக்கு மேல் கடன்.
நாட்டின் கடனை போக்க மக்களின் தங்க நகைகளையும் தந்து உதவலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கருவூலத்தில் எப்போதோ கைவைத்தாயிற்று. மக்களின் மீது கண்மூடித்தனமான வரி மட்டுமே இவர்களுக்கான தீர்வாக வைத்துள்ளார்கள். 

ஏன் இராஜபக்சே மற்றும் சிலோன் ஆளும் வர்க்க கும்பலின் சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்கள் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் வங்கிகளில் இருக்கும் கோடிக்கணக்கான பணம், 
சொகுசு கார்கள் , மனைவிகளின், பிள்ளைகளின் நகைகள், உறவினர்களின் வியாபரத்தில் இவற்றையெல்லாம் விற்று நாட்டின் கடனை அடைத்து மக்களை காப்பாற்ற செய்யலாம். அரசியல் கொள்கையில் இனவாதத்தில் மதவாதத்தில் இராஜபக்சே நம்ம மோடிஜீயின் அடிபொடி. அத்தகையோரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 
பணக்காரர்கள்மீது சொத்துவரி பதுக்கல் மற்றும் இலங்கை மக்களின் அடிப்படை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பலிடம் வரியை போட்டு வசிலிக்கலாம். கைபற்றலாம் அவ்வாறு செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும்.

ஆனால் இவை தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்களின் அன்றாட வாழ்வில் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் விலையேற்றி விட்டு இலங்கை அரசு மக்கள் அடித்து கொண்டு சாகட்டும் என விட்டுள்ளது .

''அத்தியவசியமற்ற புனரமைப்பு வேலைகள், மத்தள விமான நிலையம், மக்கள் பயன்பாட்டில் இல்லாத பலாலி விமான நிலையம் மட்டுமன்றி இன்னும் எத்தனை செய்ற்திட்டங்கள். எதுவும் வளர்ச்சிகாக இல்லை திட்டமிடலில் மிகப்பெரிய கோளாரை அரசு செய்துள்ளது'' என இலங்கை செய்தி கூறுகிறது.

 உண்மையான ஜனநாயக வழி திட்டமிடலே அந்நாட்டை காப்பாற்ற இயலும். அதற்கு அப்படியான அரசு அமைய வேண்டும். இந்தியா கொடுத்துள்ள 7,500 கோடி உதவி பாராட்டதக்கதுதான். ஆனால் அதையும் இந்த இராஜபக்சே கும்பல் விழுங்கி ஏப்பமிட்டுவிடும்.

#இலங்கை #SriLanka #crisis
 #rajapaksa #india #China

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...